விமானதுறையில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது, மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கபட்ட முதல் பயணிகள் விமானமான டோர்னியர் 228 விமானம் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது
டோர்னியர் என்பது ஜெர்மானிய கம்பெனி அது இந்தியாவின் எச.ஏ.எல் நிறுவனத்துடன் இணைந்து பல சிறிய ராணுவ விமானங்களை முன்பு ஜெர்மனியில் செய்தது
மோடி ஆட்சியில் 2017ல் பயணிகள் விமானத்தை இந்தியாவில் செய்ய முடிவெடுக்கபட்டது, அதன்படி டோர்னியர் விமானங்கள் இந்தியாவில் செய்யபட்டன, 17 பேர் கொண்ட சிறிய விமானம் முதலில் உருவாக்கபட்டு பரிசோதிக்கபட்டது
உள்நாட்டில் செய்யபட்ட முதல் பயணிகள் விமானம் இதுதான் அதை மோடி அரசு செய்திருக்கின்றது
பலமுறை சோதிக்கபட்ட இந்த விமானம் இன்று அசாமின் திப்ருகர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் முதல்முறை இயக்கியது
நிச்சயம் இது மிகபெரிய சாதனை, இந்தியா முதன் முதலில் பயணிகள் விமானத்தை உருவாக்கிய சாதனை
உலகளவில் பயணிகள் விமானத்தில் பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனமும் அமெரிக்காவின் போயிங் நிறுவனமும் மிக பலமானவை உலகில் பறக்கும் எல்லா பயணிகள் விமானமும் பெரும்பாலும் இந்த இரு நிறுவனங்களில்தான் வரும்.
சீனா கடந்தவருடம் சொந்தமாக பயணிகள் விமானத்தை செய்தது அதன்பின் தகவலே இல்லை என்பதால் அது சொதப்பிவிட்டது என பொருள்.
இன்று 17 இருக்கைகளை தயாரித்த இந்தியா விரைவில் குறுகிய உடல் கொண்ட விமானம் மற்றும் ஜம்போ ரக விமானங்கள் வரை செய்யும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றது தேசம்.
மோடி ஆட்சியில் இந்தியா எவ்வளவு பெரும் சாதனைகளை செய்கின்றது என்றால் இப்படித்தான், விமான துறையிலும் உள்நாட்டில் சாதிக்க தொடங்கியிருப்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைபட வேண்டிய விஷயம்.
மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் அவ்வளவு பெரும் பலன்களை கொடுத்து கொண்டிருக்கின்றது, தேசம் வலுவாகி கொண்டிருக்கின்றது.