உலகம், இன்று உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக பலவிதமான மாற்றங்கள் சந்தித்து வருகிறது.
அதில் மிக முக்கியமான ஒன்று அதிகாரம்.
யார் இந்த உலகை ஆட்சி செய்வது என்கிற மறைமுக கேள்வி அதில் தொங்கி நிற்கிறது.அதே சமயத்தில் யார் ஆட்சி செய்கிறார்கள் என்கிற கேள்விக்கு தற்சமயம் நேரிடையான பதில் இல்லை என்பது தான் இதில் ஆச்சரியமான விஷயம்.
யாரெல்லாம் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு இருக்கிறது என்கிற ரீதியிலான அரசியல் காய் நகர்த்தல் தான் தற்போதைய உலக ராஜதந்திர நடவடிக்கைகள் இருந்து வருகிறது.
இதில் யார் கை ஓங்கி இருக்கிறது…யாருக்கு… அல்லது எந்த நாட்டுக்கு வாய்ப்பு இருக்கிறது என்கிற தீர்க்கமான அவதானிப்பு தான் உலக பொருளாதார வர்த்தக போக்கையே தீர்மானிக்கப்போகிறது.
இந்த இடத்தில் நமக்கு புரிந்து கொள்ள அல்லது அனுமானிக்க மூன்று விஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று முதலாளித்துவம்
இரண்டாவது கம்யுனிசம்
மூன்றாவது சோஷியலசம்.
இந்த சித்தாந்த சிந்தனை தான் கடந்த நூற்றாண்டை வழி நடத்தி வந்திருக்கிறது. இன்றும் கோலோச்சி கொண்டு இருக்கிறது.ஆனால், பெயரிலளவில் மாத்திரமே.
செயல்பாடுகளில் சித்தாந்தம் மிகவும் குழம்பி விட்டது.
உதாரணமாக சீனா மற்றும் ரஷ்ய கம்யுனிச சிந்தனை. ஆட்சி அதிகாரத்தை அங்கு மாற்றீடு செய்தது…. ஆனால் தற்போது அது தனி நபர் வழிக்காட்டலின் அடிப்படையில் கிட்டத்தட்ட முதலாளித்துவ மனோபாவத்தில் இயங்குகிறது. நிரந்தர ஜனாதிபதி என்கிற முதலாளித்துவ சித்தாந்தம். அந்த நாடுகளை பலவழிகளில் பலப்படுத்தி இருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
இது தான்… இந்த கேப்பிட்டலிச கொள்கை….. முதலாளித்துவ சித்தாந்தம் தான். அமெரிக்கா பாணி அரசியல். ஆனால் தற்போதைக்கு அது அங்கு பலத்த அடி வாங்கி இருக்கிறது. உலகம் முழுவதும் கோலோச்சிய காலம் இன்று மலையேறிவிட்டது. சில்லுண்டு தேசம் எல்லாம் ஆனானப்பட்ட அமெரிக்காவை அசைத்து பார்த்து விட்டது. இத்தனைக்கும் அந்த தேசத்தை ஜனநாயகம் ஆட்சி செய்கிறது.
மக்கள் சக்தி… அதிகாரத்தை தீர்மானிக்கிறார்கள்… ஜனநாயகத்தின் அடிநாதம் இது.
ஆனாலும்கூட அமெரிக்கா அடிவாங்குகிறது. இதற்கான ஒற்றை காரணம் மறைமுகமான, நிழல் உலக ஆட்சியாளர்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள். இதற்காக அவர்கள் ஹைடெக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
மக்கள் தானே ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்க வேண்டும் என்கிறீர்கள்….சரி அந்த மக்களையே நாங்கள் வழிக்கு கொண்டு வருகிறோம் என்கிற சித்தாந்தத்தை கையில் எடுத்து இயங்கி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு இவர்கள் கையில் எடுத்து இருப்பது மதம். நரித்தனமான இந்த வேலைகளை உலகம் முழுக்க வியாபித்து செய்து வருகிறார்கள்..
மிஷனரிகள் என்கிற பெயரில்…… இவர்கள் இயங்க நிதி ஆதாரங்கள் பல்வேறு வழிகளில் வருகின்றன….. இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பணத்தை பிளாக் மணி என்கிறார்கள்…. தற்போது அதனை க்ரிப்டோ கரன்சியாக மடை மாற்றி அமைத்து இருக்கிறார்கள்.
இதன் வகைப்பாடுகளை சற்றே எட்டிப் பார்த்தாலேயே நமக்கு தலை சுற்றும். அத்தனை ரகங்களில் அத்தனை விதங்களில் இருக்கும்,இருந்து வருகிறது.
ஜனநாயகம் செல்லரிக்க இவர்களின் நிழல் உலக செயல்பாடுகள் தான் மிக முக்கியமான காரணம். அமெரிக்கா இன்று பலவீனப்பட இவர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இதே ஜனநாயகத்தை கேப்பிட்டலிச கோட்பாடுகளில் இல்லாமல் சோஷியலிச சித்தாந்தம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த உலகின் ஒரே நாடு நமது தேசம் தான்.
ஆரம்பத்தில் சோஷியலிச சித்தாந்தம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்த தேசம், செக்யுரலிசம் என்கிற பெயரில் சின்னாபின்னமாகி இருந்ததை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து மீள் கட்டமைப்பு செய்து வருகிறோம்.
இது உலகளவில் ஓர் புதிய அதிகாரவர்க்கத்தை உண்டாக்கி இருப்பதாக பல வல்லரசு நாடுகளை பதைபதைக்க செய்து இருக்கிறது….
தற்போது இயங்கும் உலக அளவிலான அரசியலின் மையம்… இந்த ஒரு புள்ளி தான்.
அப்படி என்றால் நமது தேசம் உலக அளவில் வல்லரசாக… வல்லரசு நாடுகளுடன் சரிக்கு சமமாக போட்டி போடும் அளவிற்கு வளர்ந்து விட்டோமா என்றால் நிச்சயமாக இல்லை…. ஆனால் அதற்கான குருத்துக்களை…. இளம் தளிர்களை அதிகளவில் கொண்ட உலகின் ஒரே நாடாக இன்று நமது தேசம் மிருள்கிறது……. அதன் பொருட்டே உலக நாடுகள் பலவற்றிலும் மிரண்டு போய் இருக்கிறார்கள்.
இதனை முளையிலேயே கிள்ளி களைந்திட பல தரப்பட்ட விஷயங்களை கையில் எடுத்து இருக்கிறார்கள். நம்மை சுற்றி நாம் பார்க்கும் சமீப கால பிரச்சனைகளில் இதன் தாக்கம் இருப்பதற்கு இதுவே முழு முதல் காரணம்.
இதனை தூண்டுபவர்கள்…. தூண்டி விடுபவர்கள் நம் தேசத்தில் இல்லை….. ஆனால் தூண்டி விடும் சமாச்சாரங்களுக்கு எதிர் வினையாற்றுபவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள். தேசப்பற்று கொண்ட சாமானியர்கள்.
உதாரணமாக ஒன்று பாருங்கள்… கடந்த வாரத்தில் ஒரு நாள் பாகிஸ்தானிய ஹூன்டாய் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்களில் ஒரு ட்விட் ஒரே ட்விட்….. காஷ்மீர் குறித்து ட்விட் சமூக வலை தள பக்கங்களை கதி கலங்க செய்து விட்டது. கேள்வி கேட்ட நம்மவர்களை நம் இந்திய ஹூன்டாய் நிறுவனத்தின் வலைத்தள பக்கங்களில் பிளாக் செய்ய பற்றி எரிந்தது விவகாரம்.
ஹூண்டாய் நிறுவனங்கள் பங்குகள் வேக வேகமாக சரிந்தது. நம் தேசத்தில் மட்டுமே முப்பது சதவீதமான புக்கிங் திரும்ப பெறப்பட்டது. ஆடிப் போனது அந்த நிறுவனம் மாத்திரம் அல்ல….. உலக அளவிலான வர்த்தகர்களும் தான்.
இதே பாணியிலான கிண்டலடிப்பை…. நையாண்டி செய்து வந்த KFC நிறுவனம் தலைதெறிக்க இறங்கி வந்தது… அவர்களின் அத்தனை விற்பனை நிலையங்களிலும் இந்திய காஷ்மீர் மட்டுமல்ல முழு காஷ்மீரும் POK உட்பட அனைத்தும் இந்தியாவிற்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகையை வைத்து இருக்கிறார்கள்.
நல்ல விஷயம் தானே என்கிறார்களா…….
இது ஒரு பகுதி தான்…. இதன் மறு பக்கமும் ஒன்று இருக்கிறது.
அதனையும் ஒரு பார்வை பார்த்துவிடுங்கள்.
ஹூண்டாய் நிறுவனங்களின் தாயகம் தென் கொரியா. ஹூண்டாய் இந்திய நிறுவனமே…. எங்களுக்கு தாய் வீடு தென் கொரியா என்ற போதிலும் எங்களின் புகுந்து வீடு… இரண்டாம் தாய் வீடு இந்தியா தான் என்று பகிரங்கமாக தங்களின் சமூக வலைதளங்களில் கதறி இருந்தார்கள்.
விஷயம் அத்தோடு முடியவில்லை…..
தற்போது நாம் நம் தேசத்திற்கான பல ராணுவ சாதனங்களின் கட்டமைப்பை பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் அடிப்படையில் கூட்டு சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றோம்….. இதற்கான நிதி ஒதுக்கீடு தற்போதைய மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் தான் இந்த பிரச்சினை முளைத்தது.
இதன் தாக்கம், அதாவது ஹூண்டாய் நிறுவன வலை தள பதிவின் தாக்கம் நம்முடைய ராணுவ சாதனங்களின் உற்பத்தி கட்டமைப்பில் இருப்பதற்கு….. எதிரொலிப்பதற்கு… வாய்ப்புகளை இது ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறதோ என்கிற சிறு அச்சத்தை… இடர்பாடுகளை உண்டாக்கி இருக்கிறது.
ஆகக் கூடி இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். அல்லது யார் இயங்கி இருக்கக்கூடும் என்கிற யூகம் படிக்கும் அனைவருக்குமே தற்போது புரிய வந்திருக்கும்.
அப்படி ஒரு வெகு நுட்பமான பகடை ஆட்டம் நம்மை சுற்றி அரங்கேற்றி வருகிறார்கள்….. நம்மை… நமது தேசாபிமானத்தை விலை பேசி ஏலம் போட்டு. அதில் அவர்கள் நினைப்பதையும் சாதித்து வருகிறார்கள்……
இவை உதாரணம் மட்டுமே…… இது போன்ற…இதே போன்ற நிறைய காரியங்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
உக்ரைன் ரஷ்யா பிரச்சினையை பேசி வந்தவர்கள் இனி வரும் காலங்களில்….. இந்திய சீன பிரச்சினையை…. தைவானைக்கொண்டு பேச்சு பொருளாக மாற்றுவர். வெகு நிச்சயமாக இது நடக்கும்.
இதற்கு பின்னணியிலும் வேறு விஷயம் இருக்கிறது.
அது செமிகண்டக்டார்ஸ். இது வெறும் நுணி மாத்திரமே…… 90% சமாச்சாரங்கள் நம்மை சுற்றி நம் கண் முன்னே மறைந்து இருக்கிறது.
ஆமாம்….. நம் கண் முன்னே நடக்கிறது….. ஆனாலும் அதன் நிஜ அர்த்தம் நமக்கு புரிந்து விடக் கூடாது என்று மறைத்து வேறு சாயம் பூசி நமக்கு காண்பித்து கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கும் உதாரணம் சொல்ல முடியும். இது நாள் வரை உக்ரைன் ரஷ்யா பிரச்சினை என்று சொன்னவர்கள்….. இனி வரும் காலங்களில் விளாடிமிர் புடின் பிரிட்டனில் ஏகப்பட்ட சொத்து வாங்கி வைத்து இருக்கிறார் என சொல்லப் போகிறார்கள்…. அதாவது தற்போது உள்ள பிரச்சினையை புடின் பிரிட்டன் பிரச்சினை போல மடை மாற்ற போகிறார்கள்….. உக்ரைனில் இனி சண்டையே நடந்தாலும் அதனை யாரும் கண்டு கொள்ள போவதில்லை.
எப்படி இருக்கிறது இந்த அரசியல் பகடையாட்டாம் என்பதை வரும் நாட்களில் சரி பார்த்து விட்டு சொல்லுங்கள்.
அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது… ஜனநாயகம் என்கிற பெயரில்…உக்ரைனையும் தைவானையும் இணைத்து உக்ரைனை ரஷ்யா கைப்பற்ற….. தைவானை சீனா கைப்பற்ற….
ஜனநாயக இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது என்று கதை விட நேரம் பார்த்து கொண்டு இருப்பவர்களை குறித்து தான்……