ஜி 20 மாநாடு இந்தியாவிற்கு சாதகம்… எப்படி?

அடுத்த ஆண்டு நம் சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டு. இந்த தருணத்தில் அதாவது 2022 ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடக்க இருக்கிறது. முதலில் இது இந்தோனேசியாவில் தான் ப்ரோடோகால்-படி நடக்கவேண்டும். அதற்கு அடுத்த ஆண்டு தான் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் இந்தோனேசியாவிடம் பேசி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடந்த விரும்பும் காரணங்கள் சொன்னது இந்தியா. சந்தோஷமாக ஒப்புக் கொண்டது இந்தோனேசியா அரசு.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்து முடிந்தது.
இந்த கூட்டத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நாடுகள் இரண்டு. ஒன்று பிரான்ஸ், அந்த மற்றொன்று நமது இந்தியா.

அந்த அளவிற்கு அங்கு கூடியிருந்த யாரையும் விட்டு வைக்கவில்லை நம் பாரத பிரதமர். துருக்கி அதிபர் எர்டோகன் உட்பட….. அவர் தான் பாவம் பேய் முழி முழித்து கொண்டு இருந்தார் என சிரிக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி இருந்தது. இவ்வளவு ஆளுமை நிறைந்த மனிதரிடம் முறைத்துக் கொண்டோமே என எர்டோகன் கவலைப்பட்டு இருக்கக்கூடும் என்று கிண்டல் அடித்து இருந்தார்கள் அதில்.

இதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

துருக்கி அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டு இருந்த F35 விமானங்களை கடைசி நிமிடத்தில் தர முடியாது என்று வெளிப்படையாக அறிவித்து விட்டது அமெரிக்கா. கொடுத்திருந்த டாலர்களையும் திருப்பி தர வில்லை… வேண்டுமானால் F16 தரவா என்று கேட்டு பகடி செய்து இருந்தார்கள்.

இந்நிலையில் ரஷ்யாவிடமும் முறைத்து கொண்டது துருக்கி சிரியா விஷயத்தில். ஆனால் பாருங்கள்…ஜார்ஜியாவில் இருந்து அதரப்பழசான மிக் 25 விமானங்களை வாங்க போவதாக வதந்திகள் சர்வதேச அளவில் செய்திகளாக பரவியது. இவை சோவியத் யூனியனாக இருந்த காலத்தில் ஜார்ஜியா இன்றைய ரஷ்யாவின் ஒரு அங்கத்துவ நாடாக இருந்த சமயத்தில் அங்கு வைத்து அப்பொழுது தயாரிக்கப்பட்ட விமான ரகங்கள் இவை.

மூன்றாவது தலைமுறை விமானங்களாக கூட இது இல்லை என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இது ஒரு புறம் இருக்க…..

பிரான்சு பிரதமர் இமானுவேல் மெக்ரோன் நம் பாரதப் பிரதமர் மோடியுடன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் உரையாடிக் கொண்டு இருந்தார். சமூக வலைதளங்களில்… மற்றும் பத்திரிகையில் காணக் கிடைத்த ஜோபைடன் மோடியின் தோளில் கை போட்டு கொண்டு, நடந்துக் கொண்டே பேசும் புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் இது முதன்முதலில் கூட்ட இடைவேளையின் போது மெக்ரோன் மற்றும் நம் பிரதமர் மோடியுடன் நடந்து வரும் சமயத்தில் எதேச்சையாக எடுத்த புகைப்படத்தில் நன்றாக இருந்ததால் இது போலவே இருந்தால் மிக நன்றாக இருக்கும் என ஜோபைடன் விரும்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் என்கிறார்கள் அங்கு கூடியிருந்த அரசியல் பார்வையாளர்கள்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த அனைவரிடமும் மிக சகஜமாக பேசிக் கொண்டு இருந்தது நம் பாரதப் பிரதமர் மோடி தான் என்கிறார்கள் சர்வதேச பத்திரிக்கையாளர்கள்! ஆனால் இவர் அங்கு மினி கூட்டம் ஒன்றையே நடத்தி முடித்திருக்கிறார் என்று தற்போது தான் தெரியவந்து அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

மோடி – ஜோபைடன்

இந்தோனேஷியா அதிபர் ஜோக்கோ விடோடோவுடனும் தென்கொரியா அதிபர் மூன்ஜேயினுடம் கலந்து பேசி சீனாவிற்கு எதிரான மற்றொரு கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார் என்கிறார்கள்.

ஏற்கனவே உள்ள குவாட் கூட்டமைப்பிற்கு சமமாக இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் தற்போது பிரான்ஸும் இடம் பெறும் என்கிறார்கள். இது பற்றின செய்தி இனி வரவிருக்கும் நாட்களில் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட இருக்கிறது என்று மேலும் சொல்லி இருக்கிறார்கள் அவர்கள்.

இது தற்போது உள்ள ஜியோ பாலிட்க்ஸில் மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிட்டுயிருக்கிறார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆக்கஸ் அக்ஓக்கு அமைப்பிற்கு சமமாக அதே சமயத்தில் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் இந்த புதிய கூட்டணி மிகப்பெரிய ஆளுமையை செலுத்தும் என்கிறார்கள்.
இது மிக நிச்சயமாக இந்தியா முன்னெடுத்து இருக்கும் ஒரு தந்திரமான காய் நகர்த்தல் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

ஆக்கஸ் அமைப்பு மூலமாக இந்தியாவை சற்றே தள்ளி வைத்தது போலான நிலையில் இந்த புதிய கூட்டணி அந்த ஆக்கஸ் அமைப்பில் உள்ள நாடுகளை ஊடறுத்து இந்தோபசிபிக் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை இந்தியா முன்னெடுத்து இருக்கிறது என்பதாகவே இது பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்தியாவிற்கான ஆயுத ஏற்றுமதியில் முதல் இடத்தில் இருந்த ரஷ்யாவின் பங்களிப்பை இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் பலரும் நினைப்பது போல் அமெரிக்கா இல்லை, பிரான்ஸ் தான் இருக்கிறது.

அதுபோலவே உலக அளவில் தென்கொரியா தயாரிப்பு விமானங்கள், இந்திய தேஜஸுடன் சம அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. நீர் மூழ்கிகப்பல்களில் இந்த இரண்டு நாடுகளோடு பிரான்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்கள் அனைவரும் ஒன்று திரட்டி ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து இயங்கினால் மிகப்பெரிய அளவிலான ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி பொருட்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

இது நிச்சயமாக இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொல்லி உலக நாடுகளை அதிர வைத்து இருக்கிறார்கள் அவர்கள். தவிர இந்த நான்கு நாடுகளின் பொருளாதார வர்த்தக வளர்ச்சி மிகப்பெரிய அளவில், சீனாவை மிஞ்சிய நிலையில் நிற்கும் என்கிறார்கள்.

ஆக வரவிருக்கும் நாட்களில் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வர்த்தக வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு, நம் கண் முன்னே பிரகாசமாக தென் பட ஆரம்பித்து இருக்கிறது. இது தென் சீனக் கடல் பகுதிகளில் மாத்திரமல்லாமல் உலக அளவில் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here