G11 சூப்பர் பவர் அந்தஸ்துடன் இந்தியா.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இட்டாலி ஆகிய நாடுகளை 1975-76 ஆண்டு காலகட்டத்தில் ஒன்றிணைத்து G7 நாடுகளாக அங்கீகாரத்துடன் அதிகார மையங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.இதனை மாற்றி இந்தியாவை எப்படியாவது உள்ளே கொண்டு வந்து பலமான கூட்டணி நாடுகளாக ஆக வேண்டும் என்று பெரும் முயற்சிகளை எல்லாம் செய்தார் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அது இன்று நிறைவேறி இருக்கிறது. இந்தியாவை சூப்பர் பவர் அந்தஸ்து கொடுத்து மேலும் மூன்று நாடுகளையும் சேர்த்து G11 நாடுகளாக ஒன்றிணைத்து இருக்கிறது.

அந்த மற்ற மூன்று நாடுகள் தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தாம்.
கிட்டத்தட்ட உலகளவில் சீனாவை முற்று முழுதாக தனிமைப்படுத்தி விட்டது G11 நாடுகள். இது சீனாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அம்சங்கள் இனி இந்த நாடுகள் மேற்கொள்ள கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா நேரிடையாக சீனாவுடன் தரை எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதுபோலவே இந்த பிராந்தியத்தில் இந்தோ பசபிக் என்று பெயரிடபட்டு இந்தியா கடல் எல்லையை கோலோச்சி வருகிறது. இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே சீனாவிற்கு பெரும் தலைவலியை உண்டாக்கி இருக்கும் வேளையில் ரஷ்யா இந்த கூட்டணிக்குள் கொண்டு வந்து இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது ராணுவ கட்டளை தளங்களை உருவாக்கி அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டது. இது குறித்து முன்னரே நம் பதிவில் விரிவடைய பார்த்து இருக்கிறோம். இவை அனைத்துமே சேர்த்து இந்தியாவை சூப்பர் பவர் அந்தஸ்துக்கு முன்னேற்றப்பட்டு இருக்கிறது.

இனி வரும் காலங்களில் சீனாவின் கனவு திட்டமான BRI பட்டுப் பாதை திட்டத்தை கிடப்பில் போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்கின்றனர். அல்லது அந்த திட்டத்தினை இந்திய மேற்பார்வையில் செயல் பட அனுமதிக்க படும் என்கிறார்கள்.
இதில் சூஷ்மமான விஷயம் ஒன்று இருக்கிறது. இந்த பாதை இமயமலைக்கு அந்த பக்கத்தில் கரகோரம் கணவாய் வழியாக கில்கிட்- பல்டிஸ்தான் ஊடாக பாகிஸ்தானையை தொட்டு குவாடர் துறைமுகத்தில் முடிவடைவதாக திட்டமிடப்பட்டு பாகிஸ்தானிய பகுதிகளில் 45 சதவீதம் வரை முடிந்து இருக்கிறது. ஆனால் மேற்படி கில்கிட்-பல்டிஸ்தான் காஸ்மீர் மாநிலத்தில் வருகிறது. இது இந்தியாவிற்கு சொந்தமான பகுதியாக மேற்சொன்ன நாடுகள் மறைமுகமாக அங்கீகரித்ததாக இதில் அர்த்தம் ஆகும்.

இது சீனா பாகிஸ்தான் கூட்டுறவு திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போட்டதாக மாறும். ஆஃப்கானிஸ்தானில் சீனா தனது அதிகாரத்தை செலுத்துவதற்கும் மிகப்பெரிய தடைக்கல்லை உண்டாக்கி இருக்கிறது. மிக அழகான காய் நகர்த்தலில் இந்தியா திட்டம் மிட்டு சாதித்து இருக்கிறது என்பது மாத்திரம் நிதர்சனமான உண்மை. ஏற்கனவே உலகம் முழுவதும் ஊஹான் வைரஸ் சீனா தான் பரப்பியது என்றும் அதற்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருந்தது என்று நாயணம் வாசித்து பெய்ஜிங்கின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் இந்த தந்திரவிளையாட்டை அறிந்து ஆடிப் போய் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு பிரிக்ஸிட் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழண்டு கொண்டபோதே வேறு ஏதோ திட்டத்துடன் தான் இது நடக்கிறது என்று வெளிப்படையாக சொல்லி வந்தார்கள். தற்போதைய இந்த நகர்வு அதற்காக கூட இருக்கலாம் என்கின்றனர்.

இதனை உறுதி படுத்தும் விதமாக சீனா தனது க்ளோபல் டைம்ஸ் பத்திரிகையில் மேற்படி நாடுகளை…..ஆசை காட்டி மோசம் செய்து விட்டார்கள்… பாவிகள் என்றெல்லாம் லாவணி பாடி வருகிறது. இது கலங்கும் அளவிற்கு என்ன நடந்தது என்று பார்த்தால் G11 நாடுகள் தனியாக நிதி ஆணையத்தை உருவாக்க யோசனை செய்து கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஃது அநேகமாக சீனா சொந்தமாக உருவாக்கி வைத்துள்ள கிருப்டோகரன்சிக்கு எதிராக இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களுக்கு என்று தனியாக கிருப்டோ கரன்சியை உருவாக்க முனைந்திருக்கிறார்கள். இஃது டாலர் போன்று உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் நான்கு இந்த கூட்டமைப்பில் இருப்பதால் இது சாத்தியம் தான் என்கிறார்கள்.
அமெரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் அவை. இதில் இந்தியா மக்கள் தொகையில் முதன்மையாகவும் இரட்டை இலக்க வளர்ச்சி கொண்டு நாடாகவும் இருக்கிற படியால் அதற்கு சூப்பர்பவர்அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த காலத்தில் நம் தேசத்தில் நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நம் நாட்டின் ரூபாய் மீதான நம்பகதன்மைக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

இன்றைய உலகில் 93 சதவிகிதம் போலிகள் இல்லாத நம்பகத்தன்மை கொண்ட கரன்சியாக இந்திய ரூபாய் இருப்பதாக சர்வதேச நிதி ஆணைய அறிக்கை தகவல் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே தற்சார்பு பொருளாதார வர்த்தக வளர்ச்சி அடையும் காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு என்பது சதவீதம் வளர்ச்சி காணும் என்கிறார்கள். இது எதிர் வரும் ஆறு ஏழு ஆண்டுகளில் சாத்தியம் ஆகும் என்கிறார்கள். இது நடந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சற்றேறக்குறைய சம அளவில் இருக்கும். இப்படியும் சொல்லலாம் உலகில் அதிக அளவில் பில்லியனர்ஸ் நம் நாட்டில் வசிப்பவர்களாக மாறிடக் கூடும். அந்த இடத்திற்கு நோக்கி நாம் வளர்ந்து கொண்டு வருகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here