நாம் வாழும் இந்த உலகில் ஆகச் சிறந்த பிரதானமான கண்டுபிடிப்பு என சக்கரத்தினை சொல்வர். கிட்டத்தட்ட அதற்கு சமமான ஒரு கண்டுப்பிடிப்பு உண்டு என்றால் அது வெகு நிச்சயமாக குறை கடத்தியை தாராளமாக சொல்லாம். அதாவது செமி கண்டெக்டார்ஸ்.
இன்றைய உலகின் உயிர் நாடி…அல்லது இன்றைய உலக இயக்கத்தின் அடிநாதமாக இருப்பது இந்த ஒரு பொருள் தான்.
சீனா உலக வல்லரசு நாடுகளை புறங்கையால் தள்ளி இன்று முன்னேறி இருப்பதற்கும் இந்த ஒரு பொருளின் உற்பத்தியும் மிக முக்கியமானதொரு காரணம் கூட.
ஆனால் உலகின் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதி தன்வசம் வைத்திருக்கும் நாடு சீனா அல்ல….அது தைவான். தைவான் தான் கண்டடைந்த செமி கண்டெக்டார் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு… சரியான சொன்னால் சீனாவின் பிரத்தியேக பாணியிலான பிரதி பண்ணும் வித்தை மூலம் தனதாக்கிக் கொண்டது.
உலகின் மிண்ணனு சாதனங்களில் இருந்து விண்வெளி பயணம் வரை இந்த ஒரு பொருள் தான் ஆதார சுருதி.
இதற்கு உதாரணம் தான் இன்று நாம் பயன்படுத்தும் செல்போன்களில் உயர் தரம் வாய்ந்த சிப் செட். இவை இன்றைய தேதியில் சீனா தான் கோலோச்சி வருகிறது. ஸ்நாப் டிராகன் தெரியாதவர்கள் யாருமே இல்லை என்கிற நிலை தான் தற்போது வரை இருக்கிறது. இதன் தரம் தான் செல்போனில் விலையை தீர்மானிக்கிறது.
சீனா பொருட்கள் தரம் அற்றவை என்று யாரேனும் ஒருவர் சொன்னால் அவர் வெகு நிச்சயமாக பழங்கால மனிதர் என்று கூறிவிடலாம். காரணம் அவர்கள் வேண்டும் என்றே அவ்வாறு தயாரிக்கிறார்கள். இதற்கு அவர்கள் கொடுத்து இருக்கும் தத்துவத்தின் பெயர் அலாரா. ALARA “As Low As Reasonably Achievable.”
ஒரு பொருளின் பயன் பாட்டு காலத்தை பொறுத்து அதன் தரம் நிர்ணயம் இருந்தால் போதும் என்பது கோட்பாடு.
ஆதலால் அவர்கள் இந்த கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உலகின் மற்ற நாடுகளில் பயன் பாட்டில் இருந்துவரும் சமாச்சாரங்களை ரிவர்ஸ் இஞ்சினியரிங் முறையில் உற்பத்தி செய்கிறார்கள்.
இதே போன்றதொரு காரியத்தை இந்தியாவும் செய்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்னமோ நிஜம். இந்தியா அதன் மருத்துவ மற்றும் மருந்து பொருட்களை இந்த முறையில் உற்பத்தி செய்கிறார்கள் என்று குறை சொல்லி கொண்டு திரிகிறார்கள் அவர்கள்.
கிட்டத்தட்ட இந்தியாவும் சீனாவும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இதில் ஈடுபடுகிறார்கள் என்று மேற்கு உலக நாடுகள் சொல்லி வந்த நிலையில் இந்தியா தன்னிச்சையாக தனது சுய முயற்சியால் கொரானா நோய் தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதன் தொழில்நுட்ப வல்லமை கொண்டே சாதித்தது.
இது முதல் படி என்றால் தற்போது இந்தியா, தைவானுடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்ற அடிப்படையில் செமி கண்டெக்டார்ஸை உருவாக்க போகிறார்கள். அதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து உற்பத்தி நிலையை எட்டிப் பிடித்து இருக்கிறார்கள் நம்மவர்கள். இது குறித்த காலத்தில் எல்லாம் சரியாக நடந்தால் அடுத்து வரும் பதினைந்து ஆண்டுகள் நாம் தான் இந்த உலகம்.
இவை வெறும் ஆரம்பம் மட்டுமே என்பது தான் இதில் உள்ள கூடுதல் சிறப்பு தகவல்.
ஏனெனில் இன்றைய தேதியில் உலகம் மின்சார வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. இரு சக்கர வாகனம் முதற் கொண்டு கனரக வாகனங்கள் வரை மின்சார வாகனங்களாக மாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு புவி வெப்பமடைதல் என்பதும் ஒரு காரணம்.
இந்த தளத்தை மிகச் சரியான விதத்தில் பயன் படுத்த இந்தியா முனைப்புடன் செயலாற்றி வருகிறது. அதன் ஆரம்ப புள்ளி இந்த செமி கண்டெக்டார் உற்பத்தி.
பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை….. சிப் இல்லாருக்கு எவ்வுலகமும் இல்லை என்பது தான் இனி வரும் நாட்களில் இருக்கப் போகும் சொல்லாடல்.
இதில் இந்தியா தற்போது இரண்டு படிகளில் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தைவான் மற்றும் மேற்கு உலக நாடுகள் நான்கு படிகளில் இருக்கிறது. சீனாவோ ஆறாவது படிக்கட்டில் நின்று கொண்டு அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா இன்னும் இரண்டு ஆண்டுகளில் இத்துறையில் சீனாவை விஞ்ச திட்டமிட்டு அதற்கான செயல்பாடுகளில் இறங்கி இருக்கிறது என்பது இதில் உள்ள சாகசம்.
மேற்கத்திய நாடுகளை தாண்டி சீனா முன்னிலை வகிக்கும் காரணம் ஆள் பலம். அதனால் மிக குறைந்த உற்பத்தி செலவு. அடுத்ததாக தண்ணீர். கொஞ்சம் நஞ்சம் அல்ல. இப்படி புரிந்து கொள்ளலாம் நம் நகக்கண் அளவில் உள்ள சிப் செட் தயாரிக்க சுமார் 50 கேலன் தண்ணீர் தேவை என்பதாக ஒரு கணக்கு உண்டு. இந்த அதீதமான சுத்திகரிப்பு செய்யும் காரணங்களுக்காக தான் மேற்கு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து இந்த பொருளை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வேலைக்காக தான்.தனது அதீதமான இந்த தண்ணீர் தேவைக்காகத்தான் சீனா திபெத்திய பிராந்தியத்தில் வலுவாக கால் ஊன்றி நிற்கிறது. மிகப் பெரிய அணைக்கட்டுகளை ஏராளமான எண்ணிக்கையில் கட்டிக் கொண்டு இருக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
இந்தியா இந்த விஷயத்தை… அதாவது உற்பத்தி செய்யும் முறைமையை மாற்றுருவாக்கம் செய்து கொண்டு இருக்கிறது . மிகக் குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் அளவில் அதன் தொழில்நுட்ப பொறிமுறைகளை மாற்றம் செய்து கொண்டு இருப்பதாகவும் கிட்டத்தட்ட அதில் வெற்றியும் பெற்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று இந்தியா வேறு மிக முக்கியமான ஒரு தொழில்நுட்ப பண்புகளை ஆராய்ச்சி செய்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது . கனிம உலோகவியலில் அது மிகப் பெரிய தாக்கத்தை வரவிருக்கும் நாட்களில் ஏற்படுத்தும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
ஏற்கனவே வெவ்வேறான தளத்தில் வைத்து அதனை சாதாரண அறிவிப்பு போல் சொல்லி இருக்கிறது .
இனி லித்தியம் அல்லது லித்தியம் பாஸ்பரஸ் ( lithium ferrous phosphate) பேட்டரிகளுக்கு பதிலாக அலுமினியத்தை மூலப்பொருட்களை கொண்டு பவுடர் பேட்டரிகளை நமது நாட்டில் கண்டுபிடித்துள்ளனர். இது தற்போது பயன்பாட்டில் உள்ள அதி நவீன பேட்டரிகளை காட்டிலும் அதிகமான கொள்ளவும் நீண்ட கால சேமிப்பாகவும் மிகக் மிக குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வகையில் இருக்கிறது என்கிறார்கள். இது சர்வதேச அளவில் ஒரு மைல் கல் சாதனையாகும்.