கதக்களி ஆடும் இந்தியா…. கலங்கி தவிக்கும் சீனா.

சீனர்கள் கொஞ்சம் கூட திருந்தவில்லை.

இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த… திட்டமிட்டு கொண்டு இருக்கிறார்கள்….. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய போக….. மோப்பம் பிடித்த நம்மவர்கள் அட்டகாசமாக காய் நகர்த்தி அவர்களுக்கு முன்பாக களத்தில் நிற்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.பார்த்து பதைபதைத்து போய் இருக்கிறது பெய்ஜிங்.

இதனை புரிந்து கொள்ள இன்னமும் கொஞ்சம் நுட்பமாக சீன நகர்வுகளை பார்க்க வேண்டும்.விஷயம் இது தான்.தைவான் எல்லையில் தனது அதரப்பழசான விமானங்களை எல்லாம் குவித்து வைத்து வித்தை காட்டி கொண்டு இருக்கிறது சீனா. இவையெல்லாம் சோவியத் கால தயாரிப்பு ரகங்கள்…. கிட்டத்தட்ட 1970 களில் பயன் பாட்டிற்கு வந்த விமான ரகங்கள். முதல் தலைமுறை விமானங்களாக கூட பலதும் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.பார்ப்பதற்கு பைத்தியக்காரத்தனம் போல் வெளி பார்வையில் தெரிந்தாலும்…… நிஜத்தில் இவைகளை ஆளில்லா விமானங்களாக….. தற்கொலை தாக்குதல் விமானங்களாக மாற்றீடு செய்துள்ளது சீனா.

வெடிபொருட்கள் நிரப்பி குறிப்பிட்ட இலக்கு நோக்கி துல்லியமாக செலுத்தி வெடிக்கும் வகையில் தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.இதில் மற்றொரு விஷயமும் உண்டு என்கிறார்கள்.அதாவது இந்த ரக விமானங்களை தற்போது பயன்பாட்டில் உள்ள விமானங்களோடு ஒரு சேர…. ஒரே சமயத்தில் பறக்க விட்டால் எதிர் அணியில் உள்ள ரேடார் சிஸ்டங்களை பெருமளவில் குழப்ப முடியும்…. அந்த இடைவெளியில் தான் இலக்கு வைத்தை துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும் என்று மதிப்பீடு செய்து வைத்து கொண்டு இந்த வேலைகளை செய்கிறது சீனா.

. ஏனெனில் சீனா வசம் தற்சமயம் சுமார் 780 முதல் 940 போர் விமானங்களை இந்த ரகத்தில் ஏற்பாடு செய்து வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.இது தைவானுக்கு அருகில் இப்படி என்றால்…… வேறு ஒரு காரியத்தையும் செய்து இருக்கிறார்கள் அவர்கள்.தங்களுடைய ராணுவ சரக்கு போக்குவரத்து விமானமான Y20 விமானத்தை கிட்டத்தட்ட 60 டன் விமான எரிபொருள் எண்ணெய் சுமந்து செல்லும் வகையில் மாற்றீடு செய்துள்ளது. அதற்கு Y20-U என்கிற பெயரும் கொடுத்து இருக்கிறார்கள். வானில் வைத்து போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வண்ணம் செயல்படுத்துவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார்கள்.

வெற்றி கரமாக சோதனை ஓட்டத்தையும் செய்து பார்த்து இருக்கிறார்கள் கடந்த வாரத்தில்…….கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் 23 வெவ்வேறு ரகத்திலான போர் விமானங்களை ஆங்கில எழுத்து V வடிவத்தில் தைவான் வான் எல்லை வரை பறக்க செய்து இருக்கிறார்கள். பக்கங்களுக்கு 11 விமானங்கள் எனவும்…. நட்ட நடுவில் இந்த புதிய ரக Y20-U விமானத்தை கொண்டு பறந்து பார்த்து விட்டு திரும்பி வந்து இருக்கிறார்கள்.சேட்டிலைட் புகைப்படங்களும் இதனை உறுதி செய்து இருக்கிறது.

சீனா தைவானுக்கு எதிராக ஏதோ பெரியதாக செய்ய இருப்பதாக காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயம் அப்படி தான் தெரியும்.ஆனால்……..இதன் பின்னணியில் சீனா நரித்தந்திரமான வேலை ஒன்றை பார்த்து வருகிறது என்பதை வெகு சிலரால் அவதானிக்க முடிகிறது.சீனாவை பொருத்தவரை அவர்கள் எல்லையில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலேயே தைவான் வான் எல்லை ஆரம்பித்து விடுகிறது.

ஒரு முழு கொள்ளளவு எரிபொருள் நிரப்பிய போர் விமானம் ஒன்று கிட்டத்தட்ட ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர் முதல் இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தொலைவு வரை சுலபமாக பறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இந்த பிராந்தியத்தில் வானில் வைத்து எரிபொருள் நிரப்பும் விமானங்களுக்கு தேவை என்பது மிக மிக குறைவு. அதாவது தைவானுடனான போர் சூழல் உருவானால் கூட இது நிச்சயமாக அத்தியாவசிய தேவையாக இருக்கப்போவதில்லை.அப்படி என்றால் எதற்காக இந்த சோதனை பறத்தலில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்கள்?

அதில் தான் விஷயம் இருக்கிறது என்கிறார்கள்.இந்த பயிற்சியை தைவான் வான் எல்லையில் நடத்தி அவர்களை காப்ரா படுத்திவிட்டு அதேசமயம் இந்த பயிற்சியை அடிப்படையாகக் கொண்டு திபெத்திய பிராந்தியத்தில் பயன்படுத்தலாம் என்கிறார்கள் அவர்கள். இங்கு தான் அவர்கள் பலம் குறைகிறது. காரணம் இந்திய லடாக் எல்லையில் ஏதேனும் நடந்தால் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தும் அளவுக்கு சீன போர் விமானங்களில் திறன் இல்லை. தூரம் தான் மிக முக்கியமான பிரச்சினை

எல்லை ஒட்டிய பகுதிகளில் விமான தளங்கள் இருந்தாலும்கூட எடை அதிகம் கொண்ட விமானங்களை அதன் முழு கொள்ளளவு உடன் இந்த தளத்தில் இருந்து இயக்க சீனாவால் இன்றைக்கும் முடியவில்லை….. விமான ஓடுதளம் அவ்வாறு இருக்கிறது….. தவிர மலை உச்சியில் இயங்க தேவையான ஆற்றலை கொடுக்க இந்த ரக பழைய போர் விமானங்களால் முடியவில்லை.

மற்ற இடங்களில் இருந்து இயக்கினால்….. வந்து தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி செல்லும் அளவிற்கு எரிபொருள் அவற்றில் இருப்பதில்லை. அதனால் இந்த ஏற்பாடு, ஒத்திகை எல்லாம்….. என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.தைவானை கைப்பற்ற போவதாக போக்கு காட்டி விட்டு இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த விரும்புகிறது சீனா……. குறைந்த பட்சம் ஒரு சிறிய அளவிலான போரையாவது நடத்திட பேராசை கொண்டு காய் நகர்த்தி வருகிறது.

தைவானை தொட்டால் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து கும்பி அடித்து விடுவார்கள் என்று தெரிந்து வைத்து இருக்கும் சீனா…. இந்திய எல்லையில் அப்படி இல்லை என்று நினைத்து கொண்டு இருக்கிறது.இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடாக….. இலங்கை வழியாக…. மியான்மார் வழியாக அல்லது பங்களாதேஷில் இருந்து ஏதேனும் காரணங்களை கொண்டு ஒரு சிறிய அளவிலான முயற்சி செய்து பார்க்கலாமே என்று பாய்யை பிறாண்டிக் கொண்டு இருக்கிறது சீனா

.ஆனால் இதன் போக்கை முன்னரே யூகித்த நம் இந்திய தேசம்….. சதிராடும் சீனாவின் சதிவலைக்குள் அவர்களையே கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்.

மலேஷியா இந்திய மோதல் உருவான சமயம் அது…… மலேஷியாவின் மகாதீர் முகமது ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி இந்தியாவிற்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் மலேஷியாவிற்கு என 36 போர் விமானங்களை வாங்கும் உத்தேசம் எழுந்தது. சாவகாசமாக எப்படியும் தனக்கு தான் சாதகமாக இருக்கப் போகிறது என்கிற நினைப்பில் சீனா சற்றே மெத்தனமாக இருந்து வந்தது. அதற்கு காரணம் பாகிஸ்தான்.

இஸ்லாமிய தேசம் என்பதால் மலேஷியா பாகிஸ்தானிடம் தான் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்வார்கள் என்று பேசாமல் இருந்து வந்தது சீனா.காட்சிகள் மாறின….மகாதீர் முகமது தூக்கி அடிக்கப்பட்டார். போர் விமானங்களில் இந்தியாவின் தேஜாஸ் பரிசீலிக்கப்பட்டது‌. விக்கித்து நின்ற சீனா.. 35% வரை ஆடித் தள்ளுபடி தந்தது.

வேண்டாம் என ஒற்றை வரியில் பதில் சொல்லி விட்டது மலேஷியா….. ஆடி ஆஃபர் தந்த சீனாவே ஆடித்தான் போனது. மலேஷியா வரை வித்தை காட்ட தனது போர் விமானங்களை சீனா தூக்கி கொண்டு வர….. யாரை கேட்டு எங்கள் வான் எல்லைக்குள் பறந்து வந்தீர்கள் என்று கேள்வி கேட்டு துரத்தி அடித்து அதகளம் பண்ணி விட்டது மலேஷியா.

தனது போர் விமானங்களின் வலிமையை காட்ட வந்த சீனாவிற்கு வலி மாத்திரமே மிஞ்சியது. மையை நன்கு குழைத்து முகத்தில் பூசி அனுப்பி விட்டது மலேஷியா.இதன் பின்னணியில் யார்…….. என்ன நடந்தது….. என்ன நடக்கிறது என ஒன்றுமே சீனாவிற்கு இன்று வரை புரியவில்லை போலிருக்கிறது .‌……. ஆனால் படிக்கும் உங்களுக்கு புரிந்திருக்கும் என திடமாக நம்புகிறோம்.

இந்தியாவை மடக்கி பிடிக்க பிரம்ம பிரயத்தனங்களை செய்துக் கொண்டு இருக்கிறது சீனா…. ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய பதினேழு முறை இந்திய எல்லையில் வைத்து மூக்குடைத்துக் கொண்டும் மீண்டும் மீண்டும் அதையே செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்.

இம்முறை மின்னணு உபகரண ஊடாக முயற்சி செய்து பார்த்து இருக்கிறார்கள்.அங்கும் ஒரு படி முன்னே நின்று கொண்டு அதகளம் பண்ணி இருக்கிறார்கள் நம்மவர்கள். குட்டி யானை ஒற்றை கொம்பன்…. வெள்ளை யானை என்று புலம்பிக் கொண்டே சென்றிருக்கிறார்களே தவிர அடங்க வில்லை அவர்கள்.இந்த விஷயம் சற்றே சுவாரஸ்யமானது…

இந்தியா S400 வாங்கிய காலத்தில் இருந்தே அதன் மீது தடை விதிக்க முடியுமா என தலையை பீய்த்துக்கொண்டு ஒரு கும்பல் யோசித்து கொண்டு இருக்க… சீனாவோ சந்தடி சாக்கில் வேறோர் காரியத்தை செய்து கொண்டு இருக்கிறார்கள். நம் ஊர் பாணியில் சொல்வதானால் S400யை ஹேக் செய்ய முடியுமா என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது தங்கள் வசம் உள்ள S400 வைத்து கொண்டு அதனை அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து பார்த்து அதன் சாதக பாதங்களை குறிப்பெடுத்து கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் பொருத்தப்பட இருக்கும் வான் பாதுகாப்பு சாதனங்களை முடக்க முடியுமா என்கிற ரீதியில் வேலை பார்த்து வருகிறார்கள்.எதனையும் நகல் எடுக்கும் அவர்கள்….

S400யை மாத்திரம் விட்டு வைத்திருப்பார்களா என்ன….. என்கிற கோணமும் இதில் தொங்கி நிற்கிறது.ரஷ்யர்களோ…… அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நிச்சயமாக முயற்சி செய்து பார்த்திருப்பார்கள்…. ஆனால் வெற்றி பெற்று இருக்க மாட்டார்கள் என நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் அவர்கள். அதன் வடிவமைப்பு அது போலானது என்பது அவர்களின் வாதம்.நகல் எடுக்க முடியவில்லை என்றாலும் கூட அதன் இயங்கும் விதம் குறித்து ஆராய்ச்சி செய்து பார்த்து இருப்பார்கள்…..

அந்த வகையில் அதில் உள்ள குறைபாடுகள் பிடிபட்டு இருக்கும். அதனை கொண்டு மற்றோர் S400 யில் தொழில்நுட்ப ரீதியாக ஏதேனும் சில்மிஷம் செய்யலாம் என்கின்றனர் நம்மவர்களின் பார்வையில்.இதற்கு சாத்தியம் உள்ளதா என்றால்…..இந்த கேள்வியை வேறு விதமாக கேட்க வேண்டும்.. ஏனெனில் இவ்விதம் செய்யக்கூடியவர் சீனர்கள். உதாரணமாக நம் இந்திய விமானப் படை விமானங்கள் பலவும் ரஷ்ய தயாரிப்பு ரகங்களாகவே இருந்த சமயத்திலிருந்தே மிக் ரக விமானங்கள் முதல் சுகோய் சூ ரக விமானங்கள் வரை இந்திய ராணுவத்தினர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் என்பது நாம் நன்கு அறிந்ததே.இது போலவே சீனா ரஷ்ய தயாரிப்பு விமானங்களை …..

சிலதை விலை கொடுத்து வாங்கி….பலதை தொழில்நுட்ப பண்புகளை திருடி கட்டமைத்து வைத்திருக்கிறார்கள்.அதில் சுகோய் சூ ரகங்களும் அடங்கும்.கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு இந்திய விமானப் படை விமானங்கள் சில தொடர்ச்சியாக விபத்தில் சிக்கிய நிகழ்வுகளை நாம் கேள்வி பட்டிருப்பதாக நினைவில் வைத்திருக்கிறோம்.அந்த சமயத்தில் எல்லாம் தொழில்நுட்ப கோளாறு என்பதாகவே தகவல் வெளியாகியுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளியானதில்லை. இந்த தொழில்நுட்ப கோளாறுகளை உண்டாக்கியதே மேற்படி சீனா தான் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….. அதனால் தான் நிலப்பரப்பில் நன்கு இயங்கும் விமானங்கள் கூட கடற் பரப்பில் அல்லது கடற் கரை ஒட்டிய இடங்களில் மாத்திரமே விபத்தில் சிக்கியதாக சொல்கிறார்கள்.

சீனா ஏதேனும் மின்னணு உபகரணங்களை கொண்டோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமாகவோ இதனை நுட்பமாக செய்ததா என்று ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்து சில பல திரிசமன்களை கண்டு பிடித்து இருக்கிறார்கள்.அதன் வெளிப்பாடே… இந்த முறை ரஷ்யாவிடம் இல்லாமல் அமெரிக்காவிடமும் செல்லாமல் ஃபிரான்ஸிடம் இருந்து ரஃபேல் விமானங்களை வாங்கியதாகவும் தகவல் உண்டு. காரணம் ஃபிரான்ஸிடம் இருந்து 1980 முதலே விமானங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம் நாம்.

வேறோர் சுவாரஸ்யமான விஷயமும் இதில் இருக்கிறது. இன்று உலக அளவில் பெருமளவு பயன்பாட்டில் இருக்கும் மிஃராஜ் 2000 போர் விமானம் அதன் தயாரிப்பு நிலையில் இருந்த போதே அதாவது ப்ரோடோ-டைப் நிலையிலேயே அதன் தரவுகளை கொண்டே அதன் மீது நம்பிக்கை வைத்து இந்தியா அவற்றை கொள்முதல் செய்து வாங்கி இருக்கிறது.சரியாக சொன்னால் அந்த சமயத்தில் பிரான்ஸ் கூட தங்கள் விமானப் படையில் இந்த ரக விமானங்களை தேர்ந்தெடுத்திருக்கவில்லை அப்போது.

நம்மவர்களின் கணிப்பை அந்த விமான ரகம் பொய்யாக்கவில்லை. பிச்சி உதறியிருக்கிறது பல இடங்களில் பல சமயங்களில்….. இன்றளவும் துருக்கிக்கு இந்த ரக விமானங்கள் மீது பயம் அதிகம்.நம் விஷயத்திற்கு வருவோம்.மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் சீர்தூக்கி பார்த்தால் S400 வான் பாதுகாப்பு சாதனங்களை முடக்க ஏதேனும் திட்டத்தை சீனா கைவசம் வைத்திருக்குமா என பலரும் சந்தேகம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் ரஷ்யாவுக்கும் அந்த உதைப்பு உள்ளூர உண்டு.இந்த சந்தேகத்தை உறுதி படுத்தும் விதமாக……. சீனாவின் சில நகர்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.சீனாவிடம் பிரத்தியேகமான ஒரு படை பிரிவு உள்ளது. அதன் பெயர் VLA-SSF என்பதாகும். இவர்கள் மின்னணு உபகரணங்கள் கையாள்வதில்….. சைபர் தாக்குதல் நடத்துவதில்…… கைதேர்ந்தவர்கள் என பெயர் எடுத்தவர்கள். 2015 ஆம் ஆண்டு முதல் சீனாவில் செயல்பாட்டில் உள்ள இவர்கள்…..

சீனாவின் வடகிழக்கு பகுதியில் அதாவது ஜப்பான் தென் கொரியா ஒட்டிய சீன பகுதிகளில் தளம் அமைத்து செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் ஒரு பிரிவினரை தனியே பிரித்தெடுத்து இரண்டு பகுதிகளாக ஆக்கி ஒரு பகுதியினரை தஜிகிஸ்தானிலும் மற்றோர் பகுதியினரை திபெத்தை ஒட்டிய பிராந்தியத்தில் தங்கவைத்து இருக்கிறார்கள் தற்போது… இந்த நகர்வு இந்தியா நிலை நிறுத்த உள்ள S400 வான் பாதுகாப்பு சாதனங்களில் வீச்சுக்குள்ளாக வரும் படியாக இருக்கிறது என்கிறார்கள்.

இதில் இவர்களுடைய நோக்கம் முற்று முழுதாக S400 வான் பாதுகாப்பு சாதனங்களை செயலிழக்க செய்வதாக இருக்காது… ஆனால் அதேசமயம் குறிப்பிட்ட சில சமயங்களில் இடைமறிப்பு செய்யக்கூடிய விதத்தில் இருக்கும் என நம்மவர் மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.சரியாக சொன்னால் S400 இருக்கும் இடம் இந்தியாவாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தும் பொறிமுறை இவர்கள் வசம் இருக்கும் என்பது போலான தோற்றத்தை இது ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

ஆனால்………நம் வசம் உள்ள வித்தகர்கள் இதனை தூக்கி சாப்பிடும் விதமாக வேறோர் காரியத்தை செய்து இருக்கிறார்கள்.இவ்வளவு நுணுக்கமாக வால் பிடித்து விபரம் சேகரிக்க தெரிந்த எங்களுக்கு அதனை எதிர் கொள்ளும் வழிவகைகளை ஆராயாமல் இருந்திருப்போமா என்று கேள்வி கேட்டு அதிரடித்திருக்கிறார்கள். அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ள பட்ட உச்ச பட்ச செயல் திறன் கொண்ட சாதனம், S400 வான் பாதுகாப்பு சாதனம் ஆகும். அதனையே ஒரு வழி பண்ணி விட்டதாக இறுமாப்புடன் வலம் வந்து கொண்டிருந்த சீனாவை கதிகலங்க செய்திருக்கிறார்கள் நம்மவர்கள்.கர்ணனுக்கு கவச குண்டலம் போல நம்மவர்களின் கைவண்ணத்தில் ஒரு பிரத்யேக மின்காந்த புல கவசத்தை இந்த S400 வான் பாதுகாப்பு சாதனங்களுக்கு கொடுக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…இதனை கேள்விப்பட்ட ரஷ்யாவும் ஆடித் தான் போய் இருக்கிறது.

இது போக EMP எனும் தொழில்நுட்ப பண்புகளில் இந்தியா புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது என்கிறார்கள். இந்த EMP என்பது எலக்ட்ரோ மேங்னடிக் பல்ஸ் என நம்மவர்கள் பல் தெரிய சிரிக்கிறார்கள்.ஒரு சாம்பிள்ளுக்கு தான் சீன மென் பொருள் ஊடாக பயணித்து சில தகவல்களை ஆதாரங்களுடன் சேகரித்து கொண்டு வந்ததாகவும் சொல்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால்……. ஹேக் செய்பவர்களின் கணினி வழியாகவே அவர்களின் கண் முன்னே இதனை நுட்பமாக செய்து இருக்கிறார்கள்.இதனை இப்படி புரிந்து கொள்ளலாம்…….

நம் ஊர்களில் பின் நம்பர் மாற்ற சொல்லி கேட்கும் ஏடிஎம் கொள்ளையர்கள் போல செயல்பட்டு வந்த சீன மென்பொருள் தொழில்நுட்பவியளாரர்களின் கணக்கு ஊடாகவே மொத்த தொகையும் வாரி சுருட்டி கொண்டு வந்திருக்கிறார்கள் நம் வித்தகர்கள்.அமெரிக்காவும் மூக்கு விடைக்க வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது….. ஏனெனில் அவர்களுக்கும் இந்த S400 பொறிமுறை அலாதி பிரியம் உண்டு. இதில் கரை கண்டவர்கள் நம்மவர்கள் என்றால் அதனை காட்டிலும் வேறோர் நுட்பமான பொறிமுனை நம்மவர்கள் கண்டு பிடித்து இருக்கக்கூடும் என்பது அவர்களின் கணிப்பு.அதனை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ரீதியிலான முனைப்பு அவர்களிடம் காணப்படுகிறது என்கிறார்கள் உலக அளவிலான ராணுவ சாதன தொழில்நுட்ப அறிஞர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here