விவசாயிகள் போராட்டமும் கமலா ஹாரீசும்…!

நவம்பர் 19 ஆம் தேதி குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு யாருமே எதிர்பாராத வண்ணம் பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முடிவில் தாம் ஏற்கனவே கொண்டு வந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்திருக்கிறார்.

பலருக்கும் இது மிக பெரிய அழுத்தத்தை உண்டாக்கி விட்டு இருக்கிறது. நாம் இங்கு குறிப்பிடுவது நம் நாட்டின் சங்கதி அல்ல…..இதன் பின்னணியில் உள்ள சமாச்சாரங்களை பார்த்தால் மட்டுமே இதனை நன்றாக புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

SFJ எனும் பெயரில் இயங்கும் ஒரு இயக்கம் அதாவது சீக்ஸ் பார் ஜஸ்டிஸ் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்திருக்கிறார்கள்…. ஆனால் இதன் கூட்டங்களை பிரிட்டன் மற்றும் கனடாவில் நடந்த அந்தந்த நாடுகளில் அனுமதி வழங்கப்படுகிறது. இதனை தனது ராஜாங்க ரீதியாக எதிர் கொண்ட நம் மத்திய அரசு அங்கு இந்த கூட்டங்களை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து வண்ணம் இருக்கிறார்கள்…..

கடைசியில் இந்த இரு நாடுகளிலும் தங்களால் தங்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இதனை தடுக்க முடியாமல் சிக்கி திண்டாடி வருவதை வெளியுறவு செயலர் மட்டத்தில் கூப்பிட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.சரியாக சொன்னால் கனடாவும், பிரெட்டனும் அரசு தரப்பில் எந்த ஒரு ஆதரவு தெரிவிக்காத நிலையில் இந்த கூட்டங்கள் நடப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை கடந்த வாரத்தில் பிரிட்டன் அரசு தரப்பில் அஜித் தோவலை அழைத்து தங்களுடைய இயலாமையை நேரிடையாக தெரிவித்து இருக்கிறார்கள்.கனடா நாட்டில் வேறோர் பிரச்சினை இருக்கிறது.அங்கு உள்ள சீக்கிய வாக்கு வங்கி அவர்களின் கண்களை மறைக்கிறது. தவிர அமெரிக்க தரப்பு முக்கிய புள்ளிகள் இதன் பின்னணியில் இயங்கி வருகிறார்கள்.

அதனை தம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதை ஒப்புக் கொண்டது கனடா அரசு தரப்பில்.இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கை காட்டும் அமெரிக்க ஆளுமை கமலா ஹாரீஸ் என்கிறார்கள்.

ஒரு பக்கத்தில், அமெரிக்காவின் தற்போதைய நிழல் அதிபர் போல் செயல்படுவதாக கமலா ஹாரீஸை பற்றி மாய பிம்பம் அங்கு கட்டமைக்க பட்டிருக்கிறது.இவரை இயக்குவது ஜார்ஜ் சோரஸ் போன்ற சோரம் போன பித்துக்குளிகள் என்கிறார்கள்…. இல்லை மிஷனரிகள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

மறுமுனையில் ஜோபைடன் நிர்வாகம் இதனை ரசிக்கவில்லை…. தவிர வெள்ளை மாளிகை வட்டாரங்களில் கமலா ஹாரீஸை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்கிறார்கள் அவர்கள்.இது கிட்டத்தட்ட இரண்டு தலைமையில் இயங்கும் அரசு நிர்வாகம் போல அங்கு அமெரிக்காவில் சித்தரிக்கப்படுகிறது.அமெரிக்கர்கள் பலருக்குமே ஜோபைடன் மீதான அபிமானம் குறைந்து அவர் மீது வெறுப்பு தட்டி இருக்கிறது என கருத்து கணிப்புகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது..

இதன் பின்னணியில் கமலா ஹாரீஸ் இருப்பதாக பைடனுக்கு தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது.இந்த சமயத்தில் தான் அமெரிக்கர்கள் பலரும் அதிபர் பதவியில் முன்பு இருந்த எந்த ஒரு அதிபரும் செய்யாத செயலை ஜோபைடன் செய்து விட்டார் என குதித்து கொண்டு இருக்கிறார்கள். அவர் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் காத்திருந்து சீனா அதிபர் ஸீ ஜிங் பிங்குடன் காணொளி காட்சி வாயிலாக பேசி இருக்கிறார்.

போதாக்குறைக்கு அந்த சமயத்தில் அமெரிக்க அதிபரை, ஜிங் பிங் தமது பழைய நண்பர் என்று சொல்லியதை ஊடகங்கள் வெளியிட்டு அதிரடித்திருந்தார்கள் அங்கு.இது அமெரிக்கர்கள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி கொண்டு குட்டையை குழப்பிவிட்டார் கமலா ஹாரீஸ் என்கிறார்கள்.

இது கிட்டத்தட்ட பில் கிளிண்டன் காலத்தில் அவர் மோனிகா லெவன்ஸ்கியுடன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சமயத்தில் ஹிலாரி கிளின்டன் அரசு நிர்வாகத்தை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இயங்கியது போல் தற்போது கமலா ஹாரீஸ் நிழல் அதிபராக செயல்பட முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பின்னணியில்,….இதனை எல்லாம் நன்கு உணர்ந்த நம் மத்திய அரசு நிர்வாகம் இந்த காரியத்தை செய்து அதிரடித்திருக்கிறது என்று யூகிக்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலம், மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் என பஞ்சாப் பிரதேசம் இரண்டு நாடுகளிலும் வருகிறது.

இங்கு உள்ள சீக்கியர்கள் தனி நாடு கேட்டு நீண்ட நாட்களாக போராடி கொண்டு இருக்கிறார்கள். இவர்களை தற்போது அமெரிக்க அரசு நிர்வாகம் மறைமுகமாக ஆதரிக்கிறது. அதனையும் அவர்கள் கனடா வழியாக மற்றும் பிரிட்டனில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வழியாக நிதியுதவி செய்து ஆதரவு அளித்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த ஒரு பிரச்சினை மூலமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், மற்றும் சீனா ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்கிற ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் கோதுமையை கொண்டு தயாரிக்கப்படும் மதுபான வகைகளில் மூலமாக வரும் வருமானத்தை கொண்டே செலவு செய்து வருகின்றனர்.

சிந்து நதியின் தீரத்தில் விளையும் கோதுமை மற்றும் பாசுமதியை குறிவைத்து இயங்கும் இடைத்தரகர்கள் மூலம் இதனை சாதிக்கிறார்கள். இன்றளவும் அங்கு விளையும் கோதுமை மக்கள் பயன்பாட்டிற்கு வருவதை காட்டிலும் வேண்டும் என்றே அறுவடையான கோதுமையில் தண்ணீர் விட்டு மக்கச்செய்து அதனை இந்த மதுபான ஆலைகளுக்கு மடைமாற்றும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இது விளைபொருட்கள் மீதான அட்டூழியம் என்றால் வேறோர் சமாச்சாரத்தையும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.அது காஷ்மீர்.எப்படியும் இந்தியா அடுத்த ஆண்டு மத்தியில் காஷ்மீரை சட்ட ரீதியாக தன்னோடு முழுமையாக இணைந்து கொண்டு விடும் என உலக அறிவு ஜீவிகள் கணித்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் இந்த விவசாய போராட்டம் என்பது இந்திய நலன்களுக்கு பாதகமாக அமையும் என்று யூகித்த மத்திய அரசு தடாலடியாக அந்த மூன்று சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து,….. போராட்டம் செய்து கொண்டு இருப்பவர்களை வீட்டுக்கு போக சொல்லி விட்டது.இது ஒரு தந்திரமான விளையாட்டு.எதனை கேட்டு போராட்டம் செய்து கொண்டு இருந்தார்களோ அவற்றை தற்போது மத்திய அரசு நிறைவேற்றி விட்டது…… எதனை சொல்லி அங்கு தங்கி அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு தற்போது வேலை இல்லை.

ஆக…. கிளம்பி கலைந்து செல்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.காஷ்மீருக்காக ஒரு முனையை சத்தம் இல்லாமல் சுத்தம் செய்து இருக்கிறார்கள்.இது இங்கு நம் நாட்டில்……அமெரிக்காவை பொறுத்தவரை இங்கு இந்த விவகாரத்தில் முழு முனைப்புடன் செயலாற்றி வந்த கமலா ஹாரீஸுக்கு செக் வைத்து ஜோபைடனுக்கு ஒரு ஆசுவாசத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இது ஒரு ராஜதந்திர நடவடிக்கை. மீண்டும் பைடனின் கை ஓங்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது.இது வேலை செய்திருக்கிறதா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.இதனையெல்லாம் விடுத்து ..ஏதோ தேர்தலுக்காக தான் மத்திய அரசு நிர்வாகம் செயல்படுத்துகிறது என்பது போலான தோற்றத்தை ஏற்படுத்தி இங்கு குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். ஒரு பிரச்சனையில் இருந்து சற்றே பின்வாங்கி நீண்ட காலமாக உள்ள காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்.இப்பொழுது சொல்லுங்கள்……. சறுக்கினாரா அல்லது நாளைய சாதனைக்கான சாணக்கியதனமா… பொறுத்திருந்து பாருங்கள் சொன்னது நடக்கிறதா இல்லையா என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here