ஏகலைவன் கட்டைவிரல் கதை என்ன?

மறுபடியும் ஏகலைவன் என அழும் கூட்டம் பெருகிவிட்டது, புதிய கல்வி கொள்கை ஏகலைவன் கட்டை விரல் கதையினை உருட்ட ஆரம்பித்துவிட்டது திராவிட கோஷ்டி.

உண்மையில் ஏகலைவன் கதைக்கும் இவர்கள் சொல்லும் குல தாழ்சிக்கும் சம்பந்தமே இல்லை,

உலகில் ஒப்பற்ற குரு சிஷ்ய உறவுக்கும், எவ்வளவு பெரியவனாயினும் நெஞ்சார்ந்த தவறு செய்தால் அறம் தண்டிக்காமல் விடாது என்பதற்கும் அவன் கதையே ஒரு சான்று.

ஒரு சிறிய பாத்திரமாக சில வரிகளில் வந்தாலும் அந்த இதிகாசத்தின் பெரும் அடையாளம் அந்த ஏகலைவன்.

அந்த நாளில் அஸ்தினாபுரம் அரசு பெரும் ராஜ்ஜியமாய் விளங்கிற்று, அந்த இளவரசர்களுக்கு பயிற்சி தரும் பெரும் பொறுப்பு துரோணருக்கு இருந்தது.

ராஜகுரு அரச குடும்பத்தை தவிர யாருக்கும் வித்தைகள் கற்றுதர கூடாது என்பது விதி
ஆம், அன்று அக்கலைகள் அவ்வளவு ரகசியமாக இருந்தன எல்லோருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டால் ராஜவிரோத காரியம், அந்நிய நாட்டோடு சேர்ந்து அரசை அடிக்கும் போர்க்கள் குழப்பங்களெல்லாம் வரும் என்பதால் பெரும் போர் பயிற்சியும் நுட்பமும் ராஜகுடும்பத்தை தவிர யாருக்கும் சொல்லிதர படாது.

அப்படியே பிரம்மாஸ்திரம் உள்ளிட்ட பெரும் ஆயுதங்கள் யார் கட்டுபாடும் பொறுப்பும் உள்ளவர்களோ அவர்களுக்கு மட்டும் வழங்கபட்டது, அதையும் பெரும் தவத்துக்கும் சோதனைக்கும் பின் இறைவன் வழங்கினார்.

அப்படியான காலங்களில் காட்டுக்குள் சென்ற அர்ஜூனன் அந்த காட்சியினை கண்டான், அப்படி ஒரு காட்சியினை அவன் கண்டதில்லை.

அதுவரை தானே பெரும் வீரன் என நம்பிகொண்டிருந்த அவனுக்கு அந்த காட்சி அதிரவைத்தது
ஆம், ஒரு நாய் அவன் முன் சுருண்டு விழுந்தது எங்கிருந்தோ வந்த அம்புகள் அந்த நாயினை அர்ஜூனனே அசரும் வண்ணம் தைத்தன‌.

முதல் அம்பு நாயின் காலை தாக்கிற்று, இரண்டாம் அம்பு மரத்தில் பட்டு சரியாக திரும்பி தன் வாயில் குறுக்காக பாய்ந்தது. மின்னலென வந்த அம்புகள் மிக அதிசயிக்க வகையில் எங்கெங்கோ பட்டு திரும்பி நாயின் வாயினை பல வகையில் தைத்து நாயின் தலையினை கழுத்தோடு திருப்பி வைத்தது.

அசந்து நின்றார் அர்ஜூனன்.

இந்த அம்பினை யார் எய்தான் என வியந்து தேடினால் அங்கொரு வேடன் ஒரு சிலையினை வணங்கி கொண்டிருந்தான், அந்த சிலை துரோணாரின் சிலையாய் இருந்தது.

அர்ஜூனனுக்கு ரத்தம் கொதித்தது, துரோணர் மிக பெரும் துரோகத்தை செய்ததாக பொருமினான், அரசகுடும்பத்துக்கு செய்ய வேண்டிய காரியத்தை வேடுவனுக்கு சொல்லிதந்தாகவும் இது “ராஜதுரோகம்” எனவும் ஆத்திரமடைந்தான்.

துரோணரின் சிலையினை வணங்குபவன் எப்படிபட்ட சீடனாக இருக்கமுடியும்? துரோணர் இதுபற்றி ஏன் யாரிடமும் சொல்லவில்லை என கடும் குழப்பமும் கோபமும் கொண்ட அவன், ஏதோ காரணங்களுக்காக அவனை அவர் ரகசியமாக தயார்படுத்துவதாக சந்தேகித்தான்.

துரோணாருக்கும் எதிரிகள் இருந்தார்கள், ஒரு அரசனிடம் அவமானபட்டேதான் அஸ்தினாபுரத்துக்கு வந்தார், அப்படிபட்ட துரோணர் ஏதோ செய்கிறார் தங்களுக்கு தெரியாமல் செய்கின்றார் என்பதை அறிந்து கொதித்தான்.

அதை அவையிலே சொன்னால் நிச்சயம் துரோணாரின் தலை வெட்டபடும், அவ்வளவு கொடிய குற்றம் ராஜதுரோகம்.

ஆயினும் நிதானமான அரஜூனன் இதனை துரோரணிடமே சொன்னான்.

அதிர்ந்தத துரோணார், நிலமையின் விபரீதத்தை அறிந்து தான் யாருக்கும் அப்படி ஒருவனுக்கு பயிற்சி அளிக்கவில்லை என அலறி அவனை அழைத்து கொண்டு காட்டுக்கு விரைந்தார்.

அந்த நாயினை கண்டபொழுதே அவருக்கு வியர்த்தது, அவ்வளவு துல்லியமாக அம்பு எறியும் சக்தி அதுவும் அசையும் இலக்கினை வீழ்தும் சக்தி யாருக்குமில்லை.

அவனை தேடி சென்ற துரோணருக்கு இன்னும் அதிர்ச்சி இருந்தது
அவன் ஆற்றுக்கு அந்த பக்கம் இருக்கும் மரத்திற்கு அம்படித்தான், அந்த அம்புக்களை தொடுத்து பாலமே கட்டினான், அதில் ஏறி செல்ல தயாரான பொழுதுதான் துரோணர் தடுத்தார்.

“நில், யார் நீ”

அந்த சத்தம் கேட்டதும் ஏகலைவன் அதிர்ந்தான், “குருவே” என காலில் விழுந்தான், அர்ஜூனனக்கு கோபம் அதிகமாயிற்று.

துரோணர் கத்தினார், “என் சிலையினை வைத்து பூஜித்து என்னை பெரும் சிக்கலில் இழுத்துவிட்டிருகின்றாய்?, இப்பொழுது நான் ராஜதுரோக குற்றத்தில் சிக்க போகின்றேன்” என உறுமினார்.

குனிந்தபடி காதை பொத்திகொண்டு சொன்னான் வேடவன் “குருவே நான் ஏகலைவன், இந்த காட்டின் வேடுவன்.

சில வருடங்களுக்கு முன் உங்களை பற்றி கேள்விபட்டு என் தந்தை என்னை உங்களிடம் பயிற்சி பெற சேர்க்க வந்தார், ஆனால் ராஜகுருமார்களுக்கு தவிர் உங்களால் பயிற்சி அளிக்கமுடியாது என மறுத்தீர்கள்.

நான் இந்த காட்டில் உங்களை குருவாக கொண்டு மனதார வணங்கி நானே பயிற்சி பெற்றேன், நானே உங்கள் நினைவில் வித்தைகளை கற்றேன், அப்படி உருவானேன்.

இதெல்லாம் உங்கள் நினைவில் நான் கற்றது, என் மனதில் இருந்து நீங்கள் சொல்லிகொடுத்தது, உங்களால் உருவானவன் நான், இந்த வித்தை நீங்கள் போட்ட பிச்சை” என வணங்கி நின்றான்.

துரோணருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி, ஒரு குருவுக்கு பெருமை பொன் அல்ல புகழ் அல்ல இன்னும் எதுவும அல்ல, தன் சீடன் ஒருவன் சாதித்து நிற்பது ஒன்றுதான் மகிழ்ச்சி.

அதுவும் தன்னை காணாமல் தன் நினைவு ஒன்றிலே மாவீரன் உருவானது அதை விட மகிழ்ச்சி, நிச்சயம் அவன் வித்தை அர்ஜூனனை விட பெரிது. தான் நேரில் உருவாக்கிய அர்ஜூனனை விட தான் காணாமலே உருவான அந்த ஏகலைவன் துரோணருக்கு பெரிதாய் நின்றான்
ஆனால் அதை துரோணாரால் வாய்விட்டு சொல்லமுடியாது.

துரோணரின் நிலை சிக்கலானது, அவனை சேர்த்துகொண்டால் சிக்கல் அவனை வெளிதள்ளவும் அவருக்கு மனமில்லை.

அதே நேரம் இன்னொரு பெரும் அச்சமும் அவரை ஆட்கொண்டது, இம்மாதிரி அரசகுடும்பம் அல்லா பெரு வீரர்களை அரசுகள் விடுவதில்லை, எதிரியிடம் சேரலாம் என அஞ்சி அவனை கொன்றுவிடுவார்கள்.

துரோணாருக்கு அவன் உயிரை காக்க வேண்டும்.

அதே நிலையில்தான் ஏகலைவனும் இருந்தான் “ராஜதுரோகம்” எனும் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தவன் அவன், அவன் துரோணாரை காக்க வேண்டிய அவசியத்தில் இருந்தான்
இருவருக்கும் ஒருவரை ஒருவர் கட்டிதழுவும் உருக்கமான இடம் அது, அதே நேரம் உயிர்தப்ப வைக்க வேண்டிய இடமும் அதுதான்.

துரோணர் தங்கள் இருவர் உயிரையும் காக்க ஒரு காரியம் செய்தார் , நிச்சயம் அவன் வலுவினை குறைத்துவிட்டால் அவனுக்கு ஆபத்து இல்லை, அவனின் குருபக்தி நிரூபிக்கபட்டால் அவருக்கும் சிக்கல் இல்லை.

பெருமூச்சு விட்ட அவர் கேட்டார் “ஏகலைவா, நான் குரு என்கின்றாய், ஆனால் குருதட்சனை ஏதும் கொடுத்தாயா?””

“என்ன வேண்டும் குருவே” என பணிந்தான் ஏகலைவன்
“உன் வலதுகை கட்டைவிரலை கொடுத்துவிடு போதும்” என்றார்.

ஆம், கட்டை விரல் இல்லாவிட்டால் அம்பு எறியமுடியாது. கட்டை விரல் இல்லா வில்வீரன் சக்கரம் இல்லா தேருக்கு சமம்.

அர்ஜூனன் அதிர்ந்தான் ஆனாலும் அவர் தன்னை நிரூபிக்க முயல்வதில் அமைதி கொண்டான்
ஏகலைவன் கொஞ்சமும் யோசிக்காமல் அதை வெட்டி தட்டி வைத்து குருதட்சனையாய் கொடுத்தான்.

துரோணருக்கு அந்த இடத்தில் ஓங்கி அழவேண்டும் போல் இருந்தது, ஒரு ஒப்பற்ற சீடனை அதுவும் கேட்டவுடன் கட்டை விரலையே தரும் உன்னத சீடனை கட்டி அழவேண்டும் போல் இருந்தது.

ஆனாலும் எதையும் வெளிகாட்டாமல் வந்தவர், அந்த கட்டைவிரலை ஒரு தங்க தாயத்தில் செய்து கழுத்தில் மாட்டிகொண்டார், உன்னதமான குருபக்தி தன்னை காக்கும் என்பது அவருக்கு தெரியும்
நடந்த சம்பவங்களை தூரத்தில் இருந்து உணர்ந்த கண்ணன் சிரித்து கொண்டான், காரணம் இந்த நாடகத்தின் சூத்திரதாரி அவனேதான்.

அந்த ஏகலைவன் அதிவீரன், ஆனால் நாளை யுத்தம் வந்தால் துரோணர் பக்கமே நிற்பான் அது பாண்டவருக்கு குறிப்பாக அர்ஜூனனுக்கு நல்லதல்ல என்பதால் இந்த நாடகத்தை அவன் நடத்தினான்.

காலங்கள் கடந்தன, துரோணர் கழுத்தில் அந்த கட்டைவிரல் தாயத்தாய் தொங்கியது
யுத்தம் தொடங்கி பெரும் அழிவுகள் நடந்து துரோணருக்கான காலம் நெருங்கியது, தன் கையில் ஆயுதம் இருக்கும் வரை அவரை கொல்லமுடியாது என்பது அவர் வாங்கி வந்தவரம்.

இப்பொழுது அந்த தாயத்தும் அவருக்கு வலிமை சேர்த்தது, உன்னத சீடனின் ஆத்மசக்தி அதில் இருந்தது அது இருக்கும்வரை துரோணரை சாய்க்கமுடியாது, அவரை சாய்க்காமல் துரியோதனை அழிக்க முடியாது அதர்மம் அழியாது.

கண்ணன் தந்திரம் செய்தான், ஒரு ஏழை அந்தணனாக வேடம் போட்டு துரோணரிடம் யாசகம் கேட்டான், தன் மகளின் மாங்கல்யத்துக்காக பிச்சை கேட்டான்.

துரோணர் தன்னிடம் எதுவுமில்லை என மறுத்தபொழுதும் , தன் மகளின் மாங்கல்யத்துக்கு தங்கம் போதும் என கேட்டதால் அவரும் தாயத்தை கொடுத்தார்.

அந்நேரம் யுத்த போக்கினாலும் துரியோதனின் பல அடாவடிகளாலும் குழம்பியிருந்த துரோணர் அந்த தாயத்தை கொடுத்தார்.

அவரின் பாதிபலம் நீங்கிற்று.

யுத்தத்தில் பொய் சொல்லாத தர்மம் கண்ணன் திட்டபடி “பீமன் அஸ்வத்தாமன் எனும் யானையினை கொன்றான்” என்பதை சொல்லும் பொழுது யானையினை எனும் வார்த்தையினை மெதுவாக சொன்னான்.

அது பீமன் அஸ்த்தாமனை கொன்றான் என துரோணர் காதில் விழுந்தது.

துரோணர் தன் கையில் இருந்த வில்லை விட்டார், ஆயுதமற்ற அவரை திருஷ்டதுய்மன் எனும் பாஞ்சாலியின் சகோதரன் வீழ்த்தினான், அவர்களுக்குள் ஏற்கனவே பகை இருந்தது பாஞ்சாலி அவமானபடுத்தபட்டபொழுது அது இன்னும் கூடிற்று.

அவர் வீழ்ந்துகிடக்கும் நேரம் கண்ணன் புல்லாங்குழலோடு அவர் முன் நின்றான், அந்த புல்லாங்குழலில் ஏகலைவன் விரல் பதிக்கபட்டிருந்தது.

ஏகலைவன் நினைவுகளோடும் அந்த சீடன் இருந்தால் தான் செத்திருக்கமாட்டேன் என்றும், அர்ஜூனனுக்காக அவன் கட்டைவிரலை வாங்கியது பாவம் என்றும் அந்த பாவத்திற்கு இந்த சாவு என்றும் நிம்மதியாக கண்மூடினார் துரோணர்.

துரோணரின் அந்த காரியம் பின்னாளில் அவரை தண்டித்தது.

அந்த விரலோடு அலைந்து ஏகலைவனின் பெருமையினை உலகுக்கு சொன்னான் கண்ணன் , நிச்சயம் ஏகலைவன் இருந்திருந்தால் பாரதபோரின் போக்கு மாறியிருக்கும்.

அவனை தன் தந்திரத்தால் பலமிழக்க வைத்தான் கண்ணன்.

கடைசியில் காட்டில் ஓய்ந்திருந்த கண்ணனின் கால் கட்டைவிரலை மான் என குறிபார்த்த ஏகலைவனின் வாரிசுகள் அம்பை விட்டு கண்ணனை சாய்த்தனர்.

ஏகலைவன் கட்டைவிரலோடு அவன் வாரிசுகளாலே வீழ்த்தபட்டு கிடந்தான் கண்ணன், அவன் அவதார நோக்கமும் முடிந்தது.

மகாபாரத கதையில் மிக உருக்கமும் வியப்பும் நிறைந்தது ஏகலைவன் கதை, கர்ணன் கதை போல அதுவும் அழுத்தமான வலியினை கொடுப்பது.

குருவினை சீடன் காக்க, சீடனை குரு காத்த உன்னத கதை அது.

சீடனும் குருவும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், குருவே ஆனாலும் அறம் தவறினால் அழிவார் என்பதையும் சொன்ன காட்சி அது.

கண்ணனே அதர்மத்தை ஒழிக்க அதர்ம வழியில் ஏகலைவன் கட்டைவிரலை பெற்ற பாவத்துக்கு அவன் வாரிசுகளால் ரத்தவெள்ளத்தில் மிதந்து அவதாரத்தை முடித்தான் , தவறு செய்யும் யாரும் தப்பமுடியாது என்பதை உருக்கமாக சொன்ன வரலாறு அது.

அந்த ஒப்பற்ற தத்துவத்தை புதிய கல்வி கொள்கைக்கு எதிராக உளறிதிரியும் கும்பலை கண்டால் பரிதாபமே வருகின்றது.

சரி, திராவிட கல்வி கொள்கையில் இதுவரை எத்தனை விஞ்ஞானிகள் உருவானார்கள் என்றால் இவர்கள்தான்.

வை.கோப்பால்சாமி, நாஞ்சில் சம்பத், தீப்பொறி ஆறுமுகம் இன்ன பிற…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here