காசியில் மோடி சாதித்தது என்ன?

காசி…இதுவே இன்றைய உலகின் மிகப் புராதன இடம். இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் பாரதத்தின் வேர் நிலைகொண்டுள்ள இடங்களுள் இதுவும் ஒன்று.

காசி விஸ்வநாதர் ஆலயம்.ஹர ஹர மகாதேவ்…….. பம் பம் மஹாதேவ்…… ஓம் நம சிவாய…… என்பது எப்படி தென்னாட்டுடைய சிவனுக்கு உண்டான சொல்லோ….. அது போல காசியில்……. பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் நம் காதுகளில் ரீங்கரிக்கும் வேத ஓலி ….பம் பம் மஹாதேவ்……கண்டதே காட்சி கொண்டதே கோலம்…. என்கிற இந்த வார்த்தை பதம் பல சமயங்களில் பலவிதங்களில் முரண்பாடான அர்த்தங்களை கொடுத்திருக்கிறது என்றாலும்.

தற்போது தான் அதன் உண்மையான தாத்பரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.இன்னமும் சரியாக சொன்னால்…… கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தான் அதற்கான விதை ஊன்றப்பட்டது.

வேறோர் அர்த்த பாவத்தை தந்தது…. இன்று அது நிதர்சன உண்மையாக வெளியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.ஆம்…….காசி இருக்கும் வாரனாஸி தொகுதி நம் பாரதப் பிரதமர் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்ற இடம்.இன்று அது ஜொலித்து கொண்டு இருக்கிறது.

உலக அளவில் இனி அழிக்கவே முடியாத பெரும் காவியத்தை நமது தேசம் எழுதி கொண்டிருப்பதற்கு சாட்சியாக எழும்பி நிற்கிறது இன்று இந்த புண்ணிய பூமி. மீள் கட்டமைப்பு செய்து இருக்கிறார்கள்….. இது வெறும் வார்த்தை பிரயோகம்….. ஆனால் இங்கு நடைப்பெற்ற காரியம் அசாதாரணமானது.

காலப் போக்கில் படையெடுப்புகளாலும்…… பின்னர் குடியிருப்புகளின் மத்தியில் மறைந்து போன சற்றேறக்குறைய சுமார் நாற்பது கோவிலை கண்டுபிடித்து இங்கு வசித்து வந்தவர்களுக்கு….. நிரந்தரமான விசாலமான குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்து இங்கு இருந்து அவர்களை பத்திரமாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தி……. கோவில்களை கோவில்களாக மீட்டெடுத்து இருக்கிறார்கள்.

பத்து நிமிடத்தில் இன்று நாம் கோவிலை அடைந்து விட முடியும்……இந்த இடத்திற்கு வர முன்பு ஒன்றரை மணி நேரம் ஆனது….. அது பிரமாதம் அல்ல…..இதனை ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விதத்தில் தற்போது மாற்றி அமைத்து இருக்கிறார்கள்…… வரலாற்றை நம்மை போன்ற பாக்கியசாலிகள் இல்லை…… அப்படி ஒரு மாயாஜால காட்சியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்

தற்போது உள்ள காசியில்…..இதனை நாளை மாலை 13-12-21 நம் ஊர் கணக்கில் கடைசி கார்த்திகை மாத சோமவாரத்தில் மீண்டும் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்க இருக்கிறார் நம் பாரதப் பிரதமர் திரு தாமோதரதாஸ் நரேந்திர மோதி …..மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்னது போல செய்து காண்பித்து இருக்கிறார் அவர்….., தேர்தல் சமயத்தில் இதனை தான் சொன்னார் அன்று.

இதோ இன்று நம் கண் முன்னே நம் முன்னோர்கள் புழங்கிய இடத்தை அவர்களின் காலத்திய பொக்கிஷத்தை உருகுலையாமல், மீட்டெடுத்து தந்து இருக்கிறார். நம் பாரத தேசத்தின் பாரம்பரியமான சொல்லாடல் காசி ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரை என்பது. இது அன்று 45 நாள் பயணம் என்பர். இன்று அது 4-5 நாள் பாதுகாப்பான பயணம் எனும் அளவில் சுருங்கி இருக்கிறது…..நாளை அது 4-5 மணி நேரம் பயணம் என்பது போன்று மாறலாம்.

அதற்கு முதல் படி இதுவாகத்தான் இருக்கும்.ஆயிரம் ஆண்களுக்கு முன்பு இருந்த நகரத்தை, அதன் கட்டமைப்பை, அதன் தொல்லியலை, தேசத்தின் ஆன்மாவை நாளை மாலை நடைபெறும் விழாவில் மீண்டும் இந்த நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நம் பிரதமரை எவ்வளவு கொண்டாடினாலும் தகும்.

அந்த மாதேவம் நமக்கு துணை நிற்கட்டும்.ஹர ஹர மகாதேவா…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here