மதக்கலவரத்தை தூண்டுபவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?

பகுத்தறிவு கும்பல் என சொல்லும் அரைவேக்காட்டு கூட்டம் இப்பொழுது மறுபடியும் ஆட துவங்கிவிட்டது , கருப்பர் கூட்டம் என முன்பு கந்த சஷ்டி கவசத்தை கொச்சைபடுத்தியது போல இப்பொழுது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை குறிவைத்தும் மிக கொச்சையான ஆபாச கதைகள் பகிரபடுகின்றன‌.

சமூக ஊடகங்களில் மதகலவரத்தை தூண்டினால் நடவடிக்கை என சொன்ன அரசு இப்பொழுது அமைதி காப்பதெல்லாம் என்னவகையோ தெரியவில்லை.

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அந்த வீடியோவில் சிதம்பரம் நடராஜரின் நடனத்தையும் தில்லை காளி நடனத்தையும் மிக கொச்சைபடுத்தி பேசியிருப்பது கண்டிக்கதக்கது மட்டுமல்ல இந்துக்களின் மனதை நோகடிக்க வைப்பது.

இந்து புராணங்கதைகள் பன்னெடுங்காலத்துக்கு முந்தையவை, அப்பொழுது மானிட உருவங்களும் உலக உயிர்கள் வடிவும் ஏன் இன்னும் பூமியின் அமைப்புமே மாறி இருந்தன, பன்னெடுங்காலத்துக்கு முன் இப்பொழுது சிறியதாக உள்ள எல்லாமே பிரமாண்டமாக இருந்தது என்பது விஞ்ஞானம் ஒப்புகொள்ளும் உண்மை.

அப்பொழுது மனிதர்களும் விலங்குகளும் பறவைகளும் பெருவடிவம் கொண்டவையாக இருந்தன, அப்படித்தான் ராமாயண அனுமனும், முருகனை சுமந்த மயிலும் தெய்வங்களாயின இங்கு எதுவும் பொய் இல்லை.

அப்படிபட்ட இந்து ஞானம் இன்று உலகம் சொல்லும் பல விஞ்ஞானங்களை அன்றே சொன்னது, ஆனால் அக்கால மானிடருக்கு புரியும் வடிவில் லவுகீகவடிவாக சொன்னது.

பெரும் சக்தியில் இருந்து ஒரு சக்தி தோன்றுவது வானமண்டலத்தில் இயல்பு, அங்கு ஒவ்வொரு நாளும் புது விண்மீன்கள் தோன்றுகின்றன, பல விண்மீன்கள் அழிகின்றன, புது புது மண்டலங்கள் தோன்றுகின்றன, இவை எல்லாமே ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இதனைத்தான் அன்று சிவனில் இருந்து முருகன் வந்தார், பார்வதியில் இருந்து பிள்ளையார் வந்தார் என இந்துமதம் சொன்னது அதை மக்களுக்கு புரியும் வடிவில் லவுகீக கதையோடு சொன்னது
இப்பொழுது திராவிட கும்பலால் கொச்சைபடுத்தபடும் நடராஜ தத்துவம் என்ன?

இந்த பிரபஞ்சம் முழுக்க சிவன் என சொன்னது இந்துமதம், சிவனை பிரபஞ்சமாகவும் அந்த பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியினை அன்னை தேவியாகவும் சொன்னது இந்துமதம்
இன்று வானில் எத்தனையோ கோள்கள் லட்சகணக்கான விண்மீன்கள் இன்னும் மானிடன் எண்ணிமுடியாத அல்லது அவனால் கணக்கிடமுடியாத கோடான கோடி கோள்களும் மண்டலமும் உண்டு, அவற்றை எல்லாம் இயக்குவது ஒரு சக்தி.

அந்த பெரும் சக்தியினைத்தான் உலகமாதா என்றார்கள் இந்துக்கள்.

விண்வெளி இயக்கத்தை அணுவோடு ஒப்பிடுவார்கள், ஒரு அணுவினை இன்னொரு சக்தி கொண்டு துளைத்தால் அது பல அணுவாக மாறும், அவற்றை துளைத்தால் அல்லது இணைத்தால் சக்தி வெளிபடும் அல்லது புதிய விஷயம் உருவாகும்.

அந்த அணு அல்லது அசையா பொருளை சிவம் என்றார்கள், அதை இயக்கும் சக்தியினை தேவி என்றார்கள்.

அணுகுண்டில் யுரேனியத்தை சிவம் என கொண்டால் அதை இயக்கும் நியூட்ரான் துகளை சக்தி என சொல்லலாம், இரண்டும் சேர்ந்தால் பெரும் சக்தி வெளிபடும்.

இந்த அணு தத்துவத்தையும் அப்படியே பிரபஞ்ச தத்துவத்தையும் கொண்டதுதான் சிவநடனம்
விஞ்ஞானம் சொல்கின்றது இங்கு எதுவும் இயங்காமல் இல்லை, பூமி சுழல்கின்றது, சந்திரனும் சூரியனும் சுற்றுகின்றது இன்னும் இந்த சூரிய மண்டலமும் பால்வெளியும் சுற்றிகொண்டே இருக்கின்றன ஒரு நிமிடம் கூட அவை ஓயவில்லை, ஓய்ந்தால் இந்த பிரபஞ்சம் அழிந்துவிடும்
இந்துக்கள் பிரபஞ்சத்தை சிவவடிவில் சொன்னவர்கள், ஐம்பெரும் பூதமும் சிவன் வடிவில் உள்ளதை சொன்னவர்கள், இதனால் இன்று விஞ்ஞானம் சொல்லும் ஓய்வில்லா சுழற்சியினைத்தான் சிவநடனம் என சொன்னார்கள்.

அதனால்தான் சிதம்பரத்தில் நடராஜ கோலத்தில் சிவனை நிறுத்தி இந்த ஆட்டம் அணுசக்தி முதல் பிரபஞ்சம் வரை உள்ள ஆட்டத்தின் குறியீடு என்றார்கள், அனுவுக்குள்ளும் ஓயா ஆட்டம் உண்டு பிரபஞ்சத்திலும் அந்த ஆட்டம் உண்டு.

இதனை அன்று விளக்கி சொல்லமுடியாத இந்துமதம் சிவன் வடிவில் சொல்லிற்று
அப்படியே சக்தி எனும் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி அந்த ஆட்டத்தை நிறுத்த முயன்றால் பிரபஞ்சம் அழியும் என்பதை சிவன் காளியினை ஆட்டத்தில் வென்றார் என சொல்லி அதாவது பிரபஞ்ச இயக்கத்துக்காக தில்லையில் காளியினை வென்று தன் ஆட்டத்தை தொடர்ந்தர் என்றது.
இதெல்லாம் மாபெரும் ஞானத்தின் அடையாளங்கள், இன்றும் விஞ்ஞானம் 5% கூட கண்டறியாத உண்மையினை அன்றே மிக முழுமையாக இந்துக்கள் அறிந்ததிருந்ததின் பெருமை மிகு அடையாளங்கள்.

எல்லா இடங்களிலும் இரு சக்திகள் ஒரு அசையா சக்தியில் அசையும் சக்தி புகுந்தால்தான் ஒரு இயக்கம் நடக்கும்.

மானிட உடலுக்கு உயிர் போல, நிலத்துக்கு நீர் போல, காருக்கு பெட்ரோல் போல, ஏன் அணுகுண்டுக்கு நியூட்ரான் கதிர் போல ஒரு இணைவு அவசியம்.

அந்த இணைவைத்தான் சிவசக்தி தத்துவம் என்றார்கள்.

இந்துக்களின் ஞானமும் பெருமையும் மிக மிக பழமையானது, சிலாகிக்க கூடியது கொண்டாட வேண்டியது அதை கொச்சைபடுத்துவது சரியல்ல‌.

சிதம்பரம் ஆலயத்தில் சில கட்டுபாடுகள் இருக்கலாம், அது எல்லா பெரிய மத தலமையகங்களிலும் இருப்பதே.

அங்கு நந்தன் கதை என பிரச்சினையினை கிளப்புவதும் சரியல்ல.

நம்பியாண்டர் நம்பியும், சேக்கிழாரும் தொகுத்த பெரிய புராணத்தில் நந்தன் கொண்டாடபட்டான், அவன் திருஞான சம்பந்தர் போல ஆண்டாள் போல தன் ஜோதியினை சிவனோடு கலந்து ஐக்கியமானான்.

இந்த நந்தன் சர்ச்சையினை 17ம் நூற்றாண்டின் கோபால கிருஷ்ண பாரதி என்பவர்தான் தொடங்கிவைத்தார், அவர் சொன்னதெல்லாம் ஆதாரமில்லா திரிபுகள்.

நாம் மூல நூலை தந்த சேக்கிழாரை பின்பற்றவேண்டுமே தவிர குழப்பம் மிகுந்த கோபால கிருஷ்ணபாரதி என்பவரை அல்ல‌.

இந்த குபீர் திராவிட பகுத்தறிவு கோஷ்டி நடராஜரை கேவலபடுத்துவதாக எண்ணி இந்நாட்டின் மிகபெரிய விஞ்ஞான மற்றும் ஆன்மீக சிந்தனையினை கொச்சைபடுத்தி தங்களுக்கு கொஞ்சமும் அறிவே இல்லை என்பதை காட்டுகின்றது.

இந்த நடராஜர் தத்துவம் சாதாரணம் அல்ல‌.

இதுதான் அணுதத்துவம், இதுதான் பிரபஞ்ச இயக்க தத்துவம் என உலக அணு ஆய்வு கழகமான “சென்” அமைப்பு நடராஜர் சிலையினை தங்கள் அலுவலக வாசலில் நிறுவியுள்ளார்கள்.

அணு தொடர்பான அனைத்து ஆய்வுகளையும் நடராஜர் சிலை இருக்கும் அந்த வளாகத்தில்தான் செய்கின்றார்கள்.

அணுகுண்டை வடிவமைத்த ஓபன் ஹைமரும் , ஐன்ஸ்டீனும் பகவத் கீதையின் வரிகளை அணுகுண்டு வெடித்தபொழுது சொன்னார்கள்.

அணுவிஞ்ஞானிகளும் பிரபஞ்சத்தின் ஓய்வில்லா இயக்கத்தை ஆராயும் விஞ்ஞானிகளும் நடராஜ தத்துவம் மாபெரும் விஞ்ஞான பிரபஞ்ச தத்துவத்தை சொல்வதை நம்பி அதனில் இருந்து ஆய்வுகளை தேடுகின்றார்கள்.

அவர்களுக்கு மூல அணுவினை நோக்கி “கடவுளின் துகள்” எனும் துகளை நோக்கி செல்லும் ஆய்வுக்கு சிவநடனமும் காளி நடனமுமே அந்த ஆய்வே முக்கியமாகின்றது.

அசையா பொருளில் பெரும் சக்தி ஒன்று மோதிதான் இங்கு உலக இயக்கம் தொடங்கிற்று அதுதான் பிரபஞ்சம் முதல் அணுவரை இங்கு எல்லாமே இயங்கி கொண்டிருக்க காரணம் என்பது விஞ்ஞானிகள் கூற்று.

ஆனால் தொடக்க பொருள் என்ன, தொடக்க சக்தி என்ன இதனை இயக்கிய சக்தி எது என்பதில்தான் ஆய்வு நடக்கின்றது.

அந்த ஆய்விற்கு நடராஜரும் அன்னை சக்தியும் அவர்களுக்கு பெரும் வெளிச்சம்காட்டி நிற்கின்றார்கள்.

இங்கு திராவிடம் பகுத்தறிவு என சொல்லும் கும்பல் இந்துமதத்தை விஞ்ஞான ரீதியிலாவது விளக்க வேண்டும் அல்லது அவர்கள் விஞ்ஞானிகளாக மாறவேண்டும்.

அதெல்லாம் தெரியாமல் இந்துக்களின் மூல நம்பிக்கை மேல் மூட நம்பிக்கை,ஆபாசம் என கொச்சைபடுத்துவது சரி அல்ல‌.

இன்று அணு, பிரபஞ்ச தத்துவத்தின் தொடக்க ஆய்வில் இருக்கும் விஞ்ஞானம் இன்னும் சில நூறு ஆண்டுகளில் இந்துக்கள் சொன்ன தெய்வமெல்லாம் உண்மை என முடிவுக்கு வந்து சரண் அடையும்
இந்த சரணடைதலை என்றோ சொன்ன மதம் இந்துமதம்.

இந்த இந்துமத விரோதிகள், இந்துக்களின் மூட நம்பிக்கை என இந்துக்களின் மனதை நோகடித்திருக்கின்றார்கள், அதைவிட கொடுமையாக இந்துமதம் உலக அணு ஆராய்ச்சிக்கு கொடுத்த பெரும் கொடையான, மேற்குலகமே வணங்கி நிறுத்தியிருக்கும் நடராஜர் தத்துவத்தை கொச்சைபடுத்துகின்றார்கள்.

இவர்கள் நல்ல இந்துக்களுமில்லை, நல்ல இந்தியர்களுமில்லை, இவர்கள் மூளையினை கழற்றிவிட்ட ஆட்டுமந்தைகள் வெற்று வேட்டுக்கள்.

இந்துமதத்தையும் புனிதமான நடராஜரையும் அதன் அருமையும் பெருமையும் தெரியாமல் கொச்சைபடுத்தும் இவர்கள்மேல் நிச்சயம் கடும் கண்டனமும் நடவடிக்கையும் அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here