சீனாவின் பிடியிலிருந்து தப்பிக்கும் இலங்கை!

காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த வரை, அண்டை நாடுகளுடான உறவில் சுமூகமான நிலை கடைப்பிடிக்கப்படவில்லை.

நம் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சிறு நாடுகளை கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு… அதை சீனா சரியாக பயன்படுத்திக் கொண்டது. குறிப்பாக இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இலங்கையில் பல்வேறு வளர்ச்சிப்பணிகளில் முதலீடு செய்தது.

குறிப்பாக துறைமுகங்களை மேம்படுத்துதல், தொழிற்சாலைகளை நிறுவுதல் போன்றவற்றில் சீனா கவனம் செலுத்தியது. துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம், தனது போர்கப்பல்களை நிறுத்தி இந்தியாவை மிரட்டலாம் என்பது அதன் திட்டம்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு அமைந்தவுடன் அண்டை நாடுகளுடானா வெளியுறவுக் கொள்கைகளில் அதிரடி மாற்றம் ஏற்பட்டது.

சீனா முதலீடு செய்ததோடு, அதற்கு பல மடங்கு வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததாலும், கடன் மற்றும் வட்டியை கொடுக்க முடியாத நாடுகளின் பகுதிகளை மறைமுகமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் கந்துவட்டி கொடுமையை அளிக்க துவங்கியது.

சீனாவின் பிடியிலிருந்து விடுபட இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா தொற்றால், சுற்றுலாத்துறை படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதால், இலங்கை தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இந்தியா, இலங்கைக்கு தற்போது பல்வேறு திட்டங்களில் உதவி வருகிறது. மேலும் இந்திய மீனவர்கள் நூற்றுக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு மாற்றப்பட்டு, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் கூட கைதிற்கு பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். (தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து ஒட்டுமொத்த மீன்வளத்தையும் அள்ளி சென்றுவிடுகின்றனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இலங்கை தமிழ் மீனவர்கள் தான் என்பது இங்கு பெரும்பாலும் பேசப்படுவதில்லை)

தற்போது தமிழர்கள் வாழும் யாழ்பாணம் காங்கேசன் துறை பகுதியிலிருந்து கொழும்புவிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட குளிர்சாதன வசதியுள்ள சொகுசு ரயில் தனது பயணத்தை துவங்கியுள்ளது. இதற்கான துவக்கவிழாவில் இந்திய தூதர் வினோத் பங்கேற்றார். இலங்கை போக்குவரத்து துறை அமைச்சர் பவித்ர துவக்கி வைத்து இந்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இதற்கு எடுத்ததாக 35 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட எண்ணை கிடங்குகளை பயன்படுத்தும் ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டு கிடந்தது.

இரண்டாம் உலக போரின் போது எரிபொருள் சேமிப்பதற்காக திரிகோணமலைப்பகுதியில் 99 கிடங்குகளை ஆங்கிலேயே அரசு நிர்மாணித்தது. இவற்றை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு இந்திய அரசு எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல காரணங்களுக்காக 35 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2019 ல் இலங்கை சென்ற பிரதமர் மோடி, இந்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு வர முன்னெடுத்தார்.
தற்போது அவற்றில் 14 கிடங்குகள் இந்தியாவின் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இலங்கை நிறுவனமான லங்கா ஐஓசிக்கு 50 ஆண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்குகிறது.
மீதமுள்ள கிடங்குகளை அந்நாட்டு எண்ணை நிறுவனங்களுடன் சேர்ந்து ஐஓசி நிர்வகிக்கும்.

இந்திய அரசின் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும் அதிரடி நடவடிக்கையால் சீனாவின் பிடி மெல்ல மெல்ல இலங்கையில் தளர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here