இலங்கையில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டுகின்றது இந்தியா.
வட இலங்கையில் அதாவது இந்தியாவில் இருந்து வெறும் 30 கிமீ தொலைவில் கால்பதிக்க நினைத்த சீனா இப்பொழுது விரட்டி அடிக்கபட்டிருக்கின்றது.
முன்பு யாழ்ப்பாணம் அருகே உள்ள நயினாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு ஆகிய இடங்களில் சுமார் 100 கோடி ரூபாயில் காற்றாலைகள் அமைக்கும் திட்டம் சீனாவுக்கு வழங்கப்பட்டது.
சீனா வெறும் காற்றாலை மட்டும் நிறுவாது பல ரகசிய ராணுவ கண்காணிப்பு மற்றும் ஒட்டுகேட்பு மையங்களை நிறுவலாம் அது இந்தியாவுக்கு ஆபத்து என பெரும் எச்சரிக்கைகள் செய்யபட்டது.
ஆனால் சீனா பிடிவாதமாக நின்றது. இப்பொழுது இலங்கை ஓட்டை ஓலைபாயில் கிழிந்த உடையோடு கிடக்கும் நேரம் இந்தியா கட்டிலும் மெத்தையும் தட்டு நிறைய உணவும் கொடுத்து அவர்களுக்கு உதவியதில் சீனாவினை இலங்கை விரட்டி அடித்துவிட்டது.
அந்த காற்றாலை வாய்ப்பு இனி இந்தியாவுக்கு வழங்கபடும் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன, நேற்று இலங்கை சென்ற இந்திய அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் மிகபெரிய வெற்றியாக இது கருதபடும் நிலையில் இலங்கைக்கான சீன தூதர் அதிருப்தி தெரிவித்து கொண்டு சுவரில் முட்டிகொண்டிருக்கின்றார்.