இன்று ராஜபட்ச சகோதரர்களால் கதி கலங்கி நிற்கிறது. ராஜபக்ச சகோதரர்கள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை….. காரணம் அவர்கள் ராஜிநாமா செய்து தற்போது உள்ள மந்திரிசபையை கலைத்து விட்டு மீண்டும் தங்கள் பதவிகளில் இவர்கள் மாத்திரமே தொடர்ந்து…. தற்போது உள்ள மந்திரி பிரதானிகளில் மூன்றில் இரண்டு பங்கு மீண்டும் அமைச்சராக பொறுப்பு கொடுத்து…….. என திட்டம் நீள்கிறதே தவிர தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி சூழ்நிலையை சீர் செய்ய….. தூக்கி நிறுத்த…. குறைந்த பட்சம் தாங்கி பிடிக்க…… எந்த ஒரு உருப்படியான திட்டமிடலும் இல்லை அங்கு.
மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் நிலையிலும்…… ராஜபக்ச சகோதரர்களின் வீடுகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையிலும்….. இவர்கள் இப்படி கபடி ஆடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் அங்கு நிலவும் வேதனையான உண்மையாக இருக்கிறது. இதனால் இவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது என்று பார்த்தால்…… பெரியதாக ஒன்றும் இல்லை என்பது தான் இதில் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது.
மகிந்தா ராஜபக்சவின் சகோதரர் தான் கோத்தபய ராஜபக்ச…… இவர் தான் தற்போதைய இலங்கை அதிபராக….. அதாவது ஜனாதிபதியாக பதவி வகிக்கிறார். அங்கு உள்ள அரசியல் அமைப்புக்களின் படி இலங்கையின் பிரதமரை காட்டிலும் இலங்கை அதிபருக்கு தான் அதிகாரங்கள் அதிகம். அந்த வகையில் கோத்தபய ராஜபக்ச தான் தற்போதைக்கு அதிகாரம் மிக்கவராக விளங்குகிறார். ஆனால் கடந்த காலத்தில் அதாவது இலங்கையில் போர் உச்சம் பெற்ற இருந்த காலத்தில் மகிந்தா ராஜபக்ச தான் செல்வாக்கு மிக்க இலங்கை அதிபராக பதவி வகித்தார். இவர் சீனாவின் ஆதரவாளராக அறியப்படும் சூழ்நிலையில் அவரது மற்றொரு சகோதரரான கோத்தபய ராஜபக்ச தான் தற்போதைக்கு அதிபராக இருக்கிறார்.
இவர் சற்றே நடுநிலைவாதியாக தற்போது உள்ள இந்திய அரசின் சார்ப்பு உடையவராக அவதானிக்கப்படுகிறார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்தவராதலால் எதிலும் ஓர் ஒழுங்கை எதிர்பார்க்க…… சீனாவோடு முட்டிக்கொண்டது இவருக்கு. மகிந்தா ராஜபக்சவின் குடும்ப வாரிசுகள் அரசு நிர்வாகத்தில் ஏகப்பட்ட அழுத்தத்தை தர…… இது இவருக்கு பெரும் தலைவலியாக மாற….. ஏகப்பட்ட நிர்வாக சீர்கேடுகளுக்கு அது வழி வகுக்க…. தாளாத நிதி சுமையில் தத்தளிக்கிறது இலங்கை.
உதாரணமாக ஒன்று பாருங்கள்.
இலங்கைக்கு சீனா கடன் கொடுத்திருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம்…… ஆனால் அவர்கள் அந்த கடனை சீன யுவானில் தந்து இருக்கிறார்கள்….. அதன் மீதான வசூலை அமெரிக்க டாலர்களில் பெற்று வர காலப் போக்கில்….. இலங்கையிடம் அந்நிய செலாவணி கையிருப்பே இல்லை என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க…. சீனா தந்திரமாக காய் நகர்த்தி சீனக்கடனை அடைக்க சீனாவிடமே கடன் வாங்கும் சூழ்நிலையிலை உண்டாக்கி….. அந்த கடனுக்கு ஈடாக இந்த முறை இலங்கையிடம் இருந்து இலங்கை அரசு கடன் பத்திரங்களை கேட்டு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கடன் பத்திரங்களின் மீதான முதலீடுகளாக சீனா முன்பு வழங்கி இருந்த மிச்ச மீதி இருந்த சீன யுவானை திரும்ப பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். பைசா செலவு இல்லாமல் இலங்கையிடம் இருந்து அந்நிய செலாவணி கையிருப்பை காலி செய்து விட்டு கடனாளியாகவும் அவர்களை ஆக்கிவிட்டது சீனா.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சீனா ஒதுங்க……. நம் இந்தியா ஓடோடிச் சென்று உதவ முற்பட…….இது ஏதும் தெரியாமல் இங்கு உள்ள கூகைகள் இந்திய ராணுவத்தினர் இலங்கையில் மீண்டும் களம் இறங்கி இருப்பதாக செய்திகளை வெளியிட்டு இலங்கை மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றனர். அதாவது இந்த விஷயத்தில் இலங்கைக்கு உதவ அவர்களுக்கு அமெரிக்கா தான் வேண்டுமாம்……. எப்படி இருக்கிறது இந்த விஷ நரிகளின் திட்டமிடல்.
ஏற்கனவே இதேபோன்ற ஒரு விஷயத்தை முன்னெடுத்து மூக்குடைத்துக்கொண்டனர். அது அங்கு நடைபெற்ற ஈஸ்டர் தினத்தை ஒட்டிய குண்டு வெடிப்பு சம்பவம். அந்த சமயத்தில் தான் தற்போது உள்ள இந்திய அரசு நிர்வாகத்தை மீண்டும் வழி நடத்தும் பொறுப்பை திரு நரேந்திர மோடி அவர்கள் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏற்று இருந்த காலம் அது. அப்போதே அமெரிக்கா தான் வேண்டும் என்கிற கலக கூக்குரல் எழுந்தது. ஆனால் நம் இந்திய அரசு நிர்வாகம் அதனை வெகு சாமர்த்தியமாக எதிர் கொண்டு அடக்கியது. முதல் ஆளாக நம் பிரதமரும் அங்கு சென்று விட்டு வந்தார். ஆனால் இதன் பொருட்டே…. இதனை அடுத்து வந்த இலங்கை தேர்தலில் தற்போதைய ராஜபக்ச சகோதரர்கள் அரசு அங்கு ஏற்பட்டது. அல்லது அந்நிய கைக்கூலிகளால் ஏற்படுத்தப் பட்டது.
அதற்குண்டான பலனை தற்போது அந்த மக்கள் அனுபவிக்கிறார்கள்…..
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் உணவு பொருட்களை அவர்களின் துறைமுகத்தில்…. கப்பல்களில் நிறுத்தி வைத்து விட்டு நேரம் காலம் தெரியாமல் பேரம் பேசி கொண்டு இருக்கிறார்கள் குயுக்தவாதிகள். இலங்கை அரசில் கிட்டத்தட்ட 29 துறைகளில் ராஜபக்ச சகோதரர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. அவர்கள் அத்தனை பேரும் சீன நிறுவனங்களின் அறிவிக்கப்படாத பங்குதாரர்களாக இன்றளவும் இருந்து வருகிறார்கள். இவர்களின் முதலீட்டு திட்டங்கள் எல்லாம் நிலம் தொடர்பான சமாச்சாரங்களாக….. நிறுவனங்களாக இருக்க…… அவர்களின் பின்னணியில் இங்கு உள்ள ஒரு சில தமிழ் பேசும் இந்திய தொழிலதிபர்கள் சிலரும் முதலீடு செய்திருப்பதாக சொல்கிறார்கள்………
இந்த நிலையில் இந்த சீன நிறுவனங்கள் பலவும் கடந்த சில மாதங்களாக வரிசையாக திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டி கழித்து பாருங்கள்…….. சிலவற்றை கண்ணாடி போல் தெளிவாக விளங்கும் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.
அப்படி என்றால்…. இதில் முதலீடு செய்தவர்களின் நிலை தான் கேள்வி குறியே தவிர……. அந்த சொத்துக்கள் அனைத்தும் சீனா வசம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அர்த்தம்…. அதனை இந்த முதலீட்டாளர்கள் எந்த காலத்திலும் திரும்ப பெற்றுக் கொள்ள முடியாது….. திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான் இது.
இதன் மதிப்பு மட்டுமே சில பல லட்சம் கோடிகள்…..
இதனை……
இவற்றை மடை மாற்ற… அந்நாளில்… இலங்கை போரில் தமிழனுக்கு ஈழைக்கப்பட்ட அநீதி இது……. அவர்களின் சாபம் தான் இன்றைய இலங்கையின் நிலைக்கு காரணம் என புருடா விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இலங்கை மக்கள் கடனாளி ஆகி இருக்கிறார்கள்…… ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்….. ஆனாலும்கூட இந்தியா உதவ கூடாது….. அதாவது உதவிடும் சாக்கில் இந்தியா உள்நுழைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்……. அப்படி இருப்பவர்கள் யார் என்பதை யூகித்து இருந்தால் நீங்கள் ஆகச் சிறந்த தேசியவாதி….. தேசாபிமானம் கொண்டவர் என நீங்களே தாராளமாக ஷொட்டிக் கொள்ளலாம்.
எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் நாற்பது பேர் தேற மாட்டார்கள்…… ஆனால் வெகு சுலபமாக சுமார் நான்கு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை…… அவர்களின் அடிப்படையான வாழ்க்கைத்தரத்தை பட்டப்பகலில் கண் முன்னே அழித்து வருகின்றனர்…. போதாக்குறைக்கு இவர்களின் போதைக்கு இங்கு உள்ள ஊடகங்களின் வாயிலாக இங்கு உள்ள மக்கள் மனங்களில் நஞ்சை விதைக்கும் வேளைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களே….. ராமன் வேண்டுமா உங்களுக்கு….. அப்படி என்றால் தீ குளிக்க தயாராகுங்கள்…… இல்லை என்றால் ராவணனை கொண்டாடுங்கள்…… காரணம்… உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை தொடக்கூட மாட்டான் என்று ஏகடியம் பேசிக் கொண்டு, நம்மை …… நம் மாண்பை….. நம் கலாச்சார செழுமையை சீர்குலைக்க அனைத்து விதமான காரியங்களை செய்து கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள நிதர்சனமான உண்மைகளை மறைக்க களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதை நன்கு கவனித்தில் கொள்ளவும்.
ராவணன் அசூரனா தெரியாது…. ஆனால் இவர்கள் போலானவர்களை வதைக்க…..வெகு நிச்சயமாக அசூர வதம் தேவையாக இருக்கிறது.