காஷ்மீரில் அமித்ஷா

காஷ்மீரில் அப்பாவி மக்களை கொடூரமாக பயங்கரவாதிகள் கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசு பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டது. ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் 10 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 900 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடைய காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கு நேற்று சென்றார். 3 நாள் அங்கு இருக்கும் அமித்ஷா, பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்தும், அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here