தேசமெங்கும் லாவண்யாவிற்கு நீதி வேண்டி கிளம்பும் குரல்கள்! போலிகளின் முகத்திரைகள் கிழிகின்றன!!

கட்டாய மதமாற்ற முயற்சியால் 12 ம் வகுப்பு மாணவி லாவண்யா தன் உயிரை இழந்த கொடுமை தமிழகத்தில் நடந்துள்ளது.
லாவண்யாவின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் பாஜக மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகிறது.
தி.மு.க தொண்டரின் மகளின் மரணத்திற்கு அந்த கட்சியின் தலைமை இதுவரை வாய் திறக்கவில்லை. உத்திரபிரதேசத்தில் நடக்கும் சம்பவங்களுக்கெல்லாம் குரல் கொடுக்கும் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., லாவண்யா மரண விவகாரத்தில் மத அரசியல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன், லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டிக்க மனமில்லாமல், பாஜகவை கண்டித்துக் கொண்டிருக்கிறார்.
பிரதான எதிர்கட்சியான அதிமுகவின் இரட்டை தலைமை வாய்மூடி மவுனமாக இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே கண்டுக் கொள்ளவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே துணிச்சலுடன் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். நடிகர் கமலஹாசன், மாணவியின் மரணத்திற்கு காரணத்தை கண்டுப்பிடிக்க வேண்டும் என்று கூறியவர், மறந்தும் கிருஸ்தவ பள்ளி நிர்வாகத்தை கண்டிக்கவில்லை.
ஆனால் பாஜக, இந்து முன்னணி அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்திற்கு முன்னெப்போதையும்விட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் முக்கிய மீடியாக்கள் தங்கள் போலி மதச்சார்பின்மை பிம்பத்திலோ, வாங்கும் கூலிக்கு விசுவாசமாக நடந்து கொள்வதாலோ என்னவோ, லாவண்யா விவகாரத்தை கண்டுக் கொள்ளவே இல்லை.
ஆனால், தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை விவாதித்துள்ளன.
அஸ்ஸாம், திரிபுரா, இமாச்சலப்பிரதேசம், டில்லி, மும்பை, பெங்களூரூ என்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடல் கடந்து இலங்கையில் கூட போராட்டம் நடந்துள்ளது.
முதன்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த இந்து மாணவி ஒருவரின் மரணத்திற்கு தேசிய அளவில் குரல் எழுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திமுக அனுதாபிகளான சவுக்குசங்கர், பியூஸ்மானுஸ் போன்ற போலி போராளிகள் இந்த எழுச்சியை கண்டு வீடியோக்களில் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டத்தின் துணையோடு மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு நிச்சயம் தேச பக்தர்கள் தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். போலிகளின் முகத்திரைகள் கிழிந்து கொண்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here