அதிரடி காட்டிய இந்தியா! அடிபணிந்த ஐரோப்பா!!

சீனாவிலிருந்து கடந்த 2019ம் ஆண்டு பரவத்துவங்கிய கொரோனாவைரஸ் உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை பலிவாங்கியது. உலகின் ஒவ்வொரு தனிமனிதனும், நோய் அல்லது பொருளாதாரம் என்று ஏதோ ஒரு விதத்தில் பாதிப்புக்குள்ளானர்கள். கொரோனா நோயால் இறப்பிலும், பாதிப்பிலும் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியா கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்தது.

ஏற்கனவே தடுப்பு மருந்தை தயாரித்து வைத்துக் கொண்டு, தனது நாட்டின் நூற்றாண்டு விழாவின் போது, உலகின் அத்தனை நாடுகளையும் பொருளாதார ரீதியாக வீழ்த்திவிட திட்டமிட்டு சீனா கொரோனா வைரஸை பரப்பியதாக உலக நாடுகள் ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு தகுந்தார் போல சீனாவில் வைரஸ் பரவல் மிககுறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.

கொரோனா பரவலால் மருந்து உபகரணங்கள், தடுப்பூசி போன்றவற்றின் விற்பனை மூலம், பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்க்கலாம் என்ற சீனாவின் எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறவில்லை. குறிப்பாக மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா, தானே இரண்டு தடுப்பூசிகளை மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்தது, சீனாவை மட்டுமல்ல, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளையும் கடும் அதிர்ச்சியில், ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. தடுப்பூசி உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பிய, அமெரிக்க, சீனா ஆகிய நாடுகளுக்கு போட்டியாக உருவாகிய இந்தியா, பல ஏழை நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக கொடுத்து அசத்தியது.

நாடுவிட்டு நாடு சொல்வதற்கு கட்டுப்பாடுகள் :

கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் குறையத்துவங்கிய நிலையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தங்கள் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு வருவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மற்றொரு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்கு வசதியாக 2021 ஜூலை 1ம் தேதி முதல் கிரீன் பாஸ் என்ற அனுமதி சீட்டு நடைமுறையை செயல்படுத்தியது. இதனை பெறுவதற்கான நடைமுறையில் ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே கிரீன் பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது. இதில் வேண்டுமென்றே, இந்தியாவின் கோவேக்சின், கோவிஷீல்டு மருந்துகள் புறக்கணிக்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவால் இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தியா தங்களிடம் வந்து கெஞ்ச வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால், இந்தியா அதிரடி எச்சரிக்கை ஒன்றை ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்தது.

இந்தியாவின் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் போட்டவர்களை ஐரோப்பாவில் அனுமதிக்க வேண்டும், இல்லையென்றால் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வருபவர்கள், வேறு எந்த தடுப்பூசி போட்டிருந்தாலும், அதை ஏற்காமல் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள். எங்கள் தடுப்பூசிகளை அனுமதித்தால் மட்டுமே உங்களின் தடுப்பூசிகளை அனுமதிப்போம், இல்லையென்றால் உங்கள் தடுப்பூசிகளுக்கும் எங்கள் நாட்டில் அனுமதி இல்லை என்ற எச்சரிக்கையே அது. இதற்கு உடனடியாக பலன் இருந்தது. ஜெர்மனி, ஸ்லோவேனியா, ஆஸ்திரியா, கிரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி போட்டவர்களுக்கு தங்கள் நாடுகளுக்கு வர அனுமதியளித்துள்ளன. விரைவில் மற்ற நாடுகளும், வழிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான தலைமை இருந்தால், எந்த நாட்டிற்கும் நாம் அஞ்சத் தேவையில்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here