கிருஸ்தவ காங்கிரஸ் எம்எல்ஏ ஆக்கிரமித்த கோயில் நிலம்! மீட்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பாரத தேசத்தில் அதிக அளவு கோயில்கள் நிறைந்திருப்பது தமிழகத்தில் தான். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் வானளவ எழுந்து நிற்கின்றன. நமது முன்னோர்கள் வெறும் கோயில்களை மட்டும் கட்டி வைக்கவில்லை. அந்த கோயில்களில் தடைபடாமல் பூஜைகள் நடக்கவும், பராமரிக்கவும் பல ஆயிரக்கணக்கான நிலங்களை தானமாக எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர். அப்படி எழுதி வைதக்கப்பட்ட நிலங்களில் 40,000 ஏக்கர் நிலங்கள் தற்போதும் ஆக்கிரமிப்பில் உள்ளன. 1947 ல் ஆங்கிலேயன் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், இந்த மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ், திராவிட கட்சிகளின் ஆட்சியில் பாகுபாடின்றி அதிகாரிகளின் உதவியோடு அரசியல் புள்ளிகள் இந்த ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அதிலும் பிற மதத்தவர்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து கல்வி நிறுவனங்கள், தங்கள் மத கட்டிடங்களை கட்டியுள்ளனர். இந்து சமயத்தின் வளர்ச்சிக்காக எழுதி வைக்கப்பட்ட நிலங்கள் மூலமே இந்துக்களை மதமாற்றும் பணி சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் இந்து அமைப்புகள் வலுவடைந்து வரும் சூழ்நிலையில் இந்துக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முன்னேற்றமாக கடந்த 1995 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஸ்தவரான ஊர்வசி செல்வராஜ் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவரது மறைவிற்கு பிறகு அவரது மகனும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான ஊர்வசி அமிர்தராஜ் நிர்வாகம் செய்யும் சென்னை-பெங்களூரு ரோட்டில் உள்ள குயின்ஸ் தீம்ஸ் பார்க் ஆக்கிரமிப்பில் உள்ள நிலமான 21 ஏக்கர் நிலத்தை 4 வாரத்திற்குள் மீட்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பூந்தமல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் வேணுகோபால் சாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் இது

தீவிர கிருஸ்தவரான அமிர்தராஜ் குடும்பத்தினர், ஆந்திராவில் தீவிரமாக செயல்படும் இவாஞ்சிலின் குழுக்களுடன் தொடர்புடையவர்கள். இவர்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமித்து தீம்ஸ்பார்க் கட்டியுள்ளனர். நிலத்தை திரும்ப ஒப்படைப்பதோடு, இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வருவாய்துறைக்கு 10.58 கோடி ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் நரி ஊளையிட்டால் கூட அது குறித்து விவாதம் செய்யும் தமிழக ஊடகங்கள் இது குறித்து வாய் திறக்கவில்லை.
குயின்ஸ்லேண்ட் தீம்ஸ் பார்க் நில மீட்பு தொடர்பான உத்தரவு தொடக்கம் தான். இதுபோல நூற்றுக்கணக்கான பிறமதத்தவர்களும், அரசியல்வாதிகளும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவற்றை மீட்க தொடர்ந்து நீதிமன்றத்தை நாட இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. லயோலா கல்லூரி நிலம், கோவை கருணாநிதி கல்லூரி நிலம் போன்றவிவகாரங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.

கோயில் நிலங்களை தனியார் மட்டுமல்ல, அரசும் ஆக்கிரமித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலங்கள், நீதிமன்ற கட்டிடங்கள் என்று பல அரசு கட்டிடங்கள் கோயில் நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. வருவாய்துறை இழப்பீடு கொடுத்து இந்த நிலங்களை வாங்கியதாக கூறினாலும், இந்து சமய அறநிலைத்துறை என்பது இந்து கோயில்களை நிர்வாகம் செய்யத்தானே தவிர, சொத்துக்களை விற்பதற்கல்ல என்று நீதிமன்றங்கள் அடுத்தடுத்து தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தி வருகிறது. எனவே கோயில் நிலங்களை இனி புதிதாக அரசு பயன்பாட்டிற்கு எடுக்கக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் நமது கோயில் நிலங்களை காப்பதன் மூலம், கோயில்களை நன்கு பராமரிப்பதோடு, நமது கலாச்சாரம், பண்பாட்டை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவும் முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here