அரியலூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யா. தஞ்சை மைக்கேல்பட்டியில் உள்ள தூயமரியன்னை பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்த மாணவி பள்ளியில் நடந்த கொடுமையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்குமுன்பு எடுக்கப்பட்ட வீடியோ பதிவில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை குடும்பத்துடன் கிருஸ்தவ மதத்திற்கு மாற சொன்னதாகவும், அதற்கு மறுத்ததாகவும், அதிலிருந்து விடுதியில் தனக்கு அதிக வேலை கொடுத்து கொடுமை செய்து வந்ததாகவும், அதனால் விஷம் குடித்ததாகவும் மாணவி கூறியிருந்தார்.
இதையடுத்து கட்டாய மதமாற்ற வற்புறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட அமைப்புகள் போராட்டங்களை நடத்தினர். ஆனால், மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் அல்ல, என்று தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்பி, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் விசாரணைக்கு முன்பே கூறினர். விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். அவரை திமுக எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் சிறை வாசலில் சால்வை அணிவித்து வரவேற்றார்.
திமுக அரசு முழுக்க முழுக்க குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதால் வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மாணவியின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், சிபிஐக்கு மாற்றி <உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு தடை விதிக்க மறுத்து, விசாரணையை தொடர உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாணவியின் மரணம் குறித்து முதல்தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) சிபிஐ பதிவு இன்று பதிவு செய்தது. அதில் இயற்கை மாறான மரணம் உள்ளிட்ட 5 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.