அது 1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.இந்தியா விடுதலை பெற்று பதினைந்து ஆண்டுகள் ஆன நிலையில் பிரிட்டிஷார் வருகைக்கு முன்னரே இந்தியா வந்து நிலை கொண்டு இருந்த போர்த்துகீசியர்கள்……. விடாமல் இந்தியாவில் கால் பதித்து இருந்தனர்…… 1510 ஆம் ஆண்டு முதலே கோவா மற்றும் டையூ டாமன் என்கிற இடத்தில் கடற் படை தளங்களோடு தங்கி இருந்த அவர்களை அங்கிருந்து வெளியேற சொன்னது இந்திய அரசு.இது இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகும். குஜராத் கடற்கரை ஒட்டிய இடத்திலும்…. மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லையை ஒட்டிய இடத்திலும் கர்நாடக மாநிலத்தில் எல்லையிலும் இந்த பிராந்தியம் அமைந்திருக்கிறது.முதலில்நயமாக சொன்னது நம் இந்திய அரசு. காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை அவர்கள்.காதை திருகி இழுத்து வழிக்கு கொண்டு வர நம் ராணுவத்தினருக்கு உத்தரவிட்டது இந்தியா. களம் இறங்கியது இந்திய கடற்படை. அதுவரை காலமும் இந்திய கடற்படை தனித்து எந்த ஒரு போரிலும் நேரிடையாக களம் இறங்கியது இல்லை.1961 ஆம் ஆண்டு 17 ஆம் தேதி கோவா கடற்கரையை தனது மூன்று போர் கப்பல்களுடன் முற்றுகை இட்டது. அந்த சமயத்தில் கோவா கடற்கரையில் இரண்டு சரக்கு கப்பல்கள் சகிதம் பாதுகாப்பிற்கு ஒரு போர் கப்பலும் அதன் துணைக்கு எட்டு வேகப்படகுகளும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் போர்த்துகீசியர்கள்.இந்தியா வியூகம் அமைத்து இரண்டு கப்பல்களை முன்னணியிலும் பாதுகாப்பான தொலைவில் ஒரு கப்பலும் அதாவது கடல் வழியாக வேறோர் கப்பல் உள்ளே நுழைந்து விடாமல் நிலை நின்று கொண்டு கண்காணித்து கொண்டு இருந்தது.முதலில் முன்னேறி தாக்குதல் நடத்த ஆரம்பித்தது போர்த்துகீசிய கப்பல். அதற்கு காரணம் போர்ச்சுக்கல் அவர்களுக்கு அவ்விதம் தான் தகவல் அனுப்பி இருக்கிறார்கள்….. முன்னேறி தாக்குதல்கள் நடத்துங்கள் நாங்கள் மேலும் நான்கு போர் கப்பல்களை உங்களுக்கு துணையாக அனுப்பி வைக்கிறோம் என்றனர். இந்த தகவலை இடைமறித்து கேட்ட நமது படையினர்….. இந்திய அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்து விட்டனர். உடனடியாக செயலில் இறங்கிய லால் பகதூர் சாஸ்திரி எகிப்திய அரசை தொடர்பு கொண்டு சேதி சொன்னவர்…. போர்ச்சுக்கல் கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க விடாமல் தாமதப்படுத்திட கேட்டு கொண்டார்.1961 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி காலை கோவாவில் தாக்குதல் நடத்த அனுமதி கொடுத்தது நம் மத்திய அரசு. இதன்படி இந்திய விமானப் படை விமானங்கள் கோவாவின் மோர்முகாவ் துறைமுகம் மீது குண்டு மாரி பொழிந்தது, அடுத்தபடியாக தகவல் தொடர்பு கோபுரங்களை விமானப் படை விமானங்கள் மூலமாக தாக்கி அழிந்துவிட்டனர். . மதியம் கடலில் நிலை நிறுத்தி வைத்திருந்த இரண்டு கப்பல்களான INS வித்வா மற்றும் INS வீஸா ஆகியவை முன்னேறி தாக்குதல் நடத்திக் கொண்டு கோவா கடற்கரையை நோக்கி வேகமாக நகர்ந்தன….. தாக்குதல் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறிய போர்த்துகீசிய கப்பல் அபோன்ஸோ உடனடியாக திரும்பி கடற்கரை நோக்கி சென்றது.சரண் அடைய சொன்னது இந்திய கப்பல் படை….. கேட்காமல் இந்திய கப்பல்களின் மீது பீரங்கி தாக்குதல் நடத்த உத்தரவு கொடுத்தார் அந்த கப்பலின் கேப்டன் அன்டோனியோ அரகாவோ. நிஜமான கடல் யுத்தம் ஆரம்பமானது. ஆனால் வெகு சீக்கிரம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கப்பல் எதிர்ப்பு குண்டுகள் வீசியது நம் இந்திய கடற்படை கப்பல்கள். அதில் அரகாவோ அரண்டு போனார் , சரண் அடையும் பொருட்டு வெள்ளை கொடியை ஏற்றிட சொன்னார். ஆனால் கொடி கம்பத்தில் சிக்கிய அது மேலே உயரத்திட முடியாமல் முரண்டு பிடிக்க அந்த சமயத்தில் நம் கப்பல் படையில் இருந்து பறந்து வந்த குண்டுகள் கொடி கம்பத்தோடு சேர்ந்து கப்பலின் தொலை தொடர்பு கோபுரங்களையும் பதம் பார்த்தது. அந்த கம்பம் கீழே வீழ்ந்து கப்பல் கேப்டனையும் பதம் பார்த்தது.அதில் அவர் படுகாயம் அடைந்தார்.தாக்குதல் ஆரம்பித்த 13 நிமிடங்களில் அந்த கடற் போர் முடிவுக்கு வந்தது. கப்பல் கேப்டன் சிறை பிடிக்கப்பட்டார். அவரை கோவாவில் உள்ள பனாஜி மருத்துவ மணை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்களை தவிர மற்றவர்களை கைது செய்தனர் நம் கடற் படை வீரர்கள்.மறுநாள் 19 ஆம் தேதி போர்ச்சுக்கல் முழுமையாக சரண் அடைந்ததாக அறிவித்தது. இந்திய நிலப்பரப்பில் இருந்து முழுவதுமாக விலகி கொள்வதாகவும் அறிவித்தனர். ஆதலால் தான் இன்றளவும் கோவாவினை இந்தியாவோடு ராணுவ முறையில் இணைத்ததை கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 60 வந்து வருடம்.கூடவே நம் தேசத்தின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தினை சிறப்பிக்கும் விதமாக…… நமது கப்பல் படையில் மோர்முகாவ் பெயரில் அதி நவீன கப்பலை கட்டி அதனை நேற்று முன்தினம் வெள்ளோட்டம் விட்டு பார்த்து இருக்கிறார்கள். இது அன்று கோவாவில் தாக்குதல் நடைபெற்ற துறைமுகத்தில் பெயர்.அது இன்று அரபிக் கடலில் இந்திய கடற்படையின் கடற் போரின் வெற்றி சரித்திரத்தை போர் பரணி பாடிக் கொண்டு பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கிறது இந்த மோர்முகாவ்.இந்த கப்பலும் அதி விஷேசமானது தான் ஒரு வகையில்….இந்திய பிரெஞ்ச் கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஆறு கப்பல்களில் இதுவும் ஒன்று. இதனை பிரெஞ்ச் நிறுவனமான நாவல் க்ரூப் தான் இதனையும் கட்டி இருக்கிறார்கள். இவர்கள் தான் அல்லது இந்த பிரெஞ்ச் நிறுவனத்தின் நீர் மூழ்கி கப்பல்களை தான் ஆஸ்திரேலியா முதலில் ஒப்பந்தம் செய்து இருந்தது. இதனை வேண்டாம் என்று சொல்லி விட்டு தான் தற்போது ஆக்கஸ் கூட்டணியில் இணைந்து இருக்கிறார்கள்.இந்த கப்பல் மஸகோன் கப்பல் கட்டும் தளத்தில் வைத்து தான் கட்டியிருக்கிறார்கள். இவர்களே ஸ்டெல்த் தொழில்நுட்ப பண்புகள் கொண்ட நீர் மூழ்கி கப்பல் ஒன்றையும் கட்டி முடித்து இருக்கிறார்கள். அதனை தான் சமீபத்தில் INS வேலா என்கிற பெயரில் நம் கடற் படை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஸ்க்ராப்பியன் கிளாஸ் வகையிலான நீர் மூழ்கிகப்பல். இன்னமும் ஐந்து கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.இனி …..அந்த அரபிக் கடலோரம்…..இந்திய கடற்படை கப்பல்கள் அரண் அமைத்து எதிரிகளின் வேர் அறுக்கும் வேலைகளை கரும சிரத்தையுடன் செய்து வருவார்கள் என தாராளமாக சொல்லலாம்.