அமெரிக்காவிற்கு ‘பளார்’ கொடுத்த இந்தியா!வியப்பில் சர்வதேச சமுதாயம்!!

கடந்த வாரத்தில் நடந்த இரண்டு முக்கியமான சம்பவங்களை இங்கு உள்ள ஊடகங்கள் முழுமையாக வெளியிடவில்லை. அதில் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமாச்சாரம்.

ஆனானப்பட்ட அமெரிக்காவை வெளியுறவுத் துறை அமைச்சர் ஒருவர் ஏகத்துக்கும் வாரியிருந்தது இதுவே முதல் தடவை. அந்த நற்காரியத்தை செவ்வனே பூர்ணமாக செய்து முடிந்து இருந்தார் நம் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

இது வரை காலமும் அமெரிக்கா தான் மற்றைய நாடுகளில் தனது மூக்கை நுழைத்து கேள்வி கேட்டு கொண்டு அழிச்சாட்டியம் செய்து வந்தது. அதற்கு அவர்கள் கேடயமாக பயன்படுத்தியது மனிதஉரிமைமீறல் என்கிற ஒற்றை சொல்லாடல்.

கடைசியாக இலங்கையை இது சொல்லித் தான் பாழுங்கிணற்றில் தள்ளினார்கள்.
இலங்கை இன்று மீள முடியாத கடன் சுமையில் சிக்கி சின்னா பின்னம் ஆகி கொண்டு இருப்பதும் இதன் பொருட்டு தான். உதாரணமாக உலக வங்கி என்கிற மாய வலை வங்கியில், IMF ஊடாக 17 வது தடவையாக கடன் வாங்க பிரம்ம பிரயத்தனங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்.

கடன் இல்லாமல் அவர்களுக்கு விடிவு காலம் இல்லை. கடன் வாங்கினால் வெகு நிச்சயமாக அது மக்கள் தலையில் உடனடியாக விழும். ஏற்கனவே கொதித்து போய் இருப்பவர்கள் மத்தியில் விலைவாசி உயர்வை அமல் படுத்த பட்டால்…….என்ன நடக்கும். ஆனால் அமல் படுத்தப்பட்டால் மட்டுமே கடன் கிடைக்கும் என்கிற நிபந்தனை அடிப்படையில் அங்கு அவர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது.

சுமார் இருபது மில்லியன் மக்கள் அதாவது இரண்டு கோடி பேர், வெறும் இருபது பேர் கொண்ட கும்பலால் சிதைக்கப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

காரணம்…….. கடன் வழங்க தடை இருக்கிறது. இந்த தடையை இலங்கையில் நடந்த இனப்படுகொலையை காரணங்காட்டி தான் ஆட்டம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் ஒரு சாரார். கிட்டதட்ட பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இன்னமும் விடிவு காலம் இல்லை…….. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இன்றளவும் நீதி கிடைக்க வில்லை…….. அவர்களுக்கான நிதியும் கிடைக்க வில்லை. (நன்கு கவனியுங்கள்….. இங்கு உள்ள நிதிகளை பற்றி பேசவில்லை…….)
ஆனால் அதனை சொல்லித் தான் இன்று உள்ள இலங்கை மக்களை வாட்டி வதைத்துக்கொண்டு வருகிறார்கள்.

நம் விஷயத்திற்கு வருவோம்.

உக்ரைன் ரஷ்யா விஷயத்தில் இந்தியா யார் பக்கம்….. என்பது தான் பில்லியன் டாலர் கேள்வி என்று வெள்ளை மாளிகை கேலி பேச…… அவ்வப்போது நம்மை இது குறித்து சீண்டி வர…. சிலிர்த்து சீறி எழுந்து இருக்கிறார்கள் நம்மவர்கள். அப்படியே ஆடிப் போய் இருக்கிறது பைடன் நிர்வாகம். விஷயம் கொஞ்சம் சுவாரஸ்யமானது.

இதனை முதலில் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்து கொள்ள முடிகிற சமாச்சாரமாக இருக்கிறது.

உக்ரைன் ரஷ்யா விஷயத்தில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும்….. என்று கடந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஆளாளுக்கு ஒரு தேதி சொல்லி காப்ரா படுத்த….. வாயே திறக்காமல் மௌனமாக பவனி வந்தது ரஷ்யா. வெறுத்து போனார்கள் மேற்கு உலக வாசிகள். கட்டக்கடைசியாக பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி என்று நாள் குறித்து இருப்பதாக சூடம் ஏற்றி சத்தியம் செய்தது உளவு துறை வட்டாரங்கள்.

ஏமாந்து போகக்கூடாது என்று வந்தாரா….. அல்லது போக்கு காட்ட வந்தாரா விளாடிமிர் புடின்…..தெரியாது…. ஆனாலும் உக்ரைன் மீது போர் பிரகடனம் அறிவித்தார்.

பின்னர் இப்படி விஷயம் நடந்ததையே மறந்து விட்டவர் போல படைகளை நந்தை வேகத்தில் நடந்த நொந்து போனது அமெரிக்க தலைமை.

அவர்களை பொறுத்தவரை உக்ரைன் சுண்டைக்காய் தேசம்…. ஓர் இரவில் வந்து ரஷ்யா வாரி சுருட்டி விடும்…. என்றெல்லாம் கணக்கு போட்டு வைத்து இருக்க…, புடின் என்னமோ ராணுவ துருப்புக்களை அணிவகுத்து நிற்க செய்து உக்ரைனில் கொலு வைத்து விளையாட்டு காட்டி வந்தார்.

மேற்கு உலக நாடுகள் பொய் கணக்கு சொல்லவில்லை…… இந்த உலகில் மிகவும் வலிமையான…. மிகப்பெரிய காலாட்படையை வைத்து இருக்கும் தேசம் என்று பார்த்தால் அது ரஷ்யா மாத்திரமே. அப்படி இருக்க போர் பிரகடனம் அறிவித்த 32 நாட்கள் வரை ஒரு உக்ரைனிய நகரத்தையும் கைப்பற்றி இருக்கவில்லை ரஷ்யா.

இது யுத்த முறையில் மிகப்பெரிய ராஜதந்திரம் என்கிறார்கள்.

ஏன்?

ரஷ்யாவிடம் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் திட்டம் எப்போதும்…. என்றென்றும் இருந்தது இல்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

அது தனது தேசத்திற்கு தற்போதைக்கு செலவு பிடிக்கும் திட்டம் என்று நன்கு புரிந்து வைத்து இருந்தார் புடின் என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி…. தான் சிறந்த நாட்டு பற்று மிக்க குடிமகன்…. உக்ரைனிய வீரர்கள் போர் தந்திரங்களை கரைத்து குடித்தவர்கள்… அசகாய சூரர்கள் என்று ஒரு பக்கம் காமெடி பண்ணிக் கொண்டு இருக்க……. மேற்கு உலக நாடுகள் ஒரு பக்கம் தங்கள் பங்கிற்கு தங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை பேச விட்டு….. அதற்கு எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் தன்னை இன்னமும் மேற்கு உலக நாடுகள் நடிகனாக….. நிஜத்தில் யாரோ ஒருவர் டைரக்ஷன் செய்ய தான் இன்னமும் உலக நாடக மேடையில் நடித்துக் கொண்டிருப்பதாக புரிய வர மனிதர் ரொம்பவே ஒடிந்து போனார்.

இந்த சமயத்தில் தான் இந்தியா தனக்காக குரல் கொடுக்க வேண்டும்…… இந்தியா எப்போதும் சோவியத் யூனியன் பக்கம் நிற்கிறது…… அந்த வகையில் உக்ரைனும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாட்டின் ஒரு பகுதி தான் என்று மூக்கால் அழ…… அப்போதும் அசைந்து கொடுக்கவில்லை இந்தியா.

உக்ரைன் அதிபர் ஒரு பக்கம் கெஞ்சி கூத்தாடி கொண்டு இருக்க…… ஜோபைடன் நாளைய வரலாற்றை எழுதும் சமயத்தில் இந்தியா தவறான பக்கம் நின்றதாக எழுத நேரும் என புருடா விட மூச்சு காட்டவில்லை நம்மவர்கள்.

நடந்த இந்த சம்பவங்கள் அத்தனைக்கும் பின்னும் ஒரு காரணம் இருந்தது.
இந்தியா எப்போதும் ரஷ்யா பக்கம் தான் என மேற்கு உலக நாடுகள் பகடி செய்ய….. அதன் ஊடகங்களில் இந்தியாவை ஏளனம் செய்ய……ஒருவர் மாற்றி ஒருவர் என இந்திய மௌனத்தின் பின்னணியை அறிந்த கொள்ள ஆர்வம் காட்டினார்களே தவிர அமெரிக்க வல்லாதிக்க போக்கை கண்டிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் பெற இருப்பதாக அதிகார பூர்வமாக அறிவித்து அதிரடி காட்டியதோடு இல்லாமல் என்ன மாதிரியான எதிர் வினை வருகிறது என்று நாடி பிடித்து பார்த்து கொண்டு இருந்தது.

வாகாய் வந்து சிக்கினார் உரியவர்கள்.

டாலர் வர்த்தகம் மட்டுமே தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர ஐரோப்பிய ஒன்றிய நாணயமான யூரோ வர்த்தகத்திற்கு தடை இல்லையே என்று நம்மவர்கள் பகடி செய்ய கொஞ்சம் சுவாரஸ்யமானது இந்த கதை களம்.

கொஞ்சம் நுட்பமான நகர்வு இது.

அமெரிக்கா மற்றும் நேச நாடுகள் ரஷ்யா மீது அழுத்தத்தை கொடுக்க பொருளாதார தடை கொண்டு வந்து இருக்கிறார்கள் என்றால் நம்மவர்கள் ஐரோப்பிய நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு யூரோவிற்கு செக் வைத்து விளையாட்டு காட்டி வருகின்றனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் யூரோ வில் தான் வர்த்தகம் செய்கின்றனர்.

இதை தான் நம்மவர்கள் சுட்டி காட்ட….. விழி பிதுங்கி நிற்கிறது அமெரிக்கா. ஐரோப்பிய நாடுகளுக்கு தான் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முனைந்தால் அதன் அஸ்திவாரமே ஆட்டம் காணும்.

இன்று உள்ள சூழ்நிலையில் ரஷ்யா அளவிற்கு இறங்கி விற்பனை செய்ய முடியாது. நம்மூர் போல மானியம் கொடுத்தால் நாறி போகும் அமெரிக்கா.

இந்த இடத்தை தொட்டதால் கதறுகிறது அமெரிக்கா. அதன் ராஜாங்க செயலாளர் அதாவது நம் ஊர் வெளியுறவுத் துறை அமைச்சர் மட்டத்தில் வரும் இந்த பதவியில் உள்ள ஆன்டணி பிலிங்கன் அவ்வப்போது நம் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு போன் போட்டு குடைச்சல் கொடுக்க…… தருணம் பார்த்து இருந்தார் அவரும்.

இந்தியா அமெரிக்கா இடையே ஆன வருடாந்திர 2+2 பேச்சு வார்த்தையின் அது வெடி குண்டாக வெடித்தது. நம் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நேரிடையாகவே அமெரிக்கா அரசாங்கத்தை பார்த்து பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்….. எங்களுக்கும் அமெரிக்க வாழ் குடிமக்களின் மனித உரிமை மீதான அக்கறை உள்ளது என்று சரவெடியை கொளுத்தி போட்டு இருக்கிறார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை இது உண்டாக்கி இருக்கிறது.

இது நாள் அமெரிக்காவை பார்த்து யாரும் இப்படி ஒரு வார்த்தையை முன் வைத்தது இல்லை அதுவும் வெளியுறவுத் துறை அமைச்சர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் நேரிடையாகவே அமெரிக்கா அரசாங்கத்தை பார்த்து இப்படி பகிரங்கமாக கேள்வி எழுப்பியது இல்லை.

அநேகமாக பெய்ஜிங் கண்கள் வெகு நிச்சயமாக ஆச்சரியத்தில் அகலமாக திறந்து இருக்கும்.
இது கிட்டத்தட்ட முன் ஒரு காலத்தில் பாகிஸ்தானோடு அவ்வப்போது பூச்சாண்டி காட்டிக் கொண்டு இருந்ததாக நினைத்தவர்களுக்கு கல்வான் மோதலுக்கு பிறகு அநாயாசமாக விஸ்வரூபம் எடுத்து சீனாவை அடைக்கி நம் வழிக்கு கொண்டு வந்து போது இருந்து பிரம்மிப்பு போல தற்போது அவர்களுக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும்.

சிரித்து கொண்டே வெடி வைத்து விளையாட்டு காட்டும் அளவிற்கா நாம் வளர்ந்து நிற்கிறோம்…… என்று யாரேனும் கேள்வி கேட்டால்…

அதையும் தாண்டி……. என்று தாராளமாக…. அழுத்தந்திருத்தமாக…… தைரியமாக சொல்லுங்கள்.
காரணம்…..

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் முழுவதும் அணி திரண்டு ரஷ்யாவை, உக்ரைன் ஊடாக எதிர்த்தாலும்…… இந்தியா ரஷ்யா பக்கம் நிற்க கூட வேண்டாம்….. நடுநிலை வகித்தாலும் போதும் ஒரு நாளும் அவர்களால் ரஷ்யாவை எந்த காலத்திலும் வெல்ல முடியாது என்கிறார் உலக யுத்த களமுனை வல்லுனர்கள். அப்படி ஒரு விஷயம் இதில் பொதிந்து கிடக்கிறது.

இதனை நம்மவர்கள்…… நம் ராஜதந்திரிகள் மிக நன்கு புரிந்து வைத்து இருக்கிறார்கள்…… அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்……

அதன் பொருட்டே தற்போதைய இந்திய தலைமை தனது வெளியுறவுத் துறை அமைச்சரை விட்டு பேச செய்திருக்க வேண்டும் என்று மதிப்பீடு செய்து இருக்கிறார் அவர்கள். இது சரி என்றால் இந்த நாட்டில் வாழும் நாம் தான் நம்முடைய தேசத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here