பதறும் சூர்யா… பங்காளி கம்யூனிஸ்ட்!!பின்னணி என்ன?

கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரத நாட்டில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அரசு, நிர்வாகம், நீதித்துறைகளில் ஊடுறுவி தங்கள் கொள்கைகளை அமல்படுத்துவதில் வல்லவர்கள். இந்தியர்கள் அடிமையாகவே இருந்தவர்கள், அவர்கள் தங்கள் நாட்டை ஆளத்தெரியாது, விஞ்ஞானம் தெரியாது, கல்வியறிவற்றவர்கள் என்று பொய் கதைகளை ஆங்கிலேயன் இந்தியர்கள் மனதில் தனது கல்வி மூலம் திணித்துவிட்டு சென்றதை, சுதந்திரத்திற்கு பின்னர் தொடரச்செய்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்திய வரலாற்று மையம் போன்ற முக்கிய துறைகளில் அமர்ந்து கொண்ட இவர்கள், நம் வரலாற்றை திரித்து எழுதினார்கள். கல்வியிலும் அதை புகுத்தினார்கள். இதனால் அக்பர் தி கிரேட் ஆனார். கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் கொடுமைகள் மறைக்கப்பட்டன. என்னற்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டு, அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்றதாக புனையக்கதையை மக்கள் மத்தியில் நம்ப வைத்தனர். இதற்கு பிரதமராக இருந்த நேரு ஒத்துழைத்தார்.

கல்வித்துறையைத் தொடர்ந்து பத்திரிக்கை துறையிலும் கம்யூனிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்த துவங்கினர். ஜேஎன்யு போன்ற கல்வி நிறுவனங்களில் இதற்கான ஆட்கள் தயார் செய்யப்பட்டனர். இன்று பெரும்பாலான பத்திரிக்கையாளர்களாக இடது சாரிகள் இருப்பதற்கு இதுவும் காரணம். தமிழகத்தைப் பொறுத்தவரை சினிமாதுறையில் இடதுசாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது. ஜாதி வன்மம், திராவிட வன்மம் இவற்றோடு கிருஸ்தவ மிஷினரிகளின் ஆதிக்கமும் தமிழ் சினிமாத்துறையை பிடித்திருப்பது சமீபகால நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்த ஆதிக்கத்தின் மூலம், யார் இயக்குனர் ஆக வேண்டும், யார் நடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகின்றன. சினிமா எடுக்க பல நூறு கோடி தேவை. அதனால் இது எளிதில் இவர்களுக்கு சாத்தியமாகிறது.

இந்த கூட்டுக்கலவையின் பிடியில் நடிகர் சூர்யாவின் குடும்பமும் சிக்கிக் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது. சமீபகாலமாக பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் அதிகமான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதில் முன்னணியில் இருப்பவர்கள் இவர்கள் தான்.

காவல்துறையினரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து, அதன்மூலம் தனது சமூக அக்கறையை வெளிக்காட்டியுள்ளார் என்று திரைத்துறையினர் முதற்கொண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை புகழ்ந்து கொண்டிருக்க, கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு தாங்காது என்பது போல சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், ஞானவேல் எடுத்த ஜெய்பீம் படத்தின் இன்னொரு பக்கம் இப்போது வெளிச்சத்திற்கு வந்து கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் நீதிபதி சந்துருவை கதாநாயனாக உயர்த்தி, அவரது மேற்பார்வையிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் லாபத்தை சூர்யா தரப்பு அடைந்துள்ளது. காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் இறந்து போன ராஜாகண்ணுவிற்கு நீதி வாங்கிக் கொடுத்ததாக சித்தரிக்கப்பட்டுள்ள நீதிபதி சந்துரு, இந்த சம்பவத்தை சினிமாவாக எடுப்பதற்கு முன்பாக ராஜாகண்ணுவின் குடும்பத்தினரின் அனுமதியை பெற வேண்டும். அவர்களுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்க வேண்டும்.

ஆனால் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதிக்கு தெரியாமல் எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர் ராயல்டி கேட்டு கோர்ட்டிற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக சினிமாவில் அவரது கேரக்டரின் பெயரை செங்கோனி என்று மாற்றியுள்ளது எந்த வகையில் சமூகநீதி என்று சந்துருவும், சூர்யாவும் தெரிவிக்க வேண்டும்.

ராஜாகண்ணு குறவர் இனத்தைச் சேர்ந்தரவாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு சம்மந்தமே இல்லாமல் இருளர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கான செக் கட்அவுட்டை முதல்வர் கையால் கொடுக்கச்செய்தனர் சூர்யாவும், நீதிபதி சந்துருவும். ஆனால், அந்த சங்கம் கிருஸ்தவ அமைப்பு நடத்தும் சங்கம் என்பதும், அவர்களது சங்கம் வரிவிலக்கு பெறாததால் கட்டிடமாக கட்டிக் கொடுக்கும்படி கேட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சமூகநீதியை உண்மையை நிலைநாட்டுவர்களாக இருந்தால், அதே நிகழ்ச்சியில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளையும், அவரது குடும்பத்தினரையும் அழைத்து நிதி அளித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?

மாறாக தன்னை சூர்யா தரப்பு அணுகவில்லை, நான் குடிசைவீட்டில் தான் வசிக்கிறேன் என்று பார்வதியம்மாள் பேட்டி அளித்ததும் (சினிமாவில் ராஜாகண்ணுவின் மனைவிக்கு சந்துருவீடு கட்டித்தந்து குடியேற்றுவதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.) நடிகர் ராகவா லாரன்ஸ், அந்த அம்மையாரை சந்தித்து வீடு கட்டித்தருவதாக உறுதியளித்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியதும், சூர்யா தரப்பு அவசர அவசரமாக 15 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பாக வங்கியில் செலுத்திவிட்டு அதன் வட்டியை வாங்கி பிழைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளது(இதிலும் 10 லட்சமா 15 லட்சமா என்று தெளிவில்லை). இதற்காக அந்த அப்பாவி பார்வதியம்மாளை அழைத்து சென்றிருக்கின்றனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணனும், ராமகிருஷ்ணனும்.

<விளிம்பு நிலை மக்களின் உரிமைக்காக பாடுபடுகிறேன் என்று கூறும் கம்யூனிஸ்ட்டுகள், பார்வதியம்மாளின் இழப்பை வைத்து படமாக்கியுள்ள சூர்யா, அதற்கான ராயல்டி தொகையை (சட்டப்படி 30 சதவீதம்) வாங்கிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொசுறு தொகை கொடுத்து சமாளிக்க உடந்தையாக இருந்துள்ளனர்.

ராஜாகண்ணுவின் வழக்கிற்காக 13 ஆண்டுகள் போராடிய கோவிந்தன் என்ற சொந்த கட்சிக்காரையே படத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதோடு,( உண்மையான ஹீரோ கோவிந்தன் தான்). இந்த வழக்கிற்காக அதே கட்சியை சேர்ந்த பல வழக்கறிஞர்கள் வாதாடியும் முன்னாள் நீதிபதி சந்துரு தான் முழுமையான காரணம் என்று காட்டி ஹீரோவாக்கியது எந்த வகையில் சமூக நீதி.

இந்த படத்தில் வன்னியர் சமூகத்தை குறிவைத்து பல காட்சிகள் அமைத்திருந்தது அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொதித்தெழச் செய்தது. அவர்கள் தான் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த கோவிந்தனையும், பாதிக்கப்பட்ட பார்வதியம்மாளையும் நேரில் சந்தித்து பேட்டியாக எடுத்து வெளியிட்டனர். இதனால் சூர்யா தரப்பு இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டது.

அந்த காட்சிகள் மட்டும் வைக்கப்படாமல் இருந்திருந்தால், கோவிந்தனும், பார்வதியம்மாளும் வெளிச்சத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். விளிம்பு நிலை மக்களில் ஒருவரான ராஜாகண்ணு வாழ்க்கையை படமாக்கி பல கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ள சூர்யா-ஜோதிகா தம்பதியினர் சமூகநீதி காத்த காவலர்கள் என்ற பட்டத்துடன் வலம் வந்திருப்பார்கள்.

உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும் சூர்யாவிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது. தன் பெயரை காப்பாற்றிக் கொள்ள பார்வதியம்மாளுக்கு ராயல்டி தொகையை கொடுக்காமல், போனால் போகிறது என்ற 15 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாற்றியுள்ளார். தங்கள் கட்சியை புகழ்ந்து படமெடுத்துள்ள ஒரே காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

காலம் இவர்களை மன்னிக்காது.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here