2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! 900 பேர் கைது -காஷ்மீரில் அதிரடி!!

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 பிரிவை நீக்கியப்பின்னர் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. பல ஆண்டுகாலம் டில்லியில் அகதிகளாக வாழ்ந்து வந்த காஷ்மீர் பூர்வ குடி இந்துக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதை சகிக்க முடியாத பயங்கரவாத கும்பல் பொதுமக்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவிகள்7 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பயங்கரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் காஷ்மீர் நிலவரம் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து ராணுவத்தினரும், காவல்துறையினரும் வீடுவீடாக புகுந்து பயங்கரவாத ஆதரவாளர்களை வேட்டையாடத் தொடங்கினர். இன்று காலை வரை 950 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பாவி மக்கள் கொலையில் நேரடியாக தொடர்புடைய இருவர் அனந்தனாக், பந்துபோரா பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பாதுகாப்பு படையினர் காலை அதிரடியாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இம்தியாஸ் அகமது தார் என்பவன் உட்பட 2 பயங்கராவதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் பொதுமக்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையவன். மத்திய அரசின் இந்த நடவடிக்கை பயங்கரவாத ஆதரவாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here