நாட்டை அவமானப்படுத்திய கார்டூனிஸ்ட்!கவுரவித்த கேரள லலித் கலா அகாடமி!!

உலகையே பிச்சைக்காரர்களாக்கி, தங்கள் நாட்டை மட்டும் பொருளாதார உச்சத்தில் கொண்டு போக வேண்டும் என்று மிகப்பெரிய சதியை செய்த சீனா, கொரோனா என்ற கொடூர நோயை உலக மக்களுக்கு அளித்தது.
கொரானாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளுக்கு உலக நாடுகள், குறிப்பாக 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா தன்னிடம் கைகட்டி நிற்கும், அதன்மூலம் இந்திய பொருளாதாரத்தை கொள்ளையடிக்கலாம் என்று திட்டம்போட்டது சீனா.
ஆனால், <சீனாவின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி, தடுப்பூசியை இந்தியாவே தயாரித்தது. தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்தது. அத்தோடு இந்தியாவின் ராஜ தந்திர நடவடிக்கையால் சீனாவின் தடுப்பூசிக்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை.
இந்தியா இதுவரை 114 கோடி டோஸ்கள் தடுப்பூசி போட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டனர். தற்போது சிறுவர்களுக்கும் தடுப்பூசி போட இந்தியா தயராகிக் கொண்டிருக்கிறது.
உண்மையான இந்திய குடிமகனுக்கு இது பெருமையைத் தரும். ஆனால் பிறப்பால் இந்தியர்களாகவும், மனதால் சீன ஆதரவாளர்களாகவும் இருக்கும் தேசவிரோதிகளுக்கு இது பெருமை அளிக்கவில்லை. முதலில் தடுப்பூசி மீது சந்தேகத்தை கிளப்பினர், பின்னர் தட்டுப்பாடு என்று கூப்பாடு போட்டனர். ஆனால் மக்களை மத்திய அரசு காத்ததால், நாட்டிற்கு எதிராக தங்கள் உணர்வை பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் வெளிகாட்டி வருகின்றனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனூப் என்ற கார்டூனிஸ்ட், ஒரு கார்டூன் வரைந்துள்ளார். அதில் கொரோனா பரவல் குறித்து உலக நாடுகளின் கூட்டத்தில் சீனா, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கம்பீரமாக அமர்ந்திருக்க, இந்தியா சார்பில் காவி சால்வை அணிந்த மாடு ஒன்று அமர்ந்திருப்பது போன்று வரைந்துள்ளார். எவ்வளவு வன்மம் இது. (தேச விரோதிகளுக்கு ஊக்கம் அளிக்க விரும்பாததால் அந்த கார்டூனை நாம் இங்கு பதிவிடவில்லை).
இந்த கார்டூனுக்கு சீன கம்யூனிஸ ஆதரவாளர்கள் கொண்ட கேரள லலித் கலா அகாடமி முதல் பரிசு கொடுத்து தங்கள் முதுகை தாங்களே சொறிந்து விட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கு கேரளாவில் உள்ள தேசபக்தர்கள் தங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து வருகின்றனர். நாட்டின் மீது அவதூறு பரப்பிய அனூப், அம்மாநில கார்டூனிஸ்ட் சங்கத்தின் செயலாளராக வேறு இருக்கிறார்.
இவர்கள் எவ்வளவு அவதூறு பரப்பினாலும், நாட்டின் முன்னேற்றத்தை இவர்களால் தடுக்க முடியாது. சீனாவின் கைக்கூலிகளாக இருந்தாலும், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here