தமிழால் தமிழர்களை வீழ்த்திய ராமசாமி கலாச்சார அழிப்பின் விஷ விதை

தமிழகத்தில் சமீபத்திய ஆண்டுகளில், ஒருவிதமான உறுமல் கேட்கத் தொடங்கியுள்ளது. தமிழர்களை காத்தவர் ஈரோடு ராமசாமி, தமிழர்களுக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்தவர் என்று கூக்குரல் போடத் தொடங்கிவிட்டனர். பெண்ணுரிமை மீட்பு, தமிழ் வளர்ச்சி என்று நிறைய விஷயங்களுக்கு இந்த ராமசாமிதான் முன்னோடி என்று போலியான விளம்பரங்கள் வேறு.
ஆனால், ஈரோடு ராமசாமியின் வரலாற்றின் இன்னொரு பக்கத்தைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினால், அவர் ஒரு கில்லாடி. விளம்பர விரும்பி. இன்னும் சொல்லப்போனால், தமிழை வளர்க்கிறேன் என்று சொல்லி, தமிழர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் இன்றைய தலைமுறையினர் அறிய முடியாமல் அழித்தொழித்த, மகாபுத்திசாலி. தமிழர் வரலாற்றை ராமசாமியைவிட, வேறு யாராலும் திறம்பட அழித்திருக்க முடியாது.

 ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி

ஐரோப்பிய நாடுகள் கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக கூறிக் கொண்டிருந்தாலும், தங்களுக்குள் அடித்துக் கொள்வதில் வஞ்சம் இல்லாமல், யுத்தம் செய்தனர். இதில், கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு மதப்பிரிவும், தன்னை உயர்த்திக் காண்பிக்க வேண்டும் என்று மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டன. பெரும் அளவிலான மதப்பிரச்சாரத்தை முன்னெடுத்து, ஒரு நிலப்பகுதியை ஆக்கிரமித்தால், அந்த நிலம் குறிப்பிட்ட மதப்பிரிவுக்கு உட்பட ஒரு நிலமாக இருக்கும். இப்போதைக்கு கேரளாவின் கிறிஸ்தவ மதப்பிரிவுகளும், நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி கிறிஸ்தவ மதப்பிரிவுகளும் இதில் அடக்கம். இப்படியொரு மதப்பிரிவான யேசுசபையின் மதப் பிரச்சாரத்துக்கு கி.பி.1710ல் தமிழகம் வந்தார். அன்றைய காலகட்டத்தில் தமிழ் மொழியின் தொன்மையும், பழமையும் அறிந்தவர்கள் சிலரே. அதிலும் நவாப்களின் முஸ்லிம் ஆட்சியில், தமிழ் வளர்ச்சியே இல்லை. மொழிகள் அழிக்கப்பட்ட காலத்தில், கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கு தமிழை கையில் எடுத்தார் ஜோசப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி. தமிழகத்தில் துறவிகளுக்கு அதிக மரியாதை இருப்பதை அறிந்து, காவி உடை தரித்து, தன் பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக் கொண்டார். இந்த வகையில் தமிழை செம்மைப்படுத்துவதால், தமிழகத்தில் கிறிஸ்தவத்தை கொண்டு செல்ல முடியும் என்று உணர்ந்து, செய்யுள், பாடல் வடிவத் தமிழை, கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து உரை நடை தமிழாக்கினார். ஆனால், இவர் தமிழுக்கு பல சேவைகள் செய்தாலும், பரமார்த்த குரு கதைதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல், தன் மத வன்மத்தைக் காண்பித்திருப்பார். பீர்பால் – அக்பர் புனைக்கதைகள் போல் அல்லாமல், பரமார்த்த குரு கதைகள், இந்து மதத்தில் குரு– சீடர் உறவு முறையில், அவர்களது எவ்வளவு முட்டாள்களாக செயல்பட்டனர் என்பதுபோல் திரிக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் தமிழை சிதைக்காமல், தமிழால் தமிழர்களின் இந்து மதத்தை தாக்கி மகிழ்ந்தவர் ஜோசப் பெஸ்கிதான். என்ன செய்வது, அவருக்கு கொடுக்கப்பட்ட யேசு சபையின் செயல்திட்டம் அது. அதைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார்.

கால்டுவெல் திரித்த வரலாறு

அயர்லாந்தில் பிறந்து, தீவிர கிறிஸ்தவப் பற்றுடன் வளர்ந்த ராபர்ட் கால்டுவெல், இந்தியாவுக்கு சேவை செய்வதற்காக வரவில்லை. தீவிர இந்து தேசமாக இருந்த இந்தியாவை மதம் மாற்றி, கிறிஸ்தவமாக்கிடவே இங்கு வந்தார். எந்த ஒரு இடத்திலும் அவர் தன்னை ஒரு தமிழ் மொழி விரும்பியாக காண்பிக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மொழியைப் பரப்புவதற்கு அவருக்கு ஒரு தொடர்பு மொழி தேவைப்பட்டதால், அவர் தமிழை கற்கத் தொடங்கினார்.
கால்டுவெல் காலத்தில் இருந்த தமிழ் நடைமுறை எழுத்துக்களே வேறு. பெரும்பாலும் திண்ணைப் பள்ளி என்ற கல்வி முறையில், தமிழ் இலக்கணத்துடன் பயிற்றுவிக்கப்பட்டது. ஒரு மொழியை முழுமையாக கற்க முடியாமல், தன் கிறிஸ்தவ மதத்தை தமிழகத்தில் அதாவது மெட்ராஸ் மாகாணத்தில் பரப்பிட முடியாது என்பது கால்டுவெல் கண்ட உண்மையாகும். எனவேதான், தமிழின் அரிச்சுவடியை தேடித்தேடிப் படித்தார்.
தமிழ் கற்ற ராபர்ட் கால்டுவெல், அப்படியே தெலுங்கு, மலையாளம் என்று சிறிது கற்றுக் கொண்டார். இதைக் கொண்டுதான் அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற, ஒப்பீட்டு நுால் எழுதினார். தவிர, மொழியை வளர்க்கவே அல்ல. கால்டுவெல், கற்ற சுவடிகளில் இருந்த தமிழ் மொழியின் ரகசியம், அவரோடே புதைந்துபோனது. நிச்சயமாக, ஒரு விஷயத்தைச் சொல்லலாம்.
கால்டுவெல், தன் மதப்பற்றுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மொழியை முழுமையாக நேசிக்கத் தொடங்கியிருந்தால், அவர் கற்ற தமிழுக்கு, தமிழின் முழுமையான எழுத்துவடிங்களை முன்நிறுத்தி, தமிழின் ரகசியங்களை அப்படியே வடித்திருக்கலாம். ஆனால், அவர் அதை செய்யவில்லை. காரணம், அப்படி அவர் செய்ய முனைந்திரு்நதால், அவர் கிறிஸ்தவத்தைவிட்டு, இந்து மதத்தை தழுவியிருப்பார். தமிழகத்தில் கிறிஸ்தவம் என்ற ஒரு அடையாளம் விதைக்கப்பட்டிருக்காது.

தமிழின் ரகசியங்கள் அழிக்கப்பட்டன

இந்த 2 பாதிரியார்களும் தமிழ் மொழியை கற்கும் ஆர்வத்தில், தமிழின் பல வானியல், கணித மற்றும் மருத்துவ ரகசியங்களையும் கற்றுக் கொண்டனர். ஆனால், மிக நுட்பமாக தமிழ் மொழியைக் கொண்டு கிறிஸ்தவத்தை வளர்த்தனர் என்பது மட்டுமே உண்மை. அதேநேரத்தில், தமிழின் எழுத்து வடிவத்தில் எந்த ஒரு மாற்றங்களையும் இவர்கள் செய்யவில்லை. இதன்பின்னர், 1920க்கு பிந்தைய காலகட்டங்களில், தமிழ் எழுத்துக்களில் மாற்றம் வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது. அன்றைய காலகட்டத்தில், அச்சு இயந்திரங்கள் அறிமுகமான நிலையில், அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப, தமிழ் எழுத்துக்கள் வடிவம் பெற வேண்டும் என்று பலரும் நினைத்தனர். 1930களில் காரைக்குடியில் இருந்து பதிக்கப்பட்ட குமரன் என்ற இதழின் ஆசிரியர் குமரப்பா, இதுகுறித்து சில விஷயங்களை முன்மொழிந்தார். ஆனால், எழுத்து வடிவங்களில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்று பலரும் பேசிய காலகட்டத்தில், அதை தனது விடுதலை இதழில் பதிப்பித்து, வழிகாட்டியவர் ஈரோடு ராசாமிதான். இந்த வகையில் பலரும் தயங்கிய ஒரு விஷயத்தை, தொடங்கி வைத்தார்.
பலரும் தயங்கிய விஷயம் என்னவென்றால், மொழியின் வடிவத்தை மாற்றினால், எதிர்கால சந்ததியினருக்கு தமிழகத்தின் வரலாறு, தொன்மை உட்பட எதுவும் தெரியாமல் போய்விடும் என்ற அச்சம்தான். ஆனால் தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று விமர்சித்த ஈரோடு ராமசாமி, காட்டு மிராண்டி மொழியை அழிப்பதாக நினைத்து, எழுத்துகளில் மாற்றம் கொண்டு வந்தார். இதுதான் தமிழ்மொழியின் தொன்மையை அழிப்பதற்கு விதைக்கப்பட்ட விஷ விதை எனலாம். ஒரு பொய்யை 10 முறை சொன்னால் உண்மை என்று நம்பும் தமிழர்கள் மத்தியில், ஆயிரம் முறை ஒரு மாற்ற வடிவத்தைத் திணித்தால் என்னவாகும்?
ராமசாமி எதிர்பார்த்தது மெல்லவே நடந்தது. இதன்பின், 1978ல் எம்ஜி.ராமச்சந்திரன் ஆட்சிக் காலத்தில் எழுத்து சீர்திருத்தம், அதிகாரப்பூர்வமாக அரசால் ஏற்பட்டு, நடைமுறைக்கு வந்தது. ‘‘தமிழ் ஆட்சிமொழியாக இல்லாத சூழலில், மொழியைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்’’ என்று அப்போதைய தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். அதாவது தமிழால் ஆட்சிக்கு வந்த அண்ணாதுரையும், அவருக்கு பின்வந்த கருணாநிதியும், தமிழை ஆட்சி மொழியாக்கவில்லை.
ஆனால், எம்ஜி ராமச்சந்திரன், தான் திராவிடத்தின் வழிவந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில், ஈரோடு ராமசமியின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இந்த வகையில், இப்போதுள்ள 40 பிளஸ் வயதில் உள்ளவர்களில் ஒருவருக்கும், அதற்கு முந்தைய தமிழ் எழுத்துகளின் வடிவங்கள் தெரியவே தெரியாது எனலாம்.
இதுதான் தமிழர்களின் பரிதாபம்

இந்தியாவை ஆட்சி செய்த அரேபியர்கள் மற்றும் மொகலாயர்கள் தங்கள் மொழி மற்றும் மதத்தை காப்பதில் அப்படியொரு வேகத்துடன் இருந்தனர். வாள் முனையில் இஸ்லாமை வளர்த்த அதே நேரத்தில், மதம் மாறியவர்களுக்கு உருது மொழியில் உள்ள தங்கள் குரானை கற்பிக்கத் தொடங்கினர். குரானின் தமிழ் வடிவம் என்பது இப்போது வந்ததுதான். ஆனால், பல மசூதிகளில் உள்ள பாடசாலைகளில், இப்போதும் இஸ்லாமிய சிறுவர்களுக்கு குரான் அதன் அரபு வடிவத்தில் கற்பிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.
அதேபோல், 300 ஆண்டுகள் இந்தியாவில் சுற்றிக் கொண்டிருந்த ஆங்கிலம், பல மேம்பட்ட வடிவங்களை உள்ளடக்கி, லட்சக் கணக்கான நுால்களை தன்னகத்தே கொண்டு வந்தது. அதாவது, ஆங்கிலத்தின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், அதன் வரலாறு 600 ஆண்டுகளுக்கு உட்பட்டுதான் உள்ளது. அதிலும் ஒரு தனித்துவமான மொழியே அல்ல.
ஆங்கில மொழியின் வரலாற்றை எடுத்துப் படித்தால், அது தனக்கென ஒரு அடையாளம் இல்லாமல் இருக்கும். அதாவது அது இந்திய – ஐரோப்பிய மொழிகளின் கலவையால் பிறந்த ஒருமொழியாகும். அதில் ஜெர்மன், லத்தீன், வெஸ்ட் ஜெர்மனிக், ஆங்கிலோ பிரிசியான், ஆங்லிக் என்ற பல மொழிகளின் கூட்டுக் கலவையான மொழியாகவே இருக்கிறது.
அதிலும், பழைய ஆங்கிலம், மத்திய காலத்து ஆங்கிலம் மற்றும் நடைமுறை ஆங்கிலம் என்று காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளது. உலக மக்கள் தொகையில், அதிகபட்சம் 50 கோடி பேர் மட்டுமே ஆங்கிலம் பேசுகின்றனர் என்பது கசப்பான உண்மை. ஆனால், அதுதான், உலகளாவிய மொழியாக இருக்கிறது. ஷேக்பியரை படிக்கணும் என்ற சொல்லாடல், தமிழ் சினிமாக்களில் பிரபலம்.
காரணம், அவர்களுக்கு தமிழின் தொன்மை தெரியாமல் போய்விட்டது. இந்தியாவை ஆட்சி செய்த மொகலாயர்களின் உருதி, மேற்கத்திய கிறிஸ்தவர்களின் ஆங்கிலம் போல் அல்லாமல், தமிழ் தனித்தன்மையான மொழியாகும். இந்த தனித் தன்மையான மொழியை, தன் தொன்மை, வடிவம் மாறாமல் அப்படியே இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு வந்திருந்தால், தமிழர்களின் பாரம்பரியம், வாழ்வியல் நெறிகள் தெரிந்திருக்கும்.
ஆனால், எழுத்துருக்கள் மாற்றப்பட்டதால், உள்ளூர் கோயில்களில் உள்ள சில நுாற்றாண்டு தொன்மையான கல்வெட்டுகள் குறித்து படிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன், நம் பூர்வீக வீடு, சொத்துப் பத்திரங்கள் நுாற்றாண்டு பழமை கொண்டவை என்றால், அதை உங்களால் படிக்க முடியாது. இன்றைய பத்திர எழுத்தர்களில் சிலரால் மட்டுமே படிக்க முடியும். நிலைமை அப்படியுள்ளது.
தமிழகத்தில் எந்த ஒரு பகுதியில் கல்வெட்டுகள் கட்டுபிடிக்கப்பட்டாலும், அதைப் பற்றிய தகவல்களை படிப்பதற்கு கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைத் தேடி ஓட வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரின் வரலாறும் கல்வெட்டுகளுடன் மண்ணோடு மண்ணாகிவிட்டது. வரலாறு மட்டுமல்ல, பல வானியல் சாஸ்திரங்கள், இலக்கிய, இலக்கணங்கள், மருத்துவம், கணிதம் என்று அனைத்தும்தான். இந்த வகையில், தன் பூர்வீகம் பற்றி அறிய முடியாத பரிதாபத்துடன்தான் ஒவ்வொரு தமிழனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அப்போ, இப்போது தமிழ், தமிழர் என்று முழங்கிக் கொணடிருப்பது எல்லாம் என்ன? புதைக்கப்பட்ட தமிழரின் வரலாறு தெரியாமல், எஞ்சியதை கண்டு புலகாங்கிதம் அடைந்த தமிழர்களின் குரல் மட்டுமே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here