காஷ்மீரை தாக்கும் லவ் ஜிஹாத் அடுத்தடுத்து கடத்தப்படும் சீக்கிய சிறுமிகள்! போராட்டத்தில் குதித்த சீக்கியர்கள்!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்துக்கள், கிருஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இங்கு சிறுபான்மையினர். பல பத்தாண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் பிரிவினை வாதத்தை, 370 வது சட்டப்பிரிவை நீக்கியதன் மூலமும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததன் மூலமும் மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்த்தை அளிக்கவும் மத்திய அரசு யோசித்து வருகிறது.

இதனிடையே கேரள மாநிலத்தைப்போலவே காஷ்மீரிலும் பிறமத பெண்களை குறிவைத்து கடத்தி அவர்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக காஷ்மீரில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த சிறுமிகள், பெண்களை குறிவைத்து லவ்ஜிகாத் நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி மற்றும் சற்று மனநலம் குன்றிய ஒரு பெண் என்று இருவரை துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. அவர்களில் ஒருவரை வயதான ஒரு முஸ்லீம் நபருக்கும், இன்னொரு பெண் முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் கட்டாய மதமாற்றமும் செய்யப்பட்டதாக சிரோன்மணி அகாலி தளம், ராஷ்ட்ரீய சீக் சங்கத், குருத்வாரா பிரபந்தக் கமிட்டி ஆகியன குற்றம்சாட்டியுள்ளன. இது குறித்து காவல்துறையில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர்.

அதில் முதியவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியின் நிலைமை இதுவரை தெரியவில்லை. இளைஞருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமியை போலீசார் மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்றத்தில் கூட்டம் சேரக்கூடாது என்று கூறி பெண்ணின் பெற்றோரை வெளியே நிறுத்திய காவல்துறையினர், இளைஞனின் பெற்றோரையும், உறவினர்களையும் நீதிமன்றத்திற்குள் அனுமதித்து,வழக்கு விசாரணையில் பங்கு பெறச் செய்தனர். பெண்ணின் குடும்பத்தினர் கருத்தைக் கேட்காமலேயே அந்த சிறுமியை முஸ்லீம் இளைஞனுடன் அனுப்பி வைத்தார் நீதிபதி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தின் வெளியே சீக்கிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் இது குறித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச லெப்டினென் கவர்னர் மனோஜ்சின்காவை அகாலிதளத்தின் காஷ்மீர் தலைவர் மன்ஜீத்சிங் தலைமையில் சீக்கிய தலைவர்கள் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

அப்போது, நீதிபதியால் பெண்ணின் தரப்பை விசாரிக்காமல் அனுப்பிவைக்கப்பட்ட பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் மட்டும் 4 சீக்கிய இளம்பெண்கள் கடத்தி செல்லப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த வேண்டும், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் உள்ளதைப்போல கட்டாய மதமாற்றச்சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மனோஜ்சின்கா உறுதியளித்துள்ளார்.
உ.பி.,ம.பி.மாநிலங்களில் கட்டாயமதமாற்றச்சட்டத்தை கொண்டு வந்த போது, அதற்கு எதிராக கருத்து கூறியது அகாலிதளம் என்பது குறிப்பிடத்தக்கது.

0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here