ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியாவின் நிலைப்பாடு சரியா?

ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்தது.

இந்த வாக்கெடுப்பில் இந்தியா சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலந்துக் கொள்ளாமல் புறக்கணித்தனர்.

ஆதரவாக 11 வாக்குகள் விழ… இதனை ரஷ்யா மாத்திரமே எதிர்த்து வாக்களித்தது. அதாவது ஒரேயொரு வாக்கு மட்டுமே செலுத்தப்பட்டது.

இவை வெறும் விஷயங்களாக பொதுவெளியில் தெரிந்தாலும். ஐநாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் தோல்வியை தழுவும் என அப்பட்டமாக முன்கூட்டியே தெரிந்தாலும். இதனை ஐநாவில் கொண்டுவந்து வாக்கெடுப்பில் விட்டு பதம் பார்த்து இருக்கிறார்கள்.

ஏன்?

அதில் தான் சமாச்சாரம் இருக்கிறது.

ரஷ்யா உக்ரைன் பிரச்சினையில் சீனா ரஷ்யா பக்கம் நிற்கும் என்றே மதிப்பிட்டிருந்தது. அதற்கு தோதாக ரஷ்யா பல வேலைகளை சீனாவிற்கு சாதகமாக செய்தது.

ஆனால் உக்ரைன் மீது போர் பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில் சீனா, ரஷ்ய முடிவு தவறு என்பது போல கருத்து சொல்லி அதிரடித்தது. இதற்கு சமயம் பார்த்து ரஷ்யாவை சீனாவின் வழிக்கு கொண்டு வரும் சீன ராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டது அப்பட்டமாக பொது வெளியில் தெரிந்தது.

இந்தியா தனித்தன்மையுடன் இது அந்த இரு நாடுகளும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய சமாச்சாரம் என்றதோடு நிறுத்தக் கொண்டது.

அடுத்ததாக…….

உக்ரைன் விஷயத்தில் உக்ரைனுக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்க தலைமையிலான மேற்கு உலக நாடுகளுக்கு ஆதரவாகவோ கருத்து எதனையும் தெரிவிக்காமல் மௌனமாக நின்றது.
இதனை அமெரிக்கா ரசிக்க வில்லை.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியாவை அது இடித்துரைக்க தயங்கவும் இல்லை. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஆன்டனி பிளிங்கன் பலமுறை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களை தொடர்பு கொண்டு உக்ரைன் ரஷ்ய பிரச்சினையில்… அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டை பொது வெளியில் அறிவிக்க அழுத்தம் கொடுத்து கொண்டே இருந்தார்.

போதாக்குறைக்கு உக்ரைனை விட்டு இந்தியா ஒன்று தான் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட நாடு என்று அறிக்கை வாசித்து ஆதரவு கேட்டார். இதுவே பல அமெரிக்கர்களுக்கு ஆகவில்லை.

உக்ரைனை பொறுத்தவரை அமெரிக்கா அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்று நம்பினார்கள்…… அந்த நம்பிக்கை எந்த அளவுக்கு இருந்தது என்றால்…… ரஷ்யா போர் பிரகடனம் செய்த அந்த அதிகாலை நேரத்திற்கு பிறகும் பல உக்ரைனிய மக்கள் எப்பொழுதும் போல அலுவலகங்களுக்கு பணிக்கு கிளம்பி சென்று இருக்கிறார்கள் என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

ஆனால் நடந்ததோ வேறு……

இது அவர்களின் மண்டைக்கு உறைக்கவே முற்பகல் வேளையில் அல்லல்லோல்பட்டு திரும்ப எத்தனிக்கும் சமயத்தில் பல ஆர்டிலரி ஷெல் தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அலண்டு போனார்கள் கடந்த வியாழக்கிழமை மாலை வேளையில்.

இது ஒரு புறம் இருக்க உக்ரைன் இந்த போரை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. நேட்டோ படைகளோ உக்ரைனுக்குள்ளாக இறங்க முடியாத சட்ட சிக்கலை தவித்தது. நேட்டோ அங்கத்துவ நாடுகளில் ஒன்றான போலாந்துக்கு ரஷ்ய படைகள் நகர்த்தி வாருங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னதை கேட்டு அநேகமாக தலை சுற்றி இருக்கும் உக்ரைனிய அரசுக்கு.

ஏனெனில் கிட்டத்தட்ட இது ரஷ்ய படைகளை முற்று முழுதாக தனது நாட்டின் ஊடாக கடக்க செய்து போலாந்து எல்லைக்கு கொண்டு வரும் சமயத்தில் உக்ரைன் எனும் தேசமே இருக்கப் போவதில்லை…… பிறகு நேட்டோ வந்தால் என்ன…… வராவிட்டால் என்ன என்கிற நிலை தான் அவர்களை கதி கலங்க செய்து இருக்கிறது.

இந்த இடத்தில் ரஷ்யாவிற்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குமா என்பதே சந்தேகம் தான்.
உக்ரைனை பொருத்தவரை….. கடந்த காலத்தில் அதாவது 2014 ஆம் ஆண்டு வாக்கில் ரஷ்யா ஆதரவு அரசை கலைத்து மேற்கு உலக நாடுகளின் ஆதரவு பெற்ற ஒருவரை ஆட்சி பொறுப்பில் கொண்டு வந்து இருக்கிறோம்.

தற்போது மீண்டும் ரஷ்ய ஆதரவு பெற்றவரை ஆட்சி பொறுப்பில் அமர்த்த ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று நினைத்து கொண்டு அசட்டையாக இருந்து வந்திருக்கிறார்கள். இது ஜோபைடன் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நடைபெற்ற சமாச்சாரம்.
அதற்கு பிறகு வந்த காலத்தில் உக்ரைனின் கட்டுப்பாட்டில் டொன்பாஸ் பிராந்தியம் எப்போதும் இருந்ததே இல்லை. அவர்கள் என்றோ தங்களை தாங்களே சுதந்திர குடியரசு நாடுகளாக அறிவித்து கொண்டனர்.

அப்படி இருக்க…. தற்போதைய ரஷ்ய நாடாளுமன்றம் டூமா வில் வைத்து அங்கீகரித்த டொனட்ஸ் மற்றும் லுஹான்ஸ் ஆகிய தனி நாடுகள் இந்த டொன்பாஸ் பகுதியில் வரும் சின்னஞ் சிறிய நாடுகள் தான். இஃது உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவின் மேற்கு எல்லை ஆரம்பமாகிறது.

ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் ரஷ்யாவின் கை ஓங்கி……. டொன்பாஸ் பகுதியை தாண்டி உக்ரைனின் நடு மத்தியில் ஓடும் டைனப்பர் ஆறு வரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர காய்களை வேக வேகமாக நகர்த்தி வருகின்றனர். இந்த ஆற்றின் மேற்குக் கரையில் இருப்பது தான் உக்ரைனின் தற்போதைய தலைநகர் கிவ் கிட்டத்தட்ட ரஷ்ய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் நேற்று இரவே கொண்டு வந்து இருக்கிறார்கள் என்கிறார்கள் ஒரு சாரார்…….

இல்லை இல்லை இன்னமும் இந்த நகரம் ரஷ்ய ராணுவத்தின் கைகளுக்கு போகவில்லை என்கிறார்கள் வேறு சிலர்.

இதனிடையே உக்ரைன் தலைநகரை கிவ்விலிருந்து லிவ் வுக்கு மாற்றம் செய்து இருக்கிறார்கள் உக்ரைனின் தற்போதைய ஆட்சியாளர்கள். இது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு மிக அருகில்….. அதாவது சில பல கிலோமீட்டர் தொலைவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எல்லைகருகில் வந்துவிடும் அளவிற்கு….. கூப்பிடும் தூரத்தில் இருக்கின்றது இந்த நகரம்.

தற்போதைய நிலையில்தான் ரஷ்ய நகர்வுகளுக்கு அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது.
ரஷ்யா தனது மேற்கு எல்லையை டொன்பாஸ் பகுதியை தாண்டி முன்பே பார்த்தது போல் டைனப்பர் ஆறுவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தேசித்து இருக்கிறது. இதற்கு அடுத்ததாக வரும் சின்னஞ் சிறிய நகரத்தை அதாவது மிச்சம் மீதி இருக்கும் உக்ரைனில் ஒரு அரசை ஏற்படுத்தி அதில் தனது ஆதரவாளர் ஒருவரை அமர்த்தி ஆட்சி செய்யவும்….. ரஷ்யாவின் பொருளாதார மண்டலமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது.

சரியாக சொன்னால் ரஷ்யா…. ரஷ்யாவின் மேற்கு எல்லை டைனப்பர் ஆற்றின் கிழக்கு கரை வரை விரிவுப் படுத்தி…. அதற்கு அடுத்து ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து போலந்து… மால்டோவா… ருமேனியா வரையில் உள்ள தற்போதைய உக்ரைன் பிராந்தியத்தியத்தை ரஷ்யாவின் சிறப்பு பொருளாதார மண்டலமாக…. Buffer zone பப்பர் ஜோனாக… தனது பாதுகாப்பு பிராந்தியமாக வைத்திருக்க போகிறது.

இது……
ரஷ்யாவின் ஆகச் சிறந்த ராஜாங்க ராணுவ திட்டமிடலாக…. விளாடிமிர் புடினின் ஏகபோக ஆட்சியை மக்கள் வரவேற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு, மேற்கு உலக நாடுகளின் இத்தனை நாள் திட்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாக மாறி தற்போது பல் இளித்துக்கொண்டு நிற்கிறது.

சரியாக சொன்னால் ரஷ்யாவே நினைத்திருந்தால் கூட இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் தந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு மிக பிரமாதமாக அமைந்துவிட்டது இந்த நிகழ்வு.

திட்டங்கள் தான் இப்படி மண்ணை கவ்வி விட்டது என்றால் அமெரிக்க அதிபர் மாளிகையின் ராஜாங்க நகர்வு மற்றும் அங்கு இருந்து வெளியாகும் பேட்டிகளில் இந்திய நகர்வுகளை இடித்துரைக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

உதாரணமாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் (இந்த பதவி நம் இந்தியாவில் வெளியுறவுத் துறை அமைச்சர்) ஆன்டனி பிளிங்கன் நம் இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கரை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வரும் நாட்களுக்கு பிறகு ஜோபைடனின் கடைசி பேட்டி ஒன்றில் தனது வெளியுறவு கொள்கையுடன் ஒத்து போகாத ஆசிய நாடு என்ற குறிப்பிட்டு…அது கறைகள்…… அதாவது அழுக்கு என்கிற ரீதியில் சொல்லி இருக்கிறார்கள்.
பலரும் இதனை இந்தியாவை குறிக்கும் சொல் என்று சொல்லி இருக்கிறார்கள்……
வெகு சிலரோ இது சீனா வை குறித்தான விமர்சனம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

முதலில் ரஷ்யாவை எதிர்ப்பது போல் பேசிவிட்டு பிறகு முற்றிலும் ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக சொல்கிறார்கள். இதற்கு காரணம் சோவியத் யூனியனாக இருந்த காலத்திற்கு பிறகு ரஷ்யாவாக சிதறுண்ட சமயம் உக்ரைனிய மக்களை….. ரஷ்ய தொழில்நுட்ப பண்புகளை ….. முற்று முழுதாக சுரண்டியது சீனா தான்.

அப்படி இருக்க இன்று ரஷ்யா பக்கம் நிற்கிறது என்கிற கோவம் அந்த வாதத்தில் இருக்கிறது.

இது அத்தனைக்கும் நடுவில் ரஷ்யா, சீனாவின் பகல் வேஷத்தை புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக கருதுகிறது…….. அதே சமயம் எந்த ஒரு இடத்திலும் தன்னை எதிர்க்காத…. விட்டுக் கொடுக்காத தேசமாக இந்தியாவை அது அவதானிக்கிறது.

இந்த இடத்தில் இந்திய நிலைபாடு மற்றும் அதன் ஆளுமையை, ஐக்கிய அரபு எமிரேட்ஸை தன் பக்கத்தில் சேர்த்து நடுநிலை வகிக்க செய்து தன் பலத்தை அது நிரூபித்து இருக்கிறது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள்.

ஏனெனில் இது நடந்த காலக்கட்டத்தில் தான் இம்ரான் கான் ரஷ்யா சென்று விளாடிமிர் புடினை சந்தித்து விட்டு நாடு திரும்பி இருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

உலகின் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில்…… இந்திய நிலைபாடு மற்றும் அதன் ஆளுமையை சிறப்பாய் பறைசாற்றி இருக்கிறார்கள் நம்மவர்கள். சாதாரணமாகவே சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய் நகர்த்தும் நம்மவர்களின் சாதுர்யம்……. உலக அளவில் பல உலக நாடுகளில் போற்றப்பட்டாலும் நம் தமிழகத்தில் சதுரங்க ஆட்டம் வெற்று அரசியல் லாபத்திற்காவோ…… அல்லது வேறு ஏதோ ஒரு காரணங்களுக்காகவோ இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

உலக அளவில்
நம்மவர்கள் கோலோச்சும்…..

உலக அரசியல் சதுரங்கத்தில் நாம் தான் இன்றளவும் ராஜாவாக இருக்கிறோம் என்பதை நாமே புரிந்து கொள்ளாமல் ….. கொண்டாடாமல் ….. கோமாளிதனங்களுக்கு பின் சென்று விடும் அவலநிலை மாறிட வேண்டும். பிறகுதான் நம் தேசத்தின் மாண்பு மற்றும் அதன் மதிப்பு….. இன்று அதற்கு இருக்கும் செல்வாக்கு…… இப்படி நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

குறிப்பு: பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிர் நிலையிலேயே உக்ரைன் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here