விளையாட்டல்ல பொம்மை தொழில் பிரதமர் சொன்ன ரகசியம் தெரியுமா?

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொன்றும், ஏதாவது ஒரு செய்தியை, இந்த சமூகத்துக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறது என்பது உண்மை. மேலோட்டமாக பார்த்தால், கொஞ்சம், புரிந்தும் புரியாமலும் இருக்கும். ஆனால், அவர் சொன்ன விஷயத்தை கொஞ்சம் கையில் எடுத்துக் கொண்டு, ஆய்வு செய்யத் தொடங்கினால், மிகமிக பிரமாண்டமான, பிரம்மிக்கத் தக்க விஷயங்களை, போகிற போக்கில் அசால்டாக சொல்லிவிட்டு சென்றிருப்பார்.
இந்த வகையில், கடந்த மாத இறுதியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்தியாவின் பொம்மை சந்தையில், உள்நாட்டு தயாரிப்புகளுக்கு பெரும் அளவில் ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்றார்.

பொம்மை சந்தையை தொட்டது ஏன்?

வழக்கமாக பிரதமர் மோடி தன் மனதின் குரல் பேச்சின்போது, தேச வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தி, ஆத்ம நிர்பர் என்று பல விஷயங்களைக் குறிப்பிடுவார். அப்படிப்பட்டவர், திடீரென பொம்மை சந்தையைப் பற்றி பேசியது பலரின் புருவத்தையும் உயர்த்தியது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதப்பிலான பொம்மைகள் சந்தை விற்பனைக்கு வருகின்றன. ஆனால், உள்நாட்டு தயாரிப்பாக வருபவை எல்லாம் மிகமிக சொற்பம் மட்டுமே
அதாவது, ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் மட்டுமே, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பொம்மைகளும் கூட, நாடு முழுவதும் உள்ள 3 ஆயிரத்து 500 பெரிய, சிறிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுத்தப்படுகிறது. இந்த பொம்மை நிறுவனங்களை நம்பி சில லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

அப்படியானால் நமது பணம் எங்கே போகிறது?

வேறெங்கே போகும், எல்லாம் நம் தொழில் எதிர சீனாவிடம்தான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 4 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டால், இவற்றில் 85 முதல் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பொம்மைகள்தான். குறிப்பாக சீனாவில் இருந்து மலிவு விலையில், இந்திய சந்தைக்குள் வரும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகள்தான்.
சீனாவின் நவீனத்துவ பொம்மை சந்தையை முறியடித்து, இந்தியாவின் பொம்மை சந்தை வளர்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது என்பதே உண்மை. காரணம், சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பொம்மை தயாரிப்பு சந்தை ஒப்பீடு செய்ய முடியாத அளவு மிகமிகச் சிறியது. ஆனால், சந்தையோ உலக அளவில் மிகப் பெரியது.

* சந்தை மீட்பும், அன்னிய செலாவணியும்

சீனாவில்வில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கரை லட்சம் கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொம்மைகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும், சூப்பர் மார்கெட் தொடங்கி, சாதாரண ஷாப்பிங் கடைகள் வரை சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த பொம்மை இறக்குமதிக்காக இந்திய வணிகர்கள் பெரும் அளவிலான தொகையை, சீனாவுக்கு செலுத்துகின்றனர். நான்கரை லட்சம் ரூபாய் அன்னிய செலாவணி என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அதாவது, கச்சா எண்ணை இறக்குமதிக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய இறக்குமதி பொம்மை இறக்குமதிதான். இதனால், நாட்டின் அன்னியசெலாவணி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால், இறக்குமதியை தவிர்த்து, உள்நாட்டில் பொம்மை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார்.


உலகச் சந்தையை எட்டுவது சாத்தியமா?

இந்தியாவின் பொம்மை சந்தை நுகர்வு அதிகம் என்பது எந்தளவுக்கு உண்மை, அதேபோல், பங்களிப்பு சந்தை மிகமிகச் சிறியது என்பது கசப்பான உண்மை. உலகச் சந்தையில் 0.5 சதவீதம் அளவுக்கு பங்களிப்பு கொடுக்கிறது என்பது உண்மை. இவ்வளவுக்கும் பொம்மை தயாரிப்புத்துறை எம்எஸ்எம்இ துறைக்குள் வந்துவிட்டது. உலகச் பொம்மை சந்தையின் மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், இதில் ஒரு சதவீதத்துக்கும் பங்களிப்பு கொடுக்கிறது. அதாவது, 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் குறைவான தொகைதான்.
ஆனால், நுகர்வு? நான்கரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சீனாவின் இறக்குமதிக்கு முடிவு கட்ட வேண்டும், அந்த நாட்டுக்கு, கொடுக்கும் இந்தியாவின் பணத்தை நிறுத்த வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் கனவாகும்.

என்ன சிக்கல் உள்ளது?

உலக அளவில் ஒப்பீடு செய்யும்போது, இந்தியாவின் பொம்மை உற்பத்தி மிகவும் பின்தங்கிய தொழில்நுட்பத்தைக் கொண்டது. சீனாவின் தொழில்நுட்பத்தில் நுாற்றில் ஒரு சதவீதம் கூட நம்மிடம் இல்லை. அதேநேரத்தில் எலக்ட்ரானிக்ஸ், பிளாஸ்டிக் பொம்மைகள் தயாரிப்பு பிரமாண்ட இயந்திரங்களால் உருவானது. சீனாவுடன் போட்டியிட வேண்டும் என்றால், நமது துறை மிகப் பெரிய சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
ஏஐ (ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் செயற்கை நுண்ணறிவு, நவீனத்துவத்துவத்தின் மேம்பாடு, சர்வதேச சந்தைக்கு ஏற்றார்போன் தரம் மற்றும் உருவாக்கம், கல்வி மேம்பாடு அடிப்படையிலான அறிவியல், தொழில்நுட்பத்தின் வழிவந்த பொம்மைகள் என்று மிகவும் ரிஸ்க் எடுக்க வேண்டிய துறைகள் அதிகம் உள்ளன. இவற்றை சரிகட்டி, இன்று முதல் உழைக்கத் தொடங்கினால், இன்னும் 5 ஆண்டுகளில், இந்தியாவின் பொம்மை சந்தை, உலகச் சந்தையை ஒரு கலக்கு கலக்குமு் என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here