தாலிபான்களை மடக்கிய இந்தியா ! பதறும் சீனா.

ஆஃப்கானிஸ்தானில் அம்ருல்லா ஸாலேவிற்கு பின்னான அரசியல் நகர்வுகளில் அதிலும் குறிப்பாக தாலிபான்கள் இயக்கம் ஆட்சி அமைத்தது வரையிலான காலத்தில் துரித கதியில் இயங்கியது இந்தியா தான் என உலக அரசியல் பார்வையாளர்கள் தற்போது சிலாகிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இவையாவும் கடந்த 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான காலப் பகுதியில் ஆஃப்கானிஸ்தானில் நடைப்பெற்ற சம்பவங்களில், இன்னமும் சரியாக சொன்னால் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை அங்கு நடைபெற்ற மற்றும் வெளி உலகிற்கு தெரிந்திராத சமாச்சாரங்களை உளவு தகவல்கள் மற்றும் ஊடகங்கில் வெளிவந்த முன்னுக்கு பின் முரணாக தகவல்களை சரிபார்த்து அதன் பின்னணி குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள்.

இதில் தாலிபான்கள் இயக்கம் ஆட்சி அமைக்க முயன்ற சமயத்தில் நடைபெற்ற சண்டை தாலிபான்கள் இயக்கம் வடக்கு கூட்டணி படையினரை வெற்றி கொண்டதாக அறிவித்தது உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தானில் அமைய பெற்ற அரசை தற்போது வரை அங்கீகரிக்காமல் காலம் தாழ்த்தி வருவது வரை ஒவ்வொன்றாக தனித்தனியாக பார்த்து விடுவோம்.

தாலிபான்கள் இயக்கம் பல உட்பிரிவுகளை கொண்டது என்பதை முன்னரே நம் பதிவுகளில் பார்த்து விட்டோம். அதில் பலம் பொருந்திய சக்தியாக விளங்குகிறது அக்கானி நெட்வொர்க். இவர்கள் காபூலை சுற்றி வளைத்த காலத்தில் அமெரிக்க உள்ளக உளவு துறை எதன் பொருட்டோ இவர்களை தொடர்பு கொண்டு காலம் தாழ்த்தியது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே இவர்கள் வசம் காபூல் நகரம் வர வேண்டும் என்பது போன்ற ஒரு நகர்வினை அமெரிக்கா செய்தது.

அதற்கு காரணம், துருக்கி ராணுவம் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நிலை கொண்டு விடக் கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தார்கள் என்கிற ரீதியிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒரு புறம் இருக்க, அக்கானி நெட்வொர்க் பிரிவினை சார்ந்தவர்கள் காபூல் நகரம் இனி வரும் காலங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று தீர்த்து சொல்லி விட்டார்கள். இது தாலிபான்களின் மற்றைய குழுக்கள் விரும்ப வில்லை.

தாலிபான் இயக்கத்தினரின் தற்போதைய சுப்ரீம் லீடராக உள்ளவர் இபத்துல்லா அஹும்ஸாடா என்பவர். ஆனால் அந்த குழுவில் இவரை காட்டிலும் மிகப் பிரபலமான ஒருவர் உண்டு. அவர் பெயர் முல்லா அப்துல் கானி பரடார். இவரை ஆஃப்கன் அரசின் பிரதமராக பதவி வகிப்பார் என்று நினைத்து கொண்டு இருந்த வேளையில்…… அக்கானி நெட்வொர்க் பிரிவினை சார்ந்த தற்போதைய தலைவர் சிராயுஜின் அக்கானிக்கும் இவரது குழுவினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

இது நடந்தது கடந்த இரண்டாம் தேதி பின்னிரவு வேளையில் என்கிறார்கள். இது துப்பாக்கி சண்டையாக மாறி……. சுமார் 17 பேர் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் படுகாயமடைந்த அப்துல் கானி பரடார் தனது இடது தோள் பட்டை கீழாக மார்பு பகுதியில் குண்டு துளைத்து என்று ஒரு தகவலும் உண்டு.

இதன் பின்னரான காலத்தில் தான் அதாவது கடந்த வாரம் இவரை ஆஃப்கன் அரசின் துணை பிரதமராக அறிவித்தார்கள் தாலிபான் இயக்கத்தினர். ஆனால் இவர் தற்சமயம் உயிருடன் இல்லை என்கிற ரீதியிலான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு ஏற்ப இவரும் கடந்த மூன்றாம் தேதியில் இருந்து வெளி உலகுக்கு தலை காட்டவில்லை. இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட தாலிபான்கள் இயக்கம் அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்றை வெளியிட்டனர். பின்னர் அது அவரது உதவியாளர் எழுதியது என்றனர்.

இன்னமும் இது குறித்து சரியான தகவல் இல்லை.

இரண்டாவது தாலிபான்கள் இயக்கத்தினர் பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் சென்று அங்கு உள்ள வடக்கு கூட்டணி படையினர் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது. முதலில் வடக்கு கூட்டணி படையினரின் கை ஓங்கிய நிலையில் ஓசைப்படாமல் பாகிஸ்தான் காட்சிக்குள் வந்தது. அதாவது இவர்கள் தங்கள் விமான படை விமானங்களை கொண்டு தாலிபான்களை பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதிக்குள் கொண்டு சென்றனர்….. போதாக்குறைக்கு பின்னிரவு வேளையில் அவர்கள் மீதும்…. அவர்களின் நிலைகளின் மீதும் தாக்குதல் நடத்தி நிலை குலைய செய்தனர்.

இது உலகெங்கும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கி விட்டது. பாகிஸ்தானுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. தாலிபான்கள் பன்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியை முழுவதுமாக கைப்பற்றி விட்டதாக அறிவித்தனர்.

ஆனால், நிஜத்தில் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

இப்படியான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வடக்கு கூட்டணி படையினர் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டுள்ளனர். மறைந்திருந்து தாலிபான்களை வேட்டையாடி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றையும் சுட்டு வீழ்த்திய சம்பவமும் நடந்துள்ளது.

இது போக மர்மமான முறையில் இரண்டு விமானங்கள் வடக்கு கூட்டணி படையினருக்கு ஆதரவாக தாலிபான்கள் நிலைக் கொண்டு இருந்த பகுதிகளை தாக்கி சுமார் 27 பேரை காவு வாங்கியது. இது சுகோய் சூ mki விமான ரகம்.
இதனை விரிவடைய நம் முந்தைய பதிவில் குறிப்பிட்டு இருந்தோம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். ஐநாவின் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பில் இருப்பது நமது தேசம். ஆதலால் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது இந்தியா. அதேசமயம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் அமைக்கும் ஆட்சியில் யார் யார் பங்கேற்க வேண்டும் என்கிற ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டது.

இதனையே இங்கு உள்ள சில கூபைகள் மற்றும் சீனா பாகிஸ்தான் திரித்து செய்தி வெளியிட்டனர். எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை இந்தியா. ஆனால் ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் வெவ்வேறான சமயங்களில் இந்தியா வந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இது போக நம் பாரத பிரதமர், இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவ தலைவர் பிபின்-ரவாத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்ட உயர் மட்ட கூட்டம் ஒன்று கடந்த வாரத்தில் சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்றது.

அதில் சில முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இதன் அடிப்படையிலேயே இந்தியா யாரும் எதிர்பாராத குவாட் கூட்டமைப்பு நாடுகளை உள்ளடக்கிய கூட்டம் ஒன்றை ஆஃப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்க கூட்டி இருக்கிறார்கள். இதற்கு சீனா கடும் எதிர்ப்புக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்தியா சரியான திசையில் நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை சீனா சொல்லாமல் சொல்லி இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். இந்த ஒரு நகர்வின் மூலம் பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தானில் ஆளுமை செய்வதை தடுத்து இருக்கிறார்கள். ஆச்சரியகரமாக இதனை ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள் அரசு வரவேற்று இருக்கிறார்கள்.

கொஞ்சம் சிக்கலான காய் நகர்த்தலாக பார்க்கப்படும் இது தாலிபான்களை கட்டுப்படுத்துகிறதோ இல்லையோ… ஆஃப்கானிஸ்தானில் சீனா மற்றும் பாகிஸ்தான் நகர்வுகளை மட்டுப் படுத்துகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, தாலிபான்களை மூன்று விதத்தில் மடக்கி பிடித்து இருக்கிறார்கள்.

ஒன்று வடக்கு கூட்டணி, இரண்டாவது ஆஃப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்கள், இவர்கள் பாகிஸ்தானை எதிர்க்கும் தெரிக் இ தாலிபான் எனும் அமைப்பை சேர்ந்தவர்கள். சரியாக சொன்னால் சீனா ஆக்ரமிப்பில் உள்ள உய்கூர் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள். மூன்றாவது ஈரானிய ஷியா பிரிவு முஸ்லிம்கள்.

இன்று உள்ள நிலையில் தாலிபான்களை இவ்வாறு மூன்று விதங்களில் மடக்கி மட்டுப் படுத்திய நாடு இந்தியா மாத்திரமே.

இனி வரும் காலங்களில் இந்தியா தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் மூலம் இந்த பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவிலான ஆளுமையில் ஈடுபடும் என்று கணித்திருக்கிறார் உலக அரசியல் பார்வையாளர்கள்.

ஜெய் ஹிந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here