தி.மு.கவினர் இன்று புத்தாண்டு என்கின்றனரே… உண்மையா?

புத்தாண்டு பற்றிய சர்ச்சைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் தை தான் ஆண்டின் முதல் மாதம் என்று கூறுவோரின் வாதங்களையும், அதற்கு சித்திரைதான் ஆண்டின் முதல் மாதம் என்போரின் மறுப்புகளையும் பல கோணங்களில் ஆய்ந்து விளக்கியிருந்தேன்.

1. மறைமலை அடிகளுடன் 500 தமிழ் அறிஞர்கள் அடங்கிய குழு 1921 ஆம் ஆண்டு தை மாதத்தை ஆண்டின் முதல் மாதமாக அறிவித்தார் ?

மறைமலை அடிகளார் 1921 ஆம் ஆண்டு எங்கே இருந்தார் என்பதை அவரது மகன் மறைமலை அடிகளின் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் அதாவது,”அடிகள் 1921 மார்கழித் திங்கள் இறுதியில் யாழ்ப்பாணம் சேர்ந்தனர். யானும் உடன் சென்றேன். அப்போது என் ஆண்டு 14″அங்கே “1921 தைத்திங்கள் முதல்நாள் யாழ்ப்பாணத்தில் அடிகள் ‘தமிழர் நாகரிகம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்”- மறைமலை அடிகளின் சுயசரிதையை எழுதிய மகன்.மறைமலை அடிகள் 1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எப்படி இந்த கூட்டத்தில் பங்குகொண்டிருக்க முடியும்?

1921 ஆம் ஆண்டு இவர்கள் சொல்வதுபோல் தமிழறிஞர்கள் கூடி மறைமலை அடிகள் தலைமையில் ஒரு மாநாடு நடந்தது தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் 1935 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திருவள்ளுவரும் திருக்குறளும் என்ற தலைப்பில் ஒரு மாநாடு நடந்தது தொடர்பாக தரவுகள் கிடைக்கின்றன. இம்மாநாட்டில் மறைமலையடிகள், திரு.வி.க. ,நாவலர் சோமசுந்தர பாரதியார் மற்றும் பல தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் என்பதும் உண்மையே…!

இம்மாநாட்டில் திருக்குறளின் பெருமையை எடுத்துச்சொல்லி திருவள்ளுவர் பிறந்த தினமாக கி.மு 31 ஐ அந்த அறிஞர் குழு அறிவிக்கிறது. அதோடு திருவள்ளுவர் பிறந்த தினமாக அவர் வைகாசி அனுஷம்..என்பதாகவும் அறிவித்தனர். இதே செய்தி 1955 ஆம் ஆண்டில் வெளிவந்த திருவள்ளுவர் திருநாள் மலர் என்னும் நூலில் வெளிவந்தது. இவ்விரண்டிலும் திருவள்ளுவர் பெருமை மற்றும் அவர் பிறந்த தினம் பற்றித்தான் விவாதிக்கப்பட்டது. ஆனால் தமிழ் புத்தாண்டு சித்திரையா?தையா? என்ற விவாதம் நடந்ததாக யாதொரு குறிப்புகளும் இல்லை…!

ஆனால் கருணாநிதி அவர்கள் தையில் புத்தாண்டு கொண்டாடுவது தொடர்பான அரசாணையை கொண்டுவந்தது 1971 தான். ஒருவேளை மறைமலை அடிகள் அடங்கிய அறிஞர்கள் குழு தையில்தான் புத்தாண்டு என்ற முடிவை எடுத்திருந்தால் அவர்களே தையை புத்தாண்டாக அதுவும் 1930 களிலேயே கொண்டாடி இருப்பர். ஆனால் அரசாணையே அக்கூட்டம் நடந்து முடிந்து சுமார் 40 ஆண்டுகள் கழித்து தான் வருகிறது. எனில் மறைமலை அடிகள் அடங்கிய அறிஞர் குழு தையை புத்தாண்டாக அறிவித்தது என்பதை எவ்வாறு ஏற்க முடியும்?

ஒருவேளை இதுபற்றி விவாதித்திருந்தாலும் முடிவுகள் எட்டப்படவில்லை என்பதே நிதர்சனம்…!பொதுவாக எது வருடத்தின் முதல் மாதம் என்பதற்கு பல்வேறுவகைப்பட்ட ஆதாரங்கள் இருந்தாலும் தொல்காப்பியம் குறிப்பிடும் பெரும்பொழுதுகளில் முதன்மையான இளவேனில் காலமானது சித்திரையும், வைகாசியையும் உள்ளடக்கியதே. ஆனால் இந்த குழப்பங்களுக்கெல்லாம் காரணம் 1971 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் கொண்டுவந்த அரசாணைதான். ஒருவேளை இதை திராவிடவாதிகள் முதன்மைப்படுத்தினால் முனைவர் நெடுஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட ஆசீவகமும் ஐயனாரும் என்ற நூலின் மறு வெளியீடானது தற்போதைய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையிலேயே நடந்தது. முக்கியமாக அந்நூலில் சித்திரையே புத்தாண்டு வானியல் ரீதியாக முனைவர் நெடுஞ்செழியன் அவர்கள் நிறுவியிருப்பது கவனிக்கத்தக்கது….!

பல தமிழ் இலக்கியங்களில் சித்திரையே ஆண்டின் முதல் மாதமாக குறிக்கப்பட்டிருந்தாலும் நேரடியாக புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக 1796 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள திருக்கோணேஸ்வரர் கோவிலில் ஏப்ரல் மாதத்தில் (சித்திரை -1) தமிழ் புத்தாண்டு கொண்டாடியது தொடர்பாக போர்ச்சுகீசியர்களின் பயணக்குறிப்புகளில் தகவல்கள் உள்ளது. இதுதான் புத்தாண்டை நேரடியாக கொண்டாடியது தொடர்பாக நமக்கு கிடைக்கும் முதல் சான்று…!

“The British occupation of the maritime province of Ceylon in 1796, had one salutary effect on the inhabitants and this was in respect of the freedom of worship. The Koneswaram temple is well known for its celebrations of the traditional Ther festival, the Navarathri and Sivarathri functions. The Ther festival lasts for twenty two days in April and focuses on preparing the deities and the community for Puththandu (The Tamil New Year)”

இவ்வாறாக தையில் தான் புத்தாண்டு என்று 1971 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்கள் செய்த சூழ்ச்சியை அடுத்த ஆட்சியில் ஜெயலலிதா அம்மையாரே மாற்றி அமைத்திருந்தாலும் திராவிடவாதிகள் அதற்கு கூறும் இந்த தமிழர்கள் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவு என்ற பொய் பிம்பமும் உடைபடுகிறது. அதோடு திராவிட இயக்கவாதிகளே சித்திரையை புத்தாண்டின் முதல்மாதமாக அவர்களை அறியாமலேயே முன்மொழிந்ததையும் மேற்கூறிய தகவல்களையும் அறிந்தோம். ஆனால் பாரதிதாசன் அவர்களின் புத்தாண்டு பற்றிய கவிதை ஒன்று இன்னும் சுற்றித்திரிவதை காணலாம். அதை காணும் அன்பர்கள் கீழ்காணும் மறுப்பை பதிய வேண்டுகிறேன்…!நித்திரையில் இருக்கும் தமிழா!தை அல்ல உனக்கு புத்தாண்டு! கயவர் கூட்டம் காட்டியதே அது!தரணி ஆண்ட தமிழனுக்கு சித்திரை முதல் நாளே புத்தாண்டு! – மறவாதே…!

2. பழங்கால கல்வெட்டு ஒன்று தையை ஆண்டின் முதல் மாதமாக குறிப்பிடுகிறதா???

ஒரு சிலர் பழங்கால கல்வெட்டு என்று ஒன்றைக் காட்டி அதில் தை மாதமே முதல் மாதமாக குறிப்பிட்டிருப்பதாகவும் ஆதலால் பண்டையத் தமிழர் தை மாதத்தையே முதல் மாதமாக கொண்டிருந்தார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த கல்வெட்டுச்செய்தி கூறும் தகவல் என்ன என்பதை விரிவாக காண்போம்…!

முதலில் அந்த கல்வெட்டு எவ்வளவு பழமையானது என்பது பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தோமேயானால் அது 300 ஆண்டுகள் பழமையானது என்ற ஒரு செய்திக் கட்டுரையைத் தவிர வேறு எந்த சான்றும் நமக்கு கிடைக்கவில்லை. மேலும் அந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களும், தற்காலத் தமிழ் எழுத்துக்களும், கிரந்த எழுத்துக்களுமே ஆகும். தமிழி எழுத்துக்களோ, வட்டெழுத்துக்களோ கூட இல்லை. ஆகவே இது முதலில் பழங்கால கல்வெட்டே அல்ல. ஆகவே இந்த கல்வெட்டு அதிகபட்சமாக 300 ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்ற முடிவுக்கு வர முடிகிறது…!சரி, இடைக்காலத்தில் வந்த அந்தக் கல்வெட்டில் தை மாதம் முதல் மாதமாக ஏன் குறிப்பிடப்பட்டுள்ளது?

முதலில் அந்தக் கல்வெட்டில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது பற்றி தெளிவாக விளங்கவில்லை, அதனுடன் வந்த செய்திக் கட்டுரை சொல்வதையே நாம் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அதில் தை மாதம் முதல் மாதமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். ஏனெனில் தைத்திங்கள் முதல் நாள் என்பது அறுவடைத்திருநாள் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே…! ஒருவேளை அன்றிலிருந்து வியாபாரத்தை தொடங்குவதால் தை முதல் நாளை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக தமிழக விவசாயிகளும் வியாபாரிகளும் கொண்டிருக்கலாம். இந்நிகழ்வு தற்போதும் கூட ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் புத்தாண்டாகக் கொண்டாடிலும், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியை வர்த்தக வருடத்தின் தொடக்கமாக கருதுகிறோம், அது போல் இதுவும் இருக்கலாம்….!ஒருவேளை இந்த விளக்கங்களை ஏற்காமல் “தை ஒன்றே வருடப்பிறப்பு” என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது 12 மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் எப்போது வரும் என்று எப்படி கணிப்பீர்கள்? அதாவது சூரியனின் சுழற்சியை வைத்துத்தானே? அன்றி இதற்கு வேறு வழி இல்லை.

அதுவும் சூரியன் மகர ராசியில் நுழையும் நாளை வைத்துத் தானே அந்நாளை கணக்கிட இயலும்? ஆகவே பஞ்சாங்கத்தை, நம் பழங்கால வானிலை முறையை வைத்துத் தானே தை முதல் நாளையும் கணிப்பீர்கள்? பழங்கால வானிலை முறையில் மகர ராசி முதல் ராசியா? அது பத்தாம் ராசி அல்லவா? ஆகவே தை மாதம் வருடத்தின் பத்தாம் மாதமாகத் தானே இருக்க முடியும்….? எனில் பத்தாவது ராசியுடன் தையை எப்படி தொடர்பு படுத்தி முதல் மாதமாக கருத இயலும்?

திராவிடன் : தை தானேடா தமிழ் புத்தாண்டு? நீ ஏன் சித்திரை புத்தாண்டுனு சொல்ற?? புத்தி கெட்டுபோச்சா?

தமிழன் : தை புத்தாண்டா?? உனக்கு அப்படி யாரு சொன்னது?? 1972 ல கருணாநிதி அரசாணை வெளியிடுறதுக்கு முன்னாடி தையை புத்தாண்டாக கொண்டாடினார்கள் என்பதற்கு எதாவது ஒரு சான்று கொடுடா பார்க்கலாம்.

திராவிடன் : சித்திரை ஆரிய புத்தாண்டுடா. தமிழர்களுக்கு தைதான் புத்தாண்டு.

தமிழன் : உனக்கு அப்படி யாரு சொன்னது? இதை எங்கே படித்தாய்? எதாவது ஆதாரம் குடு.

திராவிடன் : பாரதிதாசன் கவிதை படிச்சிருக்கியா இல்லியா?

தமிழன் : ஓ…! கவிதையா? நீ கூறும் நித்திரையில் இருக்கும் தமிழா என்ற கவிதையை எழுதிய பாரதிதாசனின் திங்கள் பன்னிரண்டு என்கிற கவிதையை படிச்சிருக்கியா???” சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம் – இவை ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் ” இந்த கவிதையையும் பாரதிதாசன் தை என்று ஆரம்பித்திருக்க வேண்டியது தானே ? ஏன் சித்திரையிலிருந்து ஆரம்பிக்கிறார் ? அப்பொழுது நித்திரையில் இருந்தது யார் ? அதோடு பாரதிதாசன் வாழ்ந்த அதே காலத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் “சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்” என்று ஏன் பாடினார்?

திராவிடன் : என்கிட்டயாவது பாரதிதாசனின் கவிதை இருக்கு. உன்கிட்ட என்ன இருக்கு ஆதாரத்துக்கு???

தமிழன் : அதுதான் இராமலிங்கம் பிள்ளை பாடிய வாழ்த்துப்பாடலில் சித்திரையை புத்தாண்டாக பாடியுள்ளாரே?

திராவிடன் : இதுக்கும் அதுக்கும் சரியா போச்சு. 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னாடி எதாச்சும் ஆதாரம் இருக்கா?

தமிழன் : இருந்தா மட்டும் ஏத்துக்கிடுவியா என்ன???

திராவிடன் : இருந்தா காட்டு. ஏத்துக்கிறேனா இல்லையானு அப்புறம் பாத்துக்கலாம்.

தமிழன் : (அகத்தியர் பன்னீராயிரம்)”மேடமென்னும் ராசியாம் மதனிற்கேளுமேலானா யசுவினி முதலாம்பாதம்குலவியே கதிரவந்தான் வந்துதிக்கவருச புருசன் அவதரிப்பானென்றேபரிவுடன் உலகிற்கு நீசாற்றே”விளக்கம் : மேட ராசியில் அசுவினி முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் வருசபுருஷன் அவதரிப்பான். அதாவது மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தின் முதலாம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் நாளே சித்திரை 1. இதையே அகத்தியர் வருஷ புருசன் என்கிறார். உனக்கு புரியுறமாதிரி சொல்லணும்னா சித்திரையில் புத்தாண்டு பிறக்கும்.இந்நூலின் காலம் : 12 ஆம் நூற்றாண்டு.உன்கிட்ட 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு தையை புத்தாண்டாகவோ வருடத்தின் முதல் மாதமாகவோ கொண்டாடியதற்கு சான்றுகள் உண்டா???

திராவிடன் : 12 ஆம் நூற்றாண்டா?

தமிழன் : ஆம் இன்றிலிருந்து சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர். உன்னிடம் எதாவது இருக்கா?

திராவிடன் : !!!!!!!!!!!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here