கத்தியின்றி ரத்தமின்றி காஷ்மீர்

கடந்த வாரத்தில் இந்தியா முழுவதும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது தான் ஊடகங்களில் ஓடிக் கொண்டு இருந்ததை நாம் பார்த்தோம்.

இதே போன்ற ஒரு விஷயம் இங்கிலாந்தை உலுக்கி வருகிறது.கொஞ்சம் வேறு மாதிரியாக.அது நம் இந்திய தேசம் சம்மந்தப்பட்ட சமாச்சாரம். ஆனால் இங்கு யாரும் அதனை பெரியதாக கண்டு கொள்ளவில்லை. தவிர அது நமக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் கூட.

அதனை கிட்டத்தட்ட எட்டு லட்சம் பிரிட்டன் பவுண்ட் செலவு செய்து காலங்காலமாக பாதுகாத்து கொண்டு வருகிறார்கள் . இத்தனைக்கும் அது அத்தனை மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் அல்ல….. காகிதங்கள்…‌ வெறும் காகிதங்கள் அல்ல …… கடிதங்கள். கடிதங்கள் மட்டுமல்ல கொஞ்சம் கோப்புகள்…..

இந்தியாவின் கடைசி வைஸ்ராய் யாக இருந்த மௌண்ட்பேட்டன், அவர் மனைவி எட்வினா மௌண்ட்பேட்டனுடனான நேருவின் தொடர்புகளை கட்டி தொங்கவிடும் கடித பரிமாற்றங்களை கொண்ட காகிதங்கள்…. டைரி குறிப்புகள்….. இது அத்தனையும் பாதுகாக்கப்பட்ட ஆவணங்களாக உள்ள நிலையில்….. நீதிமன்ற வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது என்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். ஆனாலும் இந்திய அரசு இந்த ஆவணங்களை வெளிக்கொணர பிரம்ம பிரயத்தனங்களை செய்துக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன…… காரணம் சுதந்திர இந்தியாவில் முதல் கலவரமாக சித்தரிக்கப்படும் …. காஷ்மீர் குறித்தான விஷயங்கள் இதில் அடங்கி இருப்பதாக அவர்கள் ஆதாரங்களுடன் எடுத்து சொல்கிறார்கள்……..

இது அத்தனையும் வெளியே வந்தால் இந்திய பாகிஸ்தான் இன்றைய உறவு மேம்படும் அளவிற்கு அதில் தகவல்கள் உள்ளன என்கிறார்கள்.காஷ்மீர் பிரச்சினையின் அடி நாதம் முகமது அலி ஜின்னா வழக்கமாக தன் கோடைக்கால வாசஸ்தலமாக காஷ்மீர் செல்ல இருந்ததை தடுத்தது தான் என்று வசதியாக பொய் சொல்லி கொண்டு இருக்கிறார்கள் ஒரு சிலர். அது தவறு என்கிறார்கள்….. காரணம் அவர் காஷ்மீர் செல்லவிருந்த சமயத்தில்….. அந்த ஆண்டு கோடை காலத்தில்….. இந்தியா விடுதலை பெற்று இருக்கவில்லை…… நாடு விடுதலை பெற்றதே ஆகஸ்ட் மாதத்தில் தான்.அப்படி இருக்க இவர்கள் சொல்லும்…. முகமது அலி ஜின்னா கோடை வாசஸ்தலம் செல்வதை தடை செய்தது தான் காரணம் என்கிற வாதம் அடிப்படுகிறது.தவிர முகமது அலி ஜின்னாவுக்கும் நேருவுக்கும் ஏழாம் பொருத்தம். அந்த விஷயத்தை கடைசி பத்தியில் எழுதுகிறோம்.இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் காஷ்மீர் பகுதியில் கலவர சூழல் உண்டானதாக வரலாறு நமக்கு சொல்கிறது….. கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்ற இரண்டு மாதங்களில் நாம் ஒரு போருக்கு தயாராக வேண்டி வந்தது.இந்த சமயத்தில் அங்கு என்ன நடந்தது …… யார் மீது தவறு என்பதை அறிந்து கொள்ள உதவும் இந்த அறிய பொக்கிஷம் தான் அந்த கடிதங்களில் பொதிந்து கிடக்கின்றது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்….(நிச்சயமாக அதில் பொய் இல்லை.)

இந்தியா சுதந்திரம் பெற்று, நேரு பிரதமராக பொறுப்பேற்ற பின்னரும் 1949 ஆம் ஆண்டு வரை இந்திய நிதிநிலை அறிக்கையை இங்கிலாந்துக்கு அனுப்பி தனது விசுவாசத்தை பறை சாற்றி கொண்டு வந்து இருக்கிறார். போதாக்குறைக்கு எட்வினா உடனான தனது தொடர்புகளை வளர்த்து கொண்டே வந்திருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது என்கிறார்கள் அவர்கள்.

. ஆவணங்கள் படி இல்லாமல் இரு தரப்பினருக்கும் காஷ்மீர் மாநிலத்தை கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதா என்கிற கோணமும் அதில் தங்கி இருக்கிறது.காரணம்…. இங்கிலாந்து அரசு நிர்வாகத்திடம் இன்றைய காஷ்மீர் பகுதியில் வரும் கில்கிட் பல்டிஸ்தான் பகுதி ……. அதாவது தற்சமயம் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதி குத்தகையாக தான் இங்கிலாந்து வசம் அந்நாளில் கொடுக்கப்பட்டு இருந்திருக்கிறது.அந்த வகையில் அது காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வசம் இருந்திருக்கவில்லை. சரியாக சொன்னால் அது எப்போதும் அப்படி ஒரு ஆளுகையின் கீழ் இருந்தது இல்லை.வாதத்திற்கு இது சரி என்றால்…..காஷ்மீர் கடைசி மன்னன் ஹரி சிங்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அப்படி என்றால் இங்கிலாந்து அரசு இந்திய சுதந்திர பிரகடனம் செய்த சமயத்தில் இவை அனைத்தும் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதிகளாக சட்டப்படி மாறிவிடுகிறது.

ஏன் இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான் இதனை சொந்தம் கொண்டாட முடியாதா என்றால் வெகு நிச்சயமாக முடியாது. காரணம் பாகிஸ்தான் எனும் தேசம் பிரித்த சமயத்தில் …… அதாவது பிரித்து கொடுத்த சமயத்தில் எல்லை வகுக்கப்பட்டே கொடுக்கப்பட்டது….‌அது கூட இந்திய சுதந்திரம் கொடுப்பதற்கு முன்பாக …. சரியாக சொன்னால் 14 மணிநேரத்திற்கு முன்பாக கொடுக்கப்பட்டுவிட்டது.

அந்த வகையில்….. அவர்களுக்கு எல்லை வகுக்கப்பட்ட பிரதேசங்கள் போக மீதி இருக்கும் அனைத்துமே இந்திய தேசத்தின் சொந்தம்.அந்த வகையில் தற்போது அந்த பிராந்தியத்தில் நிலை கொண்டு இருக்க பாகிஸ்தான் தார்மீக உரிமை இழக்கிறது சர்வதேச சட்டரீதியாக…… அதுபோலவே அந்த பிராந்தியம் தன்னிச்சையான செயல்படும் உரிமையையும் இழக்கிறது…..எவ்விதம் என்றால்…. இந்திய நிலப்பரப்பில் இருந்து பிரிந்து செல்ல இந்தியா முதலில் இந்திய பகுதிகளாக அங்கீகரிக்க வேண்டும்.

பின்னர் தான் அது பிரிந்து செல்லும் சமயத்தில் சுதந்திர தேசமாக உலகம் ஏற்க முடியும்.ஆனால் பாகிஸ்தான் சடுதியில் அங்கு ஒரு அரசை ஏற்படுத்தி இருப்பதாக…. அதாவது சுதந்திர காஷ்மீர் உருவாக்க துணை நின்றதாக இத்தனை காலமும் சொல்லி கொண்டு இருக்கிறது.மேற்சொன்ன விஷயங்களின் அடிப்படையில் பார்த்தால் இது இந்திய தேசத்தின் நிலப்பரப்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்வதற்கு சமம்.

சர்வதேச சட்டப் படி இது அப்படித்தான் பார்க்கப்படும்.அந்த வகையில் பாகிஸ்தான் சீனாவிற்கு தானமாக வழங்கிய அக்ஷய் சின் ஒட்டிய நிலப்பரப்பு செல்லுபடியாகாது. ஆக…..ஒரே சமயத்தில் இந்தியா சட்ட ரீதியாக இந்த இரு தேசங்களையும் பந்தாடுகிறது.

இந்திய மண்ணில் கால் ஊன்றி இருப்பவர்களை அங்கு இருந்த அகல சொல்லி விட்டால் கதை முடிந்தது….. அதற்கு இந்த காகிதங்கள் உதவும் என்கிறார்கள்.இந்தியா சந்திக்கும் எழுபது ஆண்டு கால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்….. ஆனால் அதேசமயம் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் மானம் சந்தி சிரிக்கும் என்கிறார்கள்.அவர்களின் அந்த பயத்திற்கு காரணம்… கடிதங்களில்…. கோப்புகளில்… காகிதங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறார் நேரு. நேரு மட்டும் அல்ல இங்கிலாந்து அரசு வம்சத்தின் வாரிசுகளும் தான் என்கிறார்கள். காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here