தலைக்கு வந்தது…. தலைப்பாகையோடு போனது.

.ஆம்….. தலைக்கு வந்தது….தலைப்பாகையோடு…. போகப் போகிறது. தறுதலைகள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இனி எங்கே சென்று ஒளிந்து கொண்டாலும், இனி அவை எடுபட போவதில்லை….பஞ்சாப்பில் இதுவரை காலமும் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றது இல்லை….. இனி அந்த கவலை இல்லை….. அதற்கான வழியை அவர்களே நேற்று ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள்.

விமான நிலையத்தில் வைத்து பிரதமர் சொன்னதாக சொல்லும் வார்த்தை பயத்தால் வந்தவை அல்ல…. அது கூட புரியாத பித்துக்குளிகள் அரசியல் விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் கையாலாகதனத்தை தோலுரித்து காட்டி இருக்கிறார்… இது சீக்கியர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அவமானம்.இந்தியாவில் சீக்கிய சமுதாய மக்களுக்கு மாத்திரமே ஆயுதம் வைத்திருக்க….. அதாவது கத்தியை அதிகாரபூர்வமாக அவர்களுடன் எங்கும் எடுத்த செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்….. ஏனெனில் அவர்களை பொருத்தவரை….. ஓர் உண்மையான சீக்கியரை பொருத்தவரை அது அவர்களின் மதக் கடமையும் கூட…. ஆயுதமேந்திய தன்னை அண்டி வந்தவர்களை காப்பதே பிரதான கடமை. உடனிருக்கும் மனிதர்களை…. மதத்தின் பெயரால் காப்பது அவர்களுடைய வாழ்நாள் லட்சியம்.

இது இங்கு முன்னொரு காலத்தில் நம் தமிழகத்தில் உள்ள சத்ரியனை போல…. சத்ரிய சமூகத்தினரை போல…. இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது….. எப்படி இங்கு உள்ள சத்ரிய சமூகத்தினர் பலர் தடம் மாறி …. தடுமாறி நிற்கிறார்களோ….. அதுபோலவே ஒரு கூட்டம் பஞ்சாபிலும் கிளம்பி இருக்கிறார்கள்…..

அல்லது அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது நேற்றைய தின சம்பவம். இது பெருவாரியாக உள்ள உண்மையான சீக்கியர்களை உசுப்பி விட்டு உள்ளது.இதேபோன்றதொரு சமாச்சாரத்தை 80 களில் முன்னெடுக்கப்பட்டது… அங்கு பிரிவினை பேச்சு பொருளானது. இல்லை என்று திடமாக மறுத்தார். செயலில் நிரூபித்துக் காட்டினார். அவர் தான் தில்லான கில். KPS கில் ! தேசம் கைவிட்டு போனதாக சொன்ன பஞ்சாப்பியரை பந்தாடினார்.இரும்பு பிடிக்குள் பஞ்சாப் மாநிலத்தை உடும்பு பிடியாக கொண்டு வந்தார்.

அங்கு உள்ள பெரும்பாலான மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே இல்லை என்பது ஆணித்தரமாக எடுத்து காட்டினார்.பின்னர் ஆட்சிக்கு வந்த நயவஞ்சக அரசியல் வியாதிகள் தங்களுடைய வியாபாரம் படுத்து விடும் என கதை விட்டு கூத்தடித்தடித்து கொண்டு இருக்கிறார்கள்.பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை இரண்டு தேசங்களிலும் பஞ்சாப் இருக்கிறது.

ஒன்று இந்தியா வசம் மற்றொன்று பாகிஸ்தான் வசம். சுதந்திர இந்தியா சமயத்தில் நேரு செய்த முட்டாள் தனங்களில் இதுவும் ஒன்று. நேர்மையாக அவர் நடந்த கொள்ளவில்லை என்பதற்கான சரித்திர சான்றுகள் இவை. நம் வசம் உள்ள பஞ்சாப் பகுதி முழுவதும் வயலில் வேலை பார்ப்பவர்கள் அதிகம் இருக்க….. வற்றாத ஜீவநதி பாயும் விளை நிலங்கள் இருக்க… அதன் மேற்கு கரை பஞ்சாபில் நிலச்சுவன்தார்கள் கோலோச்சி கொண்டு இருக்கிறார்கள்.இவர்களின் பிரதான பயிர் கோதுமை.

அடுத்ததாக அரிசி….. ஆன போதிலும் இவை மக்கள் பசியாற பயன்படுவதை காட்டிலும் போதை வஸ்துவாக பீர் பீப்பாய் பீப்பாய்யாக உருட்டுகிறார்கள். அந்த பணத்தில் உருளுகிறார்கள். இதற்கான வழித்தடத்தில் உள்ளது தான் காஷ்மீர். அப்படி தான் காலங்காலமாக அந்த பிராந்தியத்தை ஒரு சிறு கூட்டம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

நம் ஊரில் நெல் கொள்முதல் செய்யும் போது செய்யும் தகிடுதத்தங்களை உணர்ந்தவர்களுக்கு இது வெகு சுலபமாக புரியும். இதே பாணியில் ஆனால் அதனை காட்டிலும் மிகப் பெரிய அளவில் அங்கு அவர்கள் செய்கிறார்கள்.விளைந்த கோதுமை பயிர் அரசு கொள்முதல் மையங்களுக்கு வர…. வழியிலேயே இடைத்தரகர்கள் மறித்து தரம் பிரித்து வைத்து விடுவார்கள்…. ஆனால் விவசாயிகளுக்கு இந்த பணம் போய் சேராமல் பார்த்துக் கொண்டு விடுவார்கள்.

அரசு நிர்வாகம் கொள்முதல் செய்த கோதுமையை நம் ஊரில் உள்ளது போலவே அங்கும் வெட்ட வெளியில் போட்டு வைத்து விடுவார்கள்….. ஆனால் மேலும் ஒரு தந்திரமான காரியத்தை செய்து தண்ணி காட்டி விடுவார்கள்.அட….. நிஜமாகவே கோதுமை நிரப்பப்பட்ட சாக்குகள் மீது தண்ணீர் காட்டுவார்கள். என்னவாகும் விதைகள்….. மூன்றாவது நாள் முளை வந்துவிடும்… கொள்முதல் நிலையங்களில் வைத்தே இனி அவை உணவுக்கு உதவாது என்று சொல்லி ஒரு சுபயோக சுப தினத்தில் கை மாற்றி விடுவார்கள்.

அதாவது உணவு தானியங்கள் வீணாகி போய் விட்டது என்று சொல்லி மிக மிக குறைந்த கட்டணத்தில் ஏலத்தொகை நிர்ணயம் செய்து ஏலம் விட்டுவிடுவார்கள்….. சில சந்தர்ப்பங்களில் இவை அப்புறப் படுத்த அரசு செலவு செய்ததாக கணக்குகள் வேறு காட்டப்பட்டுள்ளது.

இந்த கோதுமைகளை நேரிடையாக நொதி கூடத்திற்கு எடுத்து சென்று நொதித்து மதுபான ஆலைகளுக்கு மடைமாற்றும் செய்து கொள்ளை லாபம் விடுகிறார்கள். சாமானிய மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்..‌ அரசுக்கும் இது நன்றாகவே தெரியும் சங்கதிகள் தான்.

கட்டிங் சமாச்சாரம் அது வரை கைமாறுவது உண்டு. இதற்கு கைமாறாக விவசாய இடு பொருட்கள்….. தடையில்லா மின்சாரம் என பல வித விதமான சலுகைகள் கிடைக்கும்.தரமான கோதுமையை மிகப் பெரிய ஆலைகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் போய் சேர்கிறது…. நமக்கு கோதுமை மாவு பாக்கெட்டுகளாக விற்பனைக்கு வந்துவிடுகிறது.

குறைந்த பட்சம் ஐம்பது ரூபாய் வரை விற்பனைக்கு வரும் இதன் பேக்கிங் செலவு மற்றும் மாவாக அரைக்கும் செலவு தவிர வேறேதும் இதில் கிடையாது. அந்த வகையில்….. ஒரு கிலோ ஒரு ரூபாய் எண்பது காசுகள் தான் செலவு என்று புள்ளி விபர கணக்கு வரை சொல்லி நம்மை அதிர வைக்கும் காட்சிகளும் நம் வசம் இருக்கிறது.

இது தவிர ஒரு உதாரணம் பாருங்கள், ஒரு விவசாயி தனது நிலத்தில் இருந்து நேரிடையாக தற்போது வெளி மார்கெட்டில் கிடைக்கும் விலையில் இந்த கோதுமையை அரவை நிலையங்களுக்கு கொண்டு சென்று அரைத்து விற்பனைக்காக கொண்டு வந்தாலுமே கூட 13 ரூபாய் இருபத்திமூன்று பைசா மட்டுமே செலவாகும் என்றும் ஒரு கணக்கு உள்ளது.அப்படி என்றால் எத்தகைய பணப்புழக்கம் இதில் புழங்குகிறது என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் மீதான வர்த்தக விற்பனையை காட்டிலும் இதில் நடக்கும் கொள்ளை சம்பவமும் அதன் பொருட்டான லாபமும் ஏராளம். இத்தனைக்கும் இவை அனைத்தும் மானியத்தில். நம் இந்திய மக்களின் வரிப்பணத்தில் சீக்கியர்களின் பெயரை சொல்லி பஞ்சாப் மாநிலத்தில் கொள்ளை அடித்திக்கொண்டு இருக்கிறார்கள்.

இது என்ன பிரமாதம் என்பது போல…. காஷ்மீர் பகுதியில் நிலவிய சூழலை பயன் படுத்தி கொண்டு… அதாவது ஆர்ட்டிகள் 370 மூலமாக காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் வரியில் வராமல்… உணவு தானியங்களை அரசு விநியோகம் செய்து வந்தது.

அதாவது 1948-49 காலம் முதல். இதில் 1990 களுக்கு பிறகு கோதுமை மற்றும் பாஸுமதி அரிசியை டன் கணக்கில் மடை மாற்றம் செய்து கொண்டு வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட புது தில்லியில் பயன்படுத்தப்படும் அளவிற்கு உணவு தானியங்கள் காஷ்மீர் பகுதியில் செலவாகி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆனால் இதனை கர்ம சிரத்தையுடன் செய்து வந்திருக்கிறார்கள்.இதனை எல்லாம் உடைக்கும் விதமாக இந்திய அரசு நிர்வாகம் வேளாண் சட்டத்தை கொண்டு வந்தது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…… விட்டுவிடுவார்களா…. இந்த மாஃபியா திருடர்கள்…. இவர்கள் அனைவருமே வேட்டையாடப்பட வேண்டிய திருடர்கள்….. சீக்கியர்கள் போர்வையில் ஒளிந்து கொண்டு விளையாட்டு காட்டி வருகின்றனர்.

இவர்களுடைய வர்த்தக மதிப்பு மட்டுமே இருபத்தியோராம் கோடி ரூபாய் அளவிற்கு இருந்ததாக சொல்கிறார்கள்.போதாக்குறைக்கு பஞ்சாப் மாநிலத்தின் ஊடாக பாகிஸ்தானிய பகுதிகளுக்கும் இந்த தானியங்கள் கை மாறுகிறது என்கிறார்கள்….எல்லை நெடுகிலும் உள்ள பாகிஸ்தானிய பகுதிகளில்….. குஜராத் முதல் காஷ்மீர் வரை உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் எல்லையில் மாத்திரம் எப்போதும் சண்டை நடந்ததாக….. அத்துமீறி நுழைந்ததாக தகவல்கள் நமக்கு வராமல் இருப்பதன் நிஜ பின்னணி இது தான் என்கிறார்கள்.

நம் தமிழகத்தில் எப்படி தமிழர்கள் தமிழர்கள் என்று சொல்லி இந்தியாவில் உள்ள நம்மை….. இலங்கையில் உள்ளவர்களோடு இணைத்து தொப்புள் கொடி உறவு என்று பம்மாத்து வேலை செய்தார்களோ….. அது போலவே இந்த விஷயமும் அங்கு….. இரண்டு பட்ட பஞ்சாப் மாநிலத்தை கொண்டு கபடி ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.

மிச்சமாக கேள்வி கேட்டால்….. தனி நாடு கோரிக்கையை எடுத்து கொண்டு விடுவார்கள் என்று பம்மாத்து பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.இது முன்னாள் ராணுவ கேப்டன் அம்ரீந்தர் சிங்கிற்கு மிக நன்றாகவே தெரியும் சங்கதிகள் தான். இவர் கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆட்சி பொறுப்பில் இருந்த போதிலும் ஒரு எல்லைக்கு மேல் இவர்களை வளர விடக்கூடாது என்பதற்காக பல விதங்களில் முனைப்புடன் செயலாற்றி வந்தார்.

இதன் பொருட்டே தனது கை வரிசையை முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் மூலமாக காட்டி இவரை ஓரம் கட்டி விட்டது. தற்போது இவர் தனிக் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். நம் தமிழகத்தில் உள்ளது போலும் பஞ்சாபிலும் சீக்கிய சமுதாய மக்களிடையே பிரிவினை வாத முடை நாற்றம் உண்டு.

அநேகமாக இந்த முறை அங்கு மிகப்பெரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் ஏற்படும் என்பதற்கு உண்டான அறிகுறிகள் அனைத்தும் தென்பட ஆரம்பித்து விட்டது…. கூடிய சீக்கிரம் சீக்கிய சமுதாய மக்களுக்கு விடிவு காலம் பிறந்தால் சரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here