விமானம் கண்டுபிடிக்க ஆதாரம் நம் நாட்டு நூலே!

மானிட குலம் முன்பொருமுறை பெரும் ஞானத்துடன் இருந்திருக்கின்றது, பறக்கும் விமானம் முதல் இன்று காணும் பல விஷயங்கள் அவர்களுக்கு சாத்தியமாகியிருக்கலாம் என்கின்றார்கள்
அது இந்திய புராணங்களில் இருக்கின்றது, ராவணன் வரலாற்றில் இருக்கின்றது, இன்னும் பல இடங்களில் காணகிடக்கின்றது
கந்தபுராணம் உள்ளிட்ட காவியங்கள் அதை தெளிவாக சொல்கின்றது, சீவக சிந்தாமணி உள்ளிட்ட காவியங்களும் சொல்கின்றன‌
யூதரின் தோராவில் கூட ஓரிரு இடங்களில் கூட இன்றைய விமான சாயல் உண்டு.
ஆனால் அந்த கலை பின்பு சுத்தமாக அழிந்திருக்கின்றது, பெரும் அழிவு நடந்திருக்கின்றது. இதற்கு மேலும் உலகம் அழிந்த கதை ஊழிகாலம் என‌ இந்து புராணங்களிலும் , இன்னும் பல மதங்களிலும் சொல்லபட்டிருகின்றது
அதன் பின் வந்த மனிதன் எல்லாவற்றையும் புதிதாக தொடங்க வேண்டியிருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக விட்டுபோன அந்த ஞானத்தை பெற தொடங்கினான், மானிட குலம் அன்று அழிந்திருந்தாலும் அந்த பழங்கால அறிவின் பல சுவடுகள் அவனுக்கு கிடைத்தன‌
அப்படி விமானம் பற்றிய செய்தியும் கிடைத்தது, கனவும் வந்தது
ஏராளமானோர் முயற்சித்தார்கள் குறிப்பாக ஜெர்மானியர்கள் அதில் மிக முக்கிய முயற்சி செய்தும் முடியவில்லை. ஜெர்மானியர் பின்னாளில் கிறிஸ்தவர் ஆனாலும் இந்து மத ஆதார தொன்மங்களுக்கும், இந்து ரிஷிகள் சொன்ன பல விஷயங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டு
இந்திய ஞானம் மேலும் அதன் பண்டைய பிரபஞ்சத்துடன் கூடிய தத்துவம் மேலும் தீரா ஆர்வம் இருந்தது
விமான‌ சாஸ்த்ரா என்பது இந்தியாவின் பண்டை நூல், பரத்வாஜர் எனும் முனிவர் எழுதினார், எத்தனை விதவிமான விமானங்கள் உருவாக்க முடியும் என அது விவரிக்கின்றது
காற்றிலிருந்து எரிபொருள் உருவாக்கி பறக்கும் விமானம், பாதரசத்தில் இயங்கும் விமானம் இன்னும் ஏராளமான விஷயங்களை அது சொல்கின்றது. வட்டவடிவமான, கும்ப வடிவமான விஷயங்களை எல்லாம் அது சொல்கின்றது
அதனை ஆதாரமாய் வைத்துத்தான் சில ஜெர்மானியர்கள் பறக்கும் எந்திரத்தை உருவாக்கினார்கள், ஆனால் பறக்கவில்லை
இந்த கைவிடபட்ட எந்திரம் அமெர்க்காவிற்கு கொண்டு செல்லபட்டது, அதனை எப்படியோ கண்டறிந்த ரைட் சகோதரர்கள் அதனை மேம்படுத்தினர், பின் விமானம் பறந்தது
விமானம் என்பது ரைட் சகோதரர்கள் கண்டுபிடிப்பு என சொல்லபட்டாலும் முழுக்க அவர்களது அல்ல, ஜெர்மானியர் விட்ட ஆராய்ச்சியினை அவர்கள் தொடர்ந்தார்கள்
இதே டிசம்பர் 17ல்தான் முதன் முறையாக விமானம் பறந்தது, 12 வினாடித்தான் பறந்தது
அந்த 12 வினாடிதான் பின் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தபட்டு இன்று எத்தனை மணிநேரமும் பறக்கும் விஷயமாக மாறியிருக்கின்றது
விமான சாஸ்திரா எனும் நூலின் ஒரு வகையில் தயாரிக்கபட்டதுதான் இந்த ஜெர்மன் எந்த்திரம், அதில் இருந்து உருவானது ரைட் விமானம்
காற்றை முறையாக அழுத்தினால் பறக்கலாம் பரத்வாஜர் சொல்லியிருந்தார், அந்த தத்துவமேதான் விமானத்துக்கு அடிப்படையாயிற்று
ஆனால் பரத்வாஜர் காற்றினையே எரிபொருளாக அல்லது எந்திரத்தை இயக்கும் ஆதாரமூலமாக கொள்ளலாம் என சொல்லியிருந்தார் அதை உருவாக்க முடியா நிலையில்தான் எரிபொருளில் இயங்கும் எந்திரம் உருவானது
பிரிட்டானியரும் பிரான்சுக்காரரும் இந்தியாவில் தங்கம் தேடியபொழுது ஜெர்மானியனே இங்கு அறிவை தேடினான்
சமஸ்கிருதமும் தமிழும் கற்று தேடினான், தஞ்சை கோவிலை ராஜராஜன் கட்டினான் என சொன்னது அவனே
ஆதிச்சநல்லூர் நாகரீகம் பற்றி முதலில் சொன்னவன் அவனே, ஏன் தென்னக கடற்கரை தாதுமணலால் நிரம்பியது என சொன்னவன் அவனே
அந்த வழியில் வந்த ஹிட்லர் இந்திய ஞானங்களை பெருமளவு திரட்டினான், விமான சாஸ்திரா போன்ற புத்தகத்தில் இருந்து அது சொன்ன விமானம் சாத்தியமா என போராடினான்,அவற்றை ஹிட்லர் தயாரிக்க முற்பட்டான், வட்டவடிவ விமானங்களும் அதில் உண்டு
அவன் திட்டம் தோல்வியுற்று அவன் கொல்லபட்டபின்பு அவனின் விமான திட்டங்கள் அமெரிக்கர்களிடமும் ரஷ்யர்களிடமும் சென்றன‌
அதன் பின் வந்தவையே இன்று காணும் அதிவேக யுத்த விமானங்கள், ஏன் பறக்கும் தட்டு எனும் பெயரே ஹிட்லர் காலத்திற்கு பின்புதான் வந்தது. ஹிட்லர் அப்படி ஒரு வட்ட வடிவ விமானம் உருவாக்கினான் என்கின்றார்கள்
இன்று அமெரிக்கா 5ம் தலைமுறை போர் விமானம் என வெளியிட்டு இருக்கும் வாலில்லா, வவ்வால் போலிருக்கும் விமானம் அன்றே ஹிட்லர் செய்ததே.
இதற்கு எல்லாம் அடிப்படை ஆதாரம் விமானிக் சாஸ்திரா எனும் இந்திய நூல், ஆனால் அதையெல்லாம் சொன்னால் நம்பமாட்டார்கள், வெள்ளையன் சொன்னதே வரலாறு விஞ்ஞானம்
எப்படி ஆயினும் ரைட் சகோதரர்கள் பறந்த அந்த 12 வினாடியே மனிதன் பறக்கமுடியும் என்பதற்கு பெரும் நம்பிக்கை கொடுத்தது, அது இந்த டிசம்பர் 17
அந்த சிறிய விமானமே இன்று ராட்சத விமானங்களாக மாறி பறந்துகொண்டிருக்கின்றது
இந்நாளில் நிச்சயம் ரைட் சகோதரர்கள் நினைவுக்கு வருகின்றார்கள், அவர்களோடு அந்த விமானிக் சாஸ்திரா எனும் நூலும் நினைவுக்கு வருகின்றது
எவ்வளவோ விஷயங்கள் முற்காலத்தில் இருந்திருக்கின்றன, அவைகளில் எல்லாம் பெரும் அறிவியில் இருந்திருக்கின்றது, புராணாம் , கட்டுகதை என சொல்லிவிட முடியாது, இன்றிருப்பதை விட மிக மேம்பட்ட அறிவு அது.
ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் அந்த அறிவு பிடுங்கபட்டு மனிதன் காட்டுமிராண்டி ஆக்கபட்டிருக்கின்றான்
பெரும் அழிவோடு அது நடந்திருக்கின்றது
பின் கொஞ்சம் கொஞ்சமாக மனித இனம் அந்த அறிவினை மீட்டெடுக்கின்றது, பின்னொரு நாளில் இதுவும் பெரும் அழிவோடு நாசமாகி மறுபடியும் மானிட குலம் அதே காட்டுவாழ்க்கைக்கு திரும்பலாம்
அந்த பல்லாண்டுகளுக்கு பின் வரும் மக்கள், நாம் வாழும் நவீன வாழ்வினை அறிந்தால் அதெல்லாம் கட்டுகதை என சொல்லி காட்டுக்குள் இருந்து பகுத்தறிவு பேசலாம், பின் மெல்ல மெல்ல மெல்ல அவர்களும் முன்னேறி பின் மொத்தமாக அழியலாம்
இந்த சுழற்சி வழமையான ஒன்று என எப்பொழுதோ சொன்னமதம் இந்துமதம்.
எல்லா விஞ்ஞான மெஞ்ஞான‌ கோடுகளும் இந்துமதத்திலே தொடங்கி அங்கே தான் முடிகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here