கிரீஸ் நாட்டில் சீனாவிற்கு இந்தியா வைத்த செக்..!

இந்திய ராஜதந்திரம். இன்று இதன் மறுபெயர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எனும் அளவிற்கு இவரது செயல்பாடுகள் ஆகச் சிறந்த மதிநுட்பம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்கு உதாரணம் தான் கடந்த வாரத்தில் இவர் மேற்கொண்ட கிரீஸ் நாட்டிற்கான பயணம். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அது புதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. இவர் அங்கு சென்ற சமயத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து கணக்கினை தொடங்கி வைத்தார்.
கிரீஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து பல செயல் திட்டங்களை கிரீஸ் நாட்டில் செயல்படுத்தி வந்திருக்கிறார்கள். கிரீஸ் நாட்டின் புகழ் பெற்ற பைரையூஸ் துறைமுகத்தை தரம் மேம்படுத்தி புதுப்பித்து தந்திருக்கிறது சீனாவின் கோஸ்கோ நிறுவனம். இதற்கான செலவு 660 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள். இதனை சீனா தனது BRI திட்டத்தின் கீழ் கொண்டு வர விரும்புகிறது.

ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டு கிரீஸ் தற்போது இதன் பாதகங்களை உணர்ந்து பின்வாங்க ஆரம்பித்து விட்டனர்.காரணம் துருக்கியோடு கூட்டு சேர்ந்து கச்சா எண்ணெய்யை எடுக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வந்திருக்கிறது சீனா. ஏதோ காரணத்தால் சீனாவும் துருக்கி மற்றும் கிரீஸ் இடையே முரண்பாடுகள் தோன்றிட துருக்கி தன்னிச்சையாக கிரீஸூக்கு சொந்தமான இடத்தில் வரும் கடல் படுகையில் எண்ணெய் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரீஸ்….. ஆரம்பத்தில் அமெரிக்காவிடம் போய் உதவி கேட்டு நிற்கும் சமயத்தில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜோபைடன் பதிலேதும் சொல்லாமல் காலம் தாழ்த்தி வர துருக்கியின் அடாவடியாக கிரீஸினுடைய சில தீவுகளை ஆக்ரமிப்பு செய்ய முயற்சிகளை மேற்கொண்டது.

அவை அனைத்துமே பண்டைய நாட்களில் ஒட்டமான் பேரரசு கீழ் இருந்த பகுதிகள் என்று அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கு சைப்ரஸ் தீவினை உதாரணமாக காட்டுகிறது துருக்கி. இந்த தீவில் துருக்கிய மொழியும் உண்டு….. கிரேக்க மொழியும் உண்டு…. ஆனால் கடந்த காலத்தில் இஃது ஒட்டமான் பேரரசு கீழ் இருந்த பகுதிகளில் ஒன்றாகும். அதனடிப்படையில் கிரீஸ் வசம் தற்போது உள்ள பல தீவுகள் தங்களுக்கே சொந்தம் என்கிறது துருக்கி….. கிட்டத்தட்ட சீன பாணியில்…

இந்த இடத்தில் காட்சிக்குள் புகுந்தது இந்தியா.
அமெரிக்கா கூப்பிட்டு பார்த்தும் வராத காரணத்தால் இந்தியாவிடம் உதவி கேட்டு கடந்த மார்ச் மாதம் இறுதியில் முடிவு எடுக்கப்பட்டு கோரிக்கை ஒன்றை முன் வைத்தது கிரீஸ். உடனடியாக பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது பலம் பெற்று நம் வெளியுறவு துறை அமைச்சர் திரு சுப்பிரமணியன் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக கிரீஸ் செல்லும் அளவிற்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

அங்கு சென்று அவர் கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரீஸ் கிரியாகோஸ் மிட்ஸோடாக்கிஸ் சந்தித்து பேசினார்.
சீனா வசம் உள்ள துறைமுகத்தை மீட்கும் வகையில் பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பிறகு கிரீஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் நிகோஸ் டென்டியாஸ் உடன் சேர்ந்து மஹாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்.
பேயறைந்தார் போல் முழித்து கொண்டு இருக்கிறது துருக்கி. இதற்கு காரணம் கிரீஸ் நாட்டின் பாதுகாப்பிற்கு ரஃபேல் விமானங்களை பிரமோஸ் ஏவுகணைகளுடன் நிலை நிறுத்த அதிரடியாக ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள். இது போக பல இந்திய தயாரிப்பு கண்காணிப்பு ரேடார் உபகரணங்களை கிரீஸ் நாட்டில் பொருத்தி இயக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி இருக்கிறது.

கிரீஸ் எதிர்பார்த்ததும் இதுவே, இந்திய இஸ்ரேல் உறவு தங்கள் நாட்டின் பாதுகாப்பு முறைமைகள் பலப்படுத்தும் என நம்புகிறது கிரீஸ். இதற்கு குந்தகம் இல்லாமல் காரியங்களை வேகவேகமாக முன்னெடுத்து வருகிறது இந்திய அரசு.
இந்த நடவடிக்கைகளின் மூலம் இரண்டு நாடுகளுக்கு ஒரு சேர பதில் சொல்லி இருக்கிறார் நம் ராஜதந்திரி. ஒன்று துருக்கி மற்றொன்று சீனா. துருக்கி பாகிஸ்தானை முன் வைத்து காஷ்மீர் பகுதியில் இந்தியாவிற்கு எதிராக காய் நகர்த்த……. சீனா இலங்கையில் இதே காரியத்தை செய்ய.. இரண்டுக்கும் ஒரே சேர பாடம் நடத்தி இருக்கிறார் இவர்.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் குறித்து நம்மில் பலருக்குமே சரியாக தெரியவில்லை.

இவரது தந்தையார் கிருஷ்ணசாமி சுப்பிரமணியம் இந்திய குடிமைப் பணியில் அதிகாரியாக இருந்து இருக்கிறார்.இவரது தம்பி சஞ்சய் சுப்பிரமணியம் அமெரிக்க தேசிய நூலகத்தில் ஜான் க்ளுஜ் மையத்தின் தலைவராக இருக்கிறார்.
1955 ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த இவர் படித்து முடித்து விட்டு இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக தான் பணியில் சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் ரஷ்ய செஞ்சதுக்கத்தில் வேலை. ஏழு ஆண்டுகள் மிக கடினமான பணி . பின்னர் ஜப்பான் சீனா என பல இடங்களில் பணி காலத்தில் கோலோச்சி இருக்கிறார்.
இவர் சீனாவில் பணியில் இருந்த சமயத்தில் தான் 1959 பிறகு நின்று போன கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் 1981 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர பிரம்ம பிரயத்தனங்களை செய்தார். சாதித்தும் காட்டினார்.
இன்று வரை இது தடையின்றி தொடர இவரே முழு முதற் காரணம். கடந்த ஆண்டு நடைபெற்ற சீன எல்லை மோதலின் போது நம் இந்திய ராணுவத்தினர் கைலாஷ் மானசரோவர் பகுதிகளை கைப்பற்றி விட்டதாகவும் இனி இந்தியர்கள் நேரிடையாக இந்த யாத்திரை மேற்கொள்ள முடியும் என்று சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் சொல்லி இருந்தார்கள்.

ஆனால் நிஜம் அது வல்ல…. இன்றளவும் யாத்திரீகள் செல்லும் இந்த மலையின் அடிவார 54 கிலோமீட்டர் பகுதி சீனா வசம் தான் இருக்கிறது. நம் இந்திய எல்லையில் இருந்து சுமார் 49 கிலோமீட்டர் தொலைவு நடந்தோ அல்லது சீன ஏற்பாடு செய்து இருக்கும் வாகனங்களிலோ தான் நாம் செல்ல முடியும். அதேசமயம் கைலாஷ் மலைத்தொடர் பலவற்றை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றியதும் நிஜம். அவை இந்த மலைத்தொடரின் பல மலை முகடுகள்.

யாத்திரை செல்ல இன்றும் சீனா அனுமதிக்கிறது. அதற்கு ஏதும் தடை செய்யவில்லை. காரணம் இவர்.
சுப்பிரமணியம் ஜெய்சங்கர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் ஜப்பானிய பெண்மணி. பெயர் கியோக்கோ. அவர்களின் முறை பிரகாரமே அவர்கள் சம்பிரதாய விஷயங்களை கொண்டே திருமணம் செய்து கொண்டார் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர் கடந்த ஆண்டு எழுதி வெளிவந்த புத்தகம் சக்கை போடு போட்டது. இந்திய வழி என்பதான தலைப்பில் இவர் எழுதி இருக்கிறார். பல தகவல்கள் சுவாரஸ்யமானது.
சமயம் கிடைக்கும் பட்சத்தில் படித்து பாருங்கள் சேந்தன் பகத் எழுதும் புத்தகம் போல சுவாரஸ்ய நடையில் படிக்க சுலபமாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here