தஞ்சை தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தன்னை இரண்டு வருடங்களாக பள்ளியில் கடுமையாக வேலை வாங்கியதும், குடும்பத்தோடு கிருஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும், அதற்கு தானும் தன் குடும்பத்தினரும் மறுத்ததாகவும் மாணவி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
கிருஸ்தவத்திற்கு மதம் மாற மறுத்ததால் மாணவி கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் கூறினர். ஆனால் காவல்துறை பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து விஎச்பி, பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன.
பாஜக தலைவர் அண்ணாமலை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார். இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவு இருந்தது. இதனிடையே தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் மதமாற்றம் நடக்கவில்லை என்று விசாரணை முடிவு வருவதற்கு முன்னரே கருத்து தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சிலரும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இதனால் தமிழக போலீசார் விசாரணை நடத்தினால் நியாயம் கிடைக்காது என்று கருதிய மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தன் மகளின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டது.
இதனிடையே மாணவியின் மரணம் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் தஞ்சையில் இன்று விசாரணை நடத்தினர். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
Home தற்போதைய செய்தி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் அதிரடி!பாஜக போராட்டம் வென்றது!!