பிடிநழுவும் சீனா! காலூன்றும் பாரதம்!

இன்றைய தேதியில் இந்தியாவோடு அதிகம் முரண்பட்ட இரண்டு தேசங்கள் அதுவும் இந்தியாவின் அண்டை நாடுகளாக கடந்த காலத்தில் இருந்து வந்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை இன்று இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கி தவிக்கின்றது.

உண்ணும் உணவுக்கே வழி இல்லாத நிலை…. காரணம் அதன் அரசியல் கொள்கை….. ராஜதந்திர நடவடிக்கைகள் என்கிற பெயரில் நரி தந்திர நடவடிக்கைகளுக்கு கிடைத்த பரிசு தான் இது.

ஓர் பெரிய சாம்ராஜ்யத்தில் பங்கு கொண்ட….. காலங்காலமாக உடனிருந்து பிரிந்த சேதங்கள் இன்று கதியற்று நிற்கதியாக நிராதரவாக நிற்கிறார்கள்.

ஒரு சவரன் ஒன்றரை லட்சம் ஒரு தேசத்தில்…. ஒரு லிட்டர் பெட்ரோல் 280 ரூபாய்க்கு மேல் மற்றொரு நாட்டில்…. அத்தியாவசிய அவசியமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இத்தனைக்கும் வளமான பூமி கொண்ட பகுதிகள் இவை இரண்டும்.

பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சிக்கு தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கிறது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள் அங்கு. இந்த மாத இறுதிக்குள் அவரை தூக்கி கடாசி விடும் சந்தர்ப்பமே மிக அதிகம் என்கிறார்கள். இலங்கையில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் இதே நிலை தான்…… அங்கு உள்ள மக்கள் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். சமயத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரு நாடுகளின் ஏகபோக நட்பு நாடு சீனா. போதாக்குறைக்கு இந்த இரு நாடுகளின் இன்றைய நிலைக்கு இந்த சீனாவே தான் முழுமுதற் காரணமும் கூட .

கடந்த வாரத்தில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி சென்ற வெடிபொருட்கள் இல்லாத நமது பிரமோஸ் ஏவுகணை ஒன்று தற்செயலா பறந்ததா அல்லது தாக்குதல் நடத்தும் நோக்கில் பறந்தனவா என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு.

இந்த விஷயத்தில் அவர்களுக்கு திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.காரணம் தவறுதலாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது பறந்திருந்தால் கூட பாகிஸ்தானிய வான் மண்டலத்திற்குள்ளாக புறப்பட்ட இடத்தில் இருந்து கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் இருபது வினாடிக்கு குறையாமல் பறந்திருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அதனை தன்னை தானே அழித்துக் கொள்ளும் கட்டளை அமைப்பை செயல்படுத்தி வானிலே அழிந்து போக செய்திருக்க முடியுமே…… ஏன் செய்ய வில்லை என்று சந்தேகம் கிளப்பி இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க……..

இலங்கையில் தற்போது உள்ள பொருளாதார சீர்கேடுகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல…… சற்றேறக்குறைய கடந்த எட்டு மாதங்களாக அங்கு ஓடிக் கொண்டிருந்தது. இன்று ஏன் அதனை பூதாகரமாக பெரிது படுத்தி தெரிவிக்கிறார்கள்….?

விஷயம் அறிந்தவர்கள் இதற்கு வேறோர் காரணம் சொல்கிறார்கள்.

இந்த மாத இறுதி வாக்கில் நம் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இலங்கை செல்லவிருக்கிறார் என்பதாக கடந்த மாத மத்திம வாக்கில் இருந்து சொல்லி வருகிறார்கள்.
இதற்கான அட்டவணை ஒன்றும் தயாராக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இவரது இந்த பயண திட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான தளத்தில் தரை இறங்க இருப்பது போல கட்டமைத்து இருக்கிறார்கள். தற்போது நோய் தொற்று காரணமாக மூடி வைத்து இருக்கும் இந்த தளத்தில் இருந்து கடந்த காலத்தில்….. அதாவது விடுதலை புலிகளுடனான யுத்த காலத்திற்கு முன்பு நம் தமிழகத்தில் இருந்து நேரடியாக விமான சேவையே இயங்கி வந்திருக்கிறது. நாற்பது நிமிட பறத்தல் தொலைவில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விட முடியும். அது போலவே 55 நிமிடங்களில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்து விட முடியும்.

சீனாவுடனான வர்த்தக தொடர்புகளுக்கு பின் இந்த யாழ்ப்பாண விமான நிலையத்தை ஏதேதோ காரணங்களைச் சொல்லி மூடி வைத்து விட்டது இலங்கை அரசு நிர்வாகம். அதனை இந்திய ராஜதந்திரிகள் ஊடாக மீண்டும் இயங்கு நிலைக்கு கொண்டு வர உத்தேசித்து காய் நகர்த்தி வருகின்றனர். இதனை இலங்கை அரசின் அங்கம் வகிக்கும் ஒரு சாரார் மறைமுகமாக எதிர்க்கின்றனர். எங்கே தமிழகத்தில் உள்ளவர்களோடு இங்கு உள்ளவர்கள் மீண்டும் பழையபடி உறவாடுவிடுவார்களோ என்கிற ரீதியிலான அலப்பறை சிற்பல சிங்களவர்களுக்கு இன்றளவும் இருந்து வருகிறது.

ஆனால் அதேசமயம் அவர்களுக்கு சீனாவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் அல்லாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தான் இந்திய ராஜதந்திர நகர்வு அற்புதமாக வேலை செய்கிறது……. எப்படி எனில் இலங்கையில் உள்ள சிங்களவருக்கு இந்தியாவில் உள்ள புத்த சமய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வர என பிரத்தியேகமாக சுற்றுலா சேவைகள் வழங்கிட ஆவண செய்து இருக்கிறார்கள். அதுபோலவே இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களுக்கு சென்று வழிபட இலங்கை வாழ் தமிழர்களுக்கு பிரத்யேக சலுகையுடன் கூடிய சுற்றுலா விசா வழங்க சிறப்பு ஏற்பாடுகளை வழங்க ஆலோசனை செய்து வருவதாக சொல்கிறார்கள்.

இதற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனை உளவு தகவல்களாக சேகரித்த சீனா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து ……. அது இரு தரப்பு உறவுகளை பாதிக்கும் அளவிற்கு வந்து நிற்கிறது என்கிறார்கள்.

இதற்கு தோதாக இந்திய இலங்கை இடையே நீண்ட கால நோக்கில் தரை வழி போக்குவரத்து பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளிப்படையாக அறிவிக்கவும் செய்திருந்தார் என்பதை இங்கு நினைவு படுத்தி கொள்ளுங்கள்.

இதனையும் முற்றிலுமாக சீனா விரும்பவில்லை. ஆனாலும் நம் இந்தியா விடுவதாக இல்லை…..
உக்ரைன் ரஷ்யா பிரச்சினையில் சீனா ரஷ்யாவிற்கு எதிராக சிலபல சங்கதிகளை பூடகமாக மேற்கொண்டு அதன் மூலம் ரஷ்ய சீனா இடையிலான சிறு விரிசல் ஏற்பட்டதுள்ளதை கருத்தில் கொண்டு இந்தியா சமயம் பார்த்து காய் நகர்த்தி வருகிறது.

ஏற்கனவே பாகிஸ்தானில் சீனாவின் முதலீட்டு திட்டங்கள் முடங்கி உள்ள நிலையில் தற்போது இலங்கையில் இதே போன்றதொரு நிலை உண்டாகுவதை சீனா விரும்பவில்லை……. ஆனாலும் காரியங்கள் வேகமாக நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம்…….. மறைமுகமாக பின்னணியில் நிழலுருவாக நின்று யாரோ வேலை பார்த்து வருகின்றனர்……..

அது யாராக இருக்கும் என்பது படிக்கும் அத்துணை பேருக்கும் மிக நன்றாகவே தெரியும் சங்கதிகள் தான். ஆக பொருத்திருந்து பார்க்கலாம் மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று……. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நடக்கும் சம்பவங்கள் அனைத்தும்….. நல்லவையாக…… காலத்தால் அழிக்க முடியாத தன்மை கொண்டதாக இருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. புதிய வரலாற்றினை உருவாக்கி கொண்டு வருகிறோம் நாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here