2019ம் ஆண்டு மோடிதன் முதல் ஐந்தாண்டுகளை பிரதமராக முடிவு செய்திருந்தார், காஷ்மீரில் நிலமை மிகவும் கட்டுபாட்டுக்குள் வந்திருந்தது
மோடி பதவியேற்றபின் பாகிஸ்தான் தரப்பின் முயற்சிகள் எதுவும் வெற்றியளிக்கவில்லை இந்தியாவின் எப்பகுதியிலும் அவர்களால் குண்டுவெடிப்பினை செய்யமுடியவில்லை, ஐஸ் இயக்கம் முதல் பல இயக்கங்கள் தங்கள் கைகூலி மூலம் இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றாலும் முடியவில்லை
இந்நிலையில்தான் இந்திய ராணுவத்தாரை குறிவைத்தார்கள் தீவிரவாதிகள் காஷ்மீரின் புல்வாமா எனும் இடத்தில் இந்த சதி அரங்கேறிற்று
மிகபெரிய அந்த எதிர்பாரா தாக்குதலில் 40 ராணுவத்தார் கொல்லபட்டனர், மோடியினை அவமானத்தோடு தோற்கடிக்க செய்யபட்ட சதி அது
அதாவது மோடி அரசின் நற்பெயர் கலையும் போர் சூழல் எழும், அந்த குழப்பத்தில் தேர்தல் குழம்பும் அத்தோடு இந்தியாவின் அமைதியும் குலையும் என கணக்கிட்டு செய்யபட்ட ஏற்பாடு
ஆனால் தேசம் கொஞ்சமும் கலங்கவில்லை, மோடி அரசு இந்திய வரலாற்றில் முதன் முறையாக எல்லை தாண்டி பால்கோட்டில் அடித்தது, அந்த அதிரடியில் பாகிஸ்தான் கலங்கிற்று
பாகிஸ்தானின் விமானங்கள் இந்தியாவுக்குள் வந்தபொழுது சக்திவாய்ந்த எப் 16 ரக விமானத்தை இந்திய வீரர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தி கைதியாக பிடிபட்டார், எனினும் இந்திய அரசு அவரை விடுதலை செய்ய வைத்தது
தேசம் மிகபெரிய பதிலடியினை கொடுத்து பாகிஸ்தானை எச்சரித்தபின் சத்தமே இல்லை
அடுத்த அதிரடியாக அவ்வருடமே ஆகஸ்ட் 2019ல் காஷ்மீர் இந்தியாவோடு முழுமையாக சேர்க்கபட்டது அதன் பின் தீவிரவாத இயக்கமெல்லாம் வேலையற்று கலைந்தன
ஒருவகையில் புல்வாமா தாக்குதலே அவசரமாக காஷ்மீர் இந்தியாவோடு இணைய வழி செய்தது, அதை தொடர்ந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் நாடிபிடித்து பார்த்த இந்தியா அத்தேசம் வெறும் ஜடமாகிவிட்டது என்பதை அறிந்து காஷ்மீரை முழுக்க இணைத்துகொண்டது
எதிர்பார்த்தபடி அங்கு ஒரு எதிர்ப்புமில்லை
இந்திய ராணுவம் எவ்வளவோ வீரர்களை யுத்தத்தில் இழந்த தேசம் தான், அவ்வகையில் காஷ்மீர் இணைப்புக்கு 40 வீரர்களை இணைந்த உன்னத தினமாக இத்தினம் கொண்டாடபடுகின்றது
பாகிஸ்தான் இந்திய எதிர்ப்பில் பிரிந்த தேசம், அது பிரியும் பொழுது அங்கே வெள்ளையர்தான் ராணுவ ஆலோசகர்களாக இருந்தார்கள்
அவர்கள்தான் ஆப்கன் பழங்குடியினரை தீவிரவாதிகளாக மாற்றி இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் தந்திரத்தை செய்ய சொன்னார்கள், ஆப்கன் அப்படி குழப்பமாக இருந்தால்தான் பாகிஸ்தானும் அடங்கும் சோவியத்துக்கும் சிக்கல் இந்தியாவுக்கும் குழப்பம் என நுணுக்கமாக திட்டமிட்டார்கள்
இந்த சதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் வசமாக சிக்கி கொண்டன
பாகிஸ்தான் அந்த தீவிரவாத பூதத்தை தொட்டு வசமாக சிக்கித்தான் கொண்டது, ஒரு உன்னத இஸ்லாமிய நாடாக வளர்ந்திருக்க வேண்டிய தேசம் ஆப்கன் தொடர்பால் போதை மருந்து தீவிரவாதம் என சிக்கி லியாகத் அலிகான், பூட்டோ, பேனசிர் என எத்தனையோ பேரை பலிகொடுத்து நாசமாயிற்று
இந்தியாவின் எல்லையில் இருக்கும் அந்தநாட்டின் அரசாலும் கட்டுபடுத்தமுடியா விபரீத கும்பல்களின் கைவரிசை பஞ்சாபிலும் உண்டு, இந்திரா அதில்தான் பலியானார்
மோடி சாதுர்யமாக தப்பி மிக லாவகமாக அந்த கும்பலை கையாள்கின்றார்
இந்தியாவுக்கு எதிராக தொடகூடாத விவகாரங்களை தொட்ட பாகிஸ்தான் இப்பொழுது பெரும் சிக்கலில் கிடக்கின்றது, இந்தியாவின் ராணுவம் 40 வீரர்களை புல்மாவாவில் இழந்ததற்கு அஞ்சலி செலுத்தும் நேரம் பாகிஸ்தான் ராணுவமும் அவர்கள் வளர்த்த தீவிரவாதிகளால் அனுதினமும் கொல்லபடும் செய்திகளும் வருகின்றன
1900களிலே வெள்ளையன் ஆப்கன் போரில் ஆப்கானிய பகுதிகள் பலவற்றை சரியாக கணித்திருந்தான் அதை இந்தியாவுக்கு எதிராக திசைதிருப்பும் வழியினை சொல்லிவிட்டு சென்றுவிட்டான்
அதை பின்னாளில் சோவியத்துக்கு எதிராக பயன்படுத்தி மறுபடியும் அந்த பிரதேசத்தை எரிய செய்தது அமெரிக்கா
அதில் பற்றி எரிந்ததுதான் இந்த இழப்புக்கள்
இப்பொழுது எல்லாம் சரியாகிவருகின்றது, காலம் எல்லாவற்றையும் மாற்றி வருகின்றது, பாகிஸ்தானும் உண்மையினை உணர்ந்து வெள்ளையன் சொல்லிகொடுத்த முரட்டு கொள்கைகளை கைவிடும் நாளில் முழு அமைதி மறுபடி அங்கு திரும்பும்
இந்தியாவில் காஷ்மீர் முழுமையாக இணைய தங்களையே பலிகொடுத்த பாரதமாதாவின் உன்னத புதல்வர்களுக்கு தேசம் தலைவணங்கி அஞ்சலி செலுத்துகின்றது
“மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே”
எனும் பாரதியின் வரிகளோடு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றது தேசம்