இந்துக்கள் எல்லோரும் பூணூல் போட முடியுமா?

இந்துக்கள் எல்லோரும் பூணூல் போட முடியுமா ப்ரோ?

ஆமா முடியும்டா அதுக்கென்ன?

இந்துக்களில் உள்ள எல்லா சாதியினரும் பூணூல் போட முடியுமா ப்ரோ?

முடியும்டா வெளக்கெண்ண….! என்ன இப்போ?

பறையர்கள் பூணூல் போட முடியுமா ப்ரோ?

முடியும் டா. அதனால்தான் அவர்களைப் பற்றிய பழம்பாடல் ஒன்று இவ்வாறு கூறுகிறது,

“முந்திப் பிறந்தவன் நான் முதல் பூணூல் தரித்தவன் நான் சங்குப் பறையன் நான் சாதியில் மூத்தவன் நான்”

ஆத்தி…அது சரி, சிற்பங்களை செதுக்கும் சிற்பிகள் பூணூல் போட முடியுமா ப்ரோ?

ஆமாடா. அவங்க கண்டிப்பா பூணூல் போடணும்னுதான் சிற்ப சாஸ்திரம் சொல்லுது,

“ஸ்தபதீநாம் சதுர்வேத தஸ; கர்மா விதியதே|
ஸிகாயஜ் ஞோபவீ தஞ்ச ஜபமாலா கமண்டலும் ||
கூர்மபீட: ஸிரச்சக்கரம் யோக வேஷ்டிர லங்கர் தம்|
பீதவஸ்த்ரஸித ப்ரஷ்டம் விபூதிர்க் கந்தலேபநம் ||
ஸிவிவமந்த்ரம் ஸிவத்யாநம் ஸிவபூஜா விதீயதே |
ப்ரஹ்மா விஷ்ணு மஹேஸாநாம் ஹ்ருத யேத்யாந ஸில்பிநாம்.”

  • சிற்ப சாஸ்திரம்.

அதாவது எவனொருவன் நான்கு வேதங்களையும் அறிந்தவனாயும் ; மரம், செங்கல், கருங்கல், உலோகம், சாந்து , மண், சுக்கான்கல், தந்தம் முதலியனவற்றில் உருவங்களை அமைக்கும் ஆற்றல் வாய்ந்தவானாயும் ; இயந்திரம், படம் முதலியன எழுதும் திறமை வாய்ந்தவனாயும் ; தலையிற் சிகையை உடையவனாயும் ; பூணூலைத் தரித்தவனாயும் ; பீதாம்பரம் அணிந்தவனயும் ; விபூதியையும் வாசனைச் சந்தனத்தையும் அணிந்தவனாயும் மிருத்தலோடு, சிவபூசை செய்பவனாய், பிரம்மா விஷ்ணு மகேசுரரை இருதயத்தில் தியானிப்பவனாய் இருக்கின்றானோ அவனே சிற்பியாவான் என்பது இதன் பொருளாகும்.

ஐயய்யோ. ப்ரோ அப்போ எங்க அண்ணன் பூணூல் போட முடியுமா ப்ரோ?

அடேய் உங்க நொண்ணன் குலத்தில் உள்ளவங்களும் பூணூல் போடலாம்.

கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சான்றோர்கள், வெளியிட்ட செப்பு பட்டயங்களில் சான்றோர்களை “குலமும் முப்புரி நூலும் (பூணூல் உடையோர்)” என்று எழுதியுள்ளனர். அதோடு இன்று நாடார் குலத்தில் ஒருவரான கனல் கண்ணன் கோவில் கட்டி பூணூல் போட்டிருக்காரு அவர யாரு தடுத்தது?

அப்படியா ப்ரோ? இது ஆகம விதிக்கு எதிரானது இல்லியா ப்ரோ?
ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய 727 குறட்பாக்கள் அடங்கிய ஆகமக் கருத்துகளுக்கு ஆறுமுகநாவலர் உரை எழுதியுள்ளார். சைவ சமய நெறி என்ற பெயருடைய இந்நூலில் பாடல் எண் 49 லிருந்து 53 ஆவது படற்பகுதிகள் நால்வர்ணத்தவரும் அணிய வேண்டிய பூணூலின் வகைகளை விளக்குகிறது..!
அப்போ எனக்கு வரலாறு தப்பா சொல்லி குடுத்துட்டாங்களா? ப்ரோ?

ஆமாடா ஆமணக்கு எண்ணை

அப்போ எங்கள் முப்பாட்டன் சிவனுக்கு ஏன் ப்ரோ பூணூல் இல்லை?
அட அறிவுக்கொழுந்தே சிவனுக்கும் பூணூல் உண்டு. இதை சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறும், திருமுறைகளும் அழகாக எடுத்துரைக்கின்றன. உதாரணமாக,
“கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த் தாரன்;
மாலையன்; மலைந்த கண்ணியன்;
மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
நுதலது இமையா நாட்டம்;
இகல் அட்டு, கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்”

  • அகநானூறு. அதுவும் போச்சா…. எங்க பெரும்பாட்டன் முருகனுக்கு பூணூல் ஏன் இல்லை ப்ரோ?

முருகனுக்கு எழுதப்பட்ட திரு இலஞ்சி முருகன் உலா என்றொரு நூல் இருக்கு அதிலுள்ள 104 ஆவது பாடலை படிடா, அதில் முருகனுக்கு பூணூல் உள்ள செய்தி உள்ளது,

“மின்னங் கொருவடிடாய் வீற்றிருந்த தொப்பவே
பொன்னகல முப்புரி நூல் பூணுவித்துத்-தன்னிகரில்”

  • திரு இலஞ்சி முருகன் உலா

அதோடு கந்த சஷ்டி கவசத்தின் 46 ஆவது வரிகளை போய் படிச்சிட்டு வாடா. அதிலும் முருகனுக்கு பூணூல் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முருகனின் தந்தைக்கே பூணூல் இருக்கும்போது மகனுக்கு இருக்காதாடா வெளக்கெண்ண…

இதெல்லாம் ஆரிய புரட்டு ப்ரோ அதுனாலதான் எங்கள் முப்பாட்ட பெருந்தகை இலங்கை வேந்தனுக்கு பூணூல் இல்லை.

அட அறிவில் கூடியவனே உங்க முப்பாட்ட பெருந்தகைக்கும் பூணூல் உண்டுடா.
உதாரணமாக,
“மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்
வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும்
வேத நாவன் நூலினா னோக்கிநக்கு நொடிப்பதோ
ரளவில்வீழக் காலினா லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே”

  • அப்பர்.

பொருள் : பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க, ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்.

ப்ரோ நான் இன்று போய் நாளை வரவா?

இருடா. இன்னும் எதாச்சும் கேட்டுட்டு போடா..

ஐயனாருக்கு பூணூல் உண்டா ப்ரோ?

ஆமாடா. ஐயனாருக்கும் பூணூல் உண்டு. நீ மழைக்காவது ஐயனார் கோவில் பக்கம் ஒதுங்கி இருக்கியா?

அது வந்து …. போய் பாக்றேன் ப்ரோ.

அப்ப எங்க கொள்ளுத்தாத்தா ஏன் பூணூலை பிராமண அடையாளமா எங்களுக்கு சொல்லி தந்தாரு?

உங்களுக்கு சொல் புத்தியும் இல்லை செயல் புத்தியும் இல்லைனு உங்க கொள்ளுத்தாத்தாக்கு தெரிஞ்சதாலத்தான் அவரு அடிச்சு விட்டதெல்லாம் நீங்க தூக்கி பிடிகிறீங்கடா.

பூணூல் பிராமண அடையாளம் அன்று.

டேய் இன்னும் எதாச்சும் கேட்டுட்டு போடா.

வேண்டாம் ப்ரோ. நீங்க அதுக்கும் எதாவது பதில் வச்சிருப்பீங்க…

(பக்கத்துல இருந்து ஒருத்தன்…. தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ஏன் பூணூல் பற்றிய குறிப்பு இல்லைனு கேளுனு எடுத்து குடுக்குறான்)
இவனும் அறிவாளித்தனமாக… ப்ரோ தொல்காப்பியத்துல பூணூல் பற்றிய குறிப்பு இல்லியாமே?

அட கடல எண்ண… தொல்காப்பியத்துலயும் பூணூல் பற்றிய குறிப்பு உண்டு. தொல்காப்பியத்தில் மட்டுமல்ல, பரிபாடல், அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களிலும், அதற்கு பின்பான பக்தி இலக்கியங்களிலும் பூணூல் பற்றிய குறிப்பு உண்டு.

“நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க்கு உரிய”

  • தொல்காப்பியம்.

ஆத்தீ…
திருவள்ளுவர் ஏன் ப்ரோ பூணூல் பற்றி சொல்லல?

அட அறிவுக்கொழுந்தே… திருவள்ளுவரும் பூணூல் தரித்துக்கொள்வோம்னு தான்டா பாடி இருக்காரு.

“பூணூல் தரித்துக் கொள்ளுவோம் – சிவ சிவ பொறியுமைம் புலனையுந் தொழுது கொள்ளுவோம் வேண விருதுகளும் விகிதமாய் வெண்குடை, வெண்சாமரமும் பிடித்துக் கொள்வோம்”

  • ஞானவெட்டியான்.

….. திருவள்ளுவரும் சொல்லிட்டாரா?…

டேய் நில்லுடா… ஓடாதடா… நீ நினைக்குற திருவள்ளுவர் இல்லடா இது….!

ஓடிட்டான்…..”!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here