பாகிஸ்தானில் கொடூரம்! இலங்கையைச் சேர்ந்தவர் எரித்துக் கொலை!!

இந்தியாவில் சர்வ சுதந்திரத்துடன் வசித்துவரும் பல முற்போக்கு(?) சிந்தனா வாதிகள், பாகிஸ்தானை அவ்வப்போது பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவது வழக்கம்.

அங்கு பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், மதச்சுதந்திரம் என்று எதுவுமே கிடையாது என்றாலும், இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை என்று இந்திய பிரதமரை அவமதித்து பேசுவது, எழுதுவது, கார்டூன் போடுவது, இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் அவதூறுகளை சர்வ சுதந்திரமாக அள்ளிவீசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் போற்றி புகழும் பாகிஸ்தானில்?

பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் நகரில் விளையாட்டு ஆடைகள் தயாரிக்கும் இலங்கை கம்பெனியின் பொதுமேலாளராக இருந்தவர் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமாரா(வயது40).

இவரை அதே நிறுவனத்தில் வேலை செய்யும் பாகிஸ்தானியர்கள் கொடூரமாக அடித்து, ரோட்டில் இழுந்துவந்து போட்டு உயிரோடு துடிக்கதுடிக்க எரித்துக் கொலை செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

பிரியந்த குமாராவிற்கு இப்படி கொடூரமான தண்டனை கொடுப்பதற்கு காரணம், அவர் முஸ்லீம் மத குறியீடு உள்ள ஒரு படத்தை குப்பைத்தொட்டியில் போட்டு அவமானப்படுத்திவிட்டதால் என்றனர் அந்த கொடூரரர்கள்.

ஆனால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் கடுமைக்காட்டியதால் மதத்தை அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக இலங்கை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிருஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினரை மதத்துவஷேம் என்ற காரணத்தைக்கூறி கொடூரமாக கொல்லப்படுவது நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் மவுனம் காக்கின்றன.

இலங்கை இந்தியா என்ற நட்பு நாடை ஓரங்கட்டிவிட்டு சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் நெருக்கம் காட்டியதற்கு தகுந்த தண்டனையை அனுபவித்து வருகிறது.

தான் கொடுத்த கடனுக்கான வட்டியை கேட்டு, இலங்கையின் பல பகுதிகளை தன் வசப்படுத்தி வருகிறது சீனா. பாகிஸ்தானிலோ இலங்கையைச் சேர்ந்தவர்கள் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here