இந்த வாரத்தில் நம் செய்தி ஊடகங்களில் மிகவும் அடிப்பட்ட இடம்…. அல்லது பெயர் நாகாலாந்து தான். அதுவும் இந்திய ராணுவம் அப்பாவி மக்களை கொன்று விட்டது என்று தான்…..செய்தி வாசித்து கொண்டு இருக்கிறார்கள்.இப்படி சொல்பவர்கள் எந்த நாட்டின் பிரஜைகள் என்பது தான் தெரியவில்லை.
ஊடகங்கள் என்பதன் தாத்பரியம் நிகழ்வினை ஊடுருவி தகவலை தெரிவிப்பது…. ஆனால் இவர்கள் நடந்த விஷயத்தை கோணங்கித் தனமாக வேறோர் கோணத்தில் சொல்லி இருக்கிறார்கள். தீவிர வாதிகளை காட்டிலும் இவர்கள் தான் ஆபத்தானவர்கள்.சம்பவம் நடந்த இடம் மிகவும் சந்தேகத்திற்குரிய எல்லையை ஒட்டிய பிராந்தியம்.
வெறும் முப்பது கிலோமீட்டர் தொலைவில் மியான்மார் இருக்கிறது. தற்போது அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற போதிலும் ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்ற ஆங் சாங் சுகியை கைது செய்து வீட்டு காவலில் வைத்து இருக்கிறார்கள். பின்னணியில் சீன ஆதரவு அரகன் ஆர்மி இருக்கிறது என்கிறார்கள். தீர்ப்பு வேறு வந்திருக்கிறது கடந்த வாரத்தில் தான்.
இந்த இடத்தில் பணியில் இருப்பது அஸ்ஸாம் ரைபிள் படை பிரிவினர் இந்திய ராணுவம் இல்லை. இதுவே இவர்களுக்கு தெரியவில்லை. இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கண்காணிப்பில் வரும் படைப்பிரிவு தான் இந்த அஸ்ஸாம் ரைபிள் படை.
இவர்கள் இருபத்தியேழாவது பட்டாலியனாக இருப்பவர்கள். இதில் பணிபுரிபவர்கள் அனைவருமே வடகிழக்கு மாநிலங்களாக இருக்கும் ஆறு மாநிலங்களில் உள்ளவர்கள் தான்.இந்திய ராணுவ மேஜர் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் சுழற்சி முறையில் இரண்டு மூன்று வருடங்களுக்கு அதிகாரிகளாக இங்கு பணிபுரியும் வாய்ப்பு உள்ளது.
சம்பவம் நடந்த சமயத்தில் ஒரு டிரக் வண்டியை நிறுத்த சொல்லி அவர்கள் கேட்காமல் சென்றதன் விளைவுகள் தான் இது அத்தனையும்…… வண்டியை நிறுத்த சொல்லி கேட்காமல் சென்றால் கொன்று விடலாமா என்று இடக்காக கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்வது நல்லது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இதே அஸ்ஸாம் ரைபிள் படை பிரிவின் கட்டளை தளபதியாக பணிபுரிந்த விப்லப் திரிபாதி என்பவரை அவரது குடும்பத்தினர் உட்பட காவலுக்கு உடன் இருந்தவர்களையும் சேர்த்து மணிப்பூர் மாநிலத்தில் வைத்து கொன்று இருக்கிறார்கள்.
இதன் பின்னணியில் இருந்தது சீனா தான் என்பது நிரூபணமும் ஆகி இருக்கிறது.இப்படி ஒரு சூழ்நிலையில் மேற்கண்ட செய்தியை சொன்னவர்களை….. பெய்ஜிங்கிற்கு பிறந்தீர்களா…… என்று கேட்க தோன்றுகிறதா இல்லையா….சந்தேகத்திற்குரிய நடமாட்டங்கள் தீவிர கண்காணிப்பில் வரும் இடங்கள் இவை. இது அங்கு உள்ள மக்களுக்கும் அறிவுத்தப்பட்டிருக்கிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில்…….. நிறுத்த சொல்லியும் மீறி சென்றால்….. அப்படி சென்ற வாகனங்களில் ஆட்கள் இருந்தால்……. அவர்களும் அடையாளம் மறைக்க கலகக்காரர்களை முகத்தில் கருப்பு வண்ணம் பூசி இருந்தால்…… என்ன நினைப்பார்கள்.பிறகு தான் தெரிய வந்திருக்கிறது அருகில் உள்ள நிலக்கரி சுரங்க வேலைகளில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது….அந்த சமயத்தில் அந்த படைப் பிரிவு சுட்டப்போது இறந்தது ஏழு பேர் மாத்திரமே.
உடனடியாக விஷயத்தை உணர்ந்த படைப்பிரிவினர் தங்கள் துப்பாக்கிகளின் கேட்ரிஜ்களை…. அதாவது தோட்டாக்கள் போடும் பகுதியை முழுவதுமாக அகற்றி விட்டு காயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய விஷயம்.ஆனால் வேண்டும் என்றே ஒரு குறிப்பிட்ட சமயத்தை சார்ந்தவர்கள்…. பொது மக்கள் போர்வையில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.
இதில் ஒரு வீரர் கொல்லப்பட்டும் இருக்கிறார். இதனை யாருமே செய்தி ஊடகங்களில் குறிப்பிடவில்லை.அதன் பிறகே கலவரத்தை கட்டுப்படுத்த வீரர்கள் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து மொத்தமாக 15 ஆக உயர்ந்துள்ளது.இது போன்ற ஒரு சூழ்நிலையில் நீங்களாக இருந்தாலும் இதே நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள பிரயத்தனப்படுவீர்கள்.
படைவீரர்களுக்கு பொறுப்பு அதிகம்.இந்த இடத்தில் செயல் சரியா தவறா என்பதை காட்டிலும் சூழ்நிலையை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது.உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகம் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். இது தீர்வு அல்ல…. அதேசமயம் தவறை உடனடியாக உணர்ந்து ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இது தான் மிக முக்கியமானது.ஓர் அரசு என்பது யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது அல்ல….. அதனை சரியாக செய்து இருக்கிறது நம் மத்திய அரசு நிர்வாகம்.ஆனால் பிரச்சினையை ஊதி பெரிதாக்க நினைப்பவர்களுக்கு இது அவல் பொரி சமாச்சாரமாக தெரிகிறது.
நாட்டின் மாண்பை குலைக்க….. குறைக்க…… பல சதிவேலைகள் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் சர்வ ஜாக்கிரதையாக முனைப்புடன் செயலாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
யாரோ குறிப்பிடும் முண்ட கலப்பை போல் இல்லாமல் சரியான விதத்தில் விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டியது நம்மிடம் தான் இருக்கிறது.சரியான விதத்தில் இருந்திருக்குமானால் …… சம்பவம் ஒன்று இன்ன விதத்தில் நடந்திருக்கிறது…. பொறுத்திருப்போம் முழு தகவல்களும் தெரிய வரும் வரை என்றாவது சொல்லி இருக்க வேண்டும்….. அதனை விடுத்து இந்திய ராணுவத்தினர் அப்பாவி மக்களை கொன்று இருக்கிறார்கள் என்று செய்தி வாசித்து கொண்டு இருக்க மாட்டார்கள்.