‘நீட்’ தேர்வில் குழப்பும் தமிழக அரசு? சவுக்கை சுழற்றிய ஐகோர்ட் நீதிபதிகள்

‘‘தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் சட்டசபைத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் கொண்டு வருவோம்’’ என்ற வாக்குறுதியை, முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், இந்நாள் முதல்வருமான ஸ்டாலின், தன் பிரதான தேர்தல் வாக்குறுதியாக கூறினார்.
முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான ஸ்டாலின், தான் சென்ற ஒவ்வொரு தேர்தல் பிரச்சார கூட்டத்திலும், ‘நீட் தேர்வை ரத்து செய்ய கொஞ்சம் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் போதும்’ என்று அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த, அதிமுகவை சாடினார். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், உடனே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சத்தியம் செய்தார்.
ஆட்சிக்கு வந்ததும், ‘நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில், 9 பேர் கொண்ட குழுவை அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து இந்தக் குழுவிடம் மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்’’ என்று முதல்வர் அறிவிப்பு செய்தார். நீதிபதி ராஜனும், அரசு தன் தலைமையில் உருவாக்கிய குழுவுக்கான பணிகளை செம்மையாகவே செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில், தமிழக அரசு அமைத்துள்ள, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழு உருவாக்கம் சட்டவிரோதம், அதுகுறித்த அரசாணைக்குத் தடை விதிக்கக்கோரி, ஐகோர்டில் மனு தாக்கலானது. மிக முக்கியமான மனு என்பதால் தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதன்மை பெஞ்சில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முதன்மை பெஞ்ச், தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளது.

  • சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்கள் படி நடத்தும் நீட் தேர்வில், தமிழக அரசால் என்ன மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?
  • சுப்ரீம் கோர்ட் தீர்ப்பபுக்கு எதிராக, ராஜன் குழுவால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்திட முடியும்?
  • இதுபோன்ற குழு அமைக்கும் முன்னர், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறையான அனுமதி பெற்றதா?
    என்பது உட்பட அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, மத்திய, மாநில அரகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீட் குழுவுக்கு எதிராக ஐகோர்ட்?

ஆமாம். நிச்சயமாக இப்படியொரு முடிவக்கு நம்மால் வரமுடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும். காரணம், நீட் தேர்வு குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியும், சுப்ரீம் கோர்ட் சீனியர் வக்கீலுமான நளினி சிதம்பரம் சொன்னக் கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது.
‘‘நீட் தேர்வை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாது. நீட்டை பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது’’ என்று சுப்ரீம் கோர்ட் வாசலில் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், இது எல்லாம் தெரிந்து இருந்தும், நாடாளுமன்ற தேர்தல் நேரத்திலும், சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திலும், வாய் கூசாமல் பொய் பிரச்சாரம் செய்தது திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று ஒட்டு மொத்த கட்சிகளும் பொய் பிரச்சாரம் செய்தன.
தென் மாநிலங்களில் தமிழகத்தைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களும் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. இதில், கம்யூனிஸ்ட் ஆளும் கேரளாவும் உள்ளது. ஆனால், இது எல்லாம் தெரிந்தும், மக்களின் உணர்வுகளை அரசியல் ஆதாயத்துக்காகத் துாண்டி, குளிர்காய்ந்தன. ஆனால், இந்த விஷயத்தில் கோர்ட் தெளிவாகவே உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக, மாநில அரசு ஒரு குழுவை அமைக்கும் முன், அதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்று ஐகோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. இதனால், ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழுவுக்கு, ஐகோர்ட் தன் எதிர்ப்பை மறைமுகமாக பதிவு செய்துள்ளது என்பதுதான் உண்மை.

மழுப்பிய முதல்வர், தவித்த சுகாதாரத்துறை அமைச்சர்

‘‘தமிழகத்தில் இந்த முறை நீட் தேர்வு நடக்குமா? நீட் தேர்வில் அரசின் நிலைப்பாடு என்ன?’’ என்ற என் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் வரவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு கொடுத்த நெருக்கடியால்தான் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இது தெரிந்தும் திமுக பொய் சொன்னது’’ என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி சேலத்தில் நடந்த கூட்டத்தில், குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இதற்கு முன்னதாகவே, பேசிய முதல்வர், ‘‘நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யத்தான் குழு அமைப்போம் என்று சொன்னோம்’’ என்று தன் புத்திசாலித் தனத்தை நிரூபித்துள்ளார்.
அதேநேரத்தில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இதுகுறித்து பேசும்போது, ‘‘தமிழகத்தில் இப்போது வரை நீட் அமலில் உள்ளதால், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதில் கவனமாக இருக்க வேண்டும்’’ என்று வாய் திறந்துள்ளார்.
அதேநேரத்தில், நீதிபதி ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட்டில் வாதாடிய தமிழக அரசின் தலைமை வக்கீல் சண்முகசுந்தரம், ‘‘ஆளும் கட்சி தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின் அடிப்படையில், நீதிபதி ராஜன் குழு அமைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார். அதாவது, எல்லாம் பெயரவு, கண்துடைப்பு. அம்புட்டுத்தான்.

திராவிட அரசியலில் இதெல்லாம் சகஜம்தான்

நீட் மட்டுமல்ல, டாஸ்மாக் விஷயத்திலும், மின் அளவீடு விஷயத்திலும், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பாஸ் அனுமதியிலும் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு நிறையவே குளறுபடிகளை செய்து, அசத்தியுள்ளது. வாக்காளர்களை அசரடித்துள்ளது.
ரூபாய்க்கு 3 அரிசி என்று உறுதியளித்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, ஆட்சிக்கு வந்ததும், ‘‘ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், ஒரு படி நிச்சயம்’’ என்று பல்டியடித்தார். அவர் வழிவந்த திராவிட கட்சிகளின் அரசியல் உருட்டல்களுக்கும், வாய் ஜாலத்துக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டுமா?
அதேநேரத்தில், திமுகவின் வாயாலேயே வடை சுடும் வித்தையை நம்பி, ஓட்டுப்போட்ட தமிழக வாக்காளர்களின் நிலை, இன்னும் 5 ஆண்டுகளுக்கு பரிதாபம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here