நம் கடவுளின் நிறம் கருப்பா?
உருட்டல்களுக்கு பதிலடி!!

‘தெய்வத்தின் நிறமே கருப்புதான் ப்ரோ!’

‘தெய்வத்துக்கு ஏதடா நிறம்? குடிச்சிருக்கியா என்ன?’

‘அது அப்படி இல்ல ப்ரோ.. நம் முன்னோர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வெரு நிறத்தை கொடுத்து அழைத்திருக்கிறார்கள். அப்படி நம் மண்ணின் தெய்வங்களுக்கு கொடுத்த நிறமே கருப்பு தான் ப்ரோ…!’

‘ஓ…!அப்போ தெய்வத்துக்கு என்ன நிறம்னு நீ‌ நேரடியா பார்த்ததில்லை. நம்ம முன்னோர்கள் குடுத்த கலரைத்தான் நீயும் சொல்ற சரிதானே?’

‘ஆமா‌ ப்ரோ…!’

‘சரி இப்ப சொல்லு எந்த தெய்வத்துக்கு நிறம் கருப்பு?’

‘அது வந்து…..’

‘என்னடா வந்து போயி… பேரச் சொல்லுடா..’

‘எங்க முப்பாட்டன் முருகனும் கருப்பு தானே ப்ரோ?’

‘முருகன் கருப்பு நிறம்னு நீ எங்கடா படிச்ச?’

‘அது வந்து….
அப்ப முருகன் கருப்பு நிறம் இல்லியா ப்ரோ?’

‘செந் தளிர் மேனியார், செல்லல் தீர்ப்ப‘ என்றும் ‘ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை‘ என்றும் சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் ‘கடுவனிளவெயினனார்‘ செவ்வேளின் நிறம் கதிரவன் ஒளி ஒக்கும் நிறம் என்றும், நப்பண்ணனார் கொழுந்துவிட்டெயும் தீயின் நிறத்தை உடையவன் முருகன் என்கிறார்.இவற்றிற்கெல்லாம் மேலாக திருமுருகாற்றுப்படையில்
‘செய்யன் சிவந்த ஆடையன் செல்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்‘

  • திருமுருகாற்றுப்படை.
    என்று சொல்கிறார் நக்கீரர். இங்கே உங்க முப்பாட்டனின் நிறத்தை நக்கீரரும்,
    கடுவனிளவெயினனாரும் சிவப்பு நிறமுடையவன் என்றே கூறும்போது கருப்பு நிறம் எங்கிருந்து ப்ரோ வந்துச்சி?’

‘அது வந்து தெரியாம சொல்லிட்டேன் ப்ரோ.. ஒருவேளை எங்கள் பெரும்பாட்டன் சிவனின் நிறம் கருப்புனு எங்க அண்ணன் சொல்லி இருப்பாரோ..?

‘செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்‘ அதாவது சிவந்த பசும்பொன் போன்ற சிவந்த மேனி வண்ணத்தையும் என்று சிலப்பதிகாரமும், ‘சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி, அவ் வான் இலங்கு பிறை அன்ன‘ அதாவது செவ்வானம் போன்ற மேனியை உடையவன் என்று அகநானூறும் கூறும்போது கருப்பு எங்கிருந்து வந்தது ப்ரோ?’

‘அதுவும் போச்சா? அப்போ எந்த தெய்வத்தின் நிறமும் கருப்பு இல்லையா ப்ரோ?’

‘காலைக் கதுவிடு கின்ற கயலோடு வாளை விரவி வேலைப் பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ கோலச்சிற் றாடை பலவுங் கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே குருந்திடைக் கூறை பணியாய்‘

  • நாச்சியார் திருமொழி.
    பொருள் : அழகிய எங்கள் சிறிய ஆடைகள் பலவற்றையும் நீ எடுத்துக் கொண்டு, மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளாதே கருப்பான திருமேனி கொண்ட பிரானே என்கிறார் நாச்சியார்.
    கண்ணன் கருமை நிறமுடையவன் என்கின்றன திவ்யப் பிரபந்தங்கள்…!’

‘ஒருவேளை எங்கள் அண்ணன் திருமாலைத்தான் சொல்லி இருப்பாரோ..?’

‘உங்க அண்ணன்கிட்டயே அதை கேட்டுட்டு வா ப்ரோ…!’

‘சரி ப்ரோ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here