ரஷ்யா-உக்ரைன் போர்… தள்ளாடும் அமெரிக்கா

எழுதிக் கொடுத்ததை தாண்டி எதையும் படித்து விடாதீர்கள்….
கதறும் உயர் அதிகாரிகள்.

சட்டென்று இந்த வாசகத்தை படிக்க இது ஏதோ நம் ஊர் விவகாரம் போல் தெரிந்தாலும்… நிஜத்தில் இது பென்டகனில் தான் இப்படி அலறிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஆழமான பாதிப்புகளை ஜோபைடன் அங்கு போகிற போக்கில் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். அது அமெரிக்கர்களை மட்டும் பாதிக்காமல் சர்வதேச அளவில் தற்போது அதன் நேச நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறது.

உதாரணமாக இவர் உக்ரைனுக்காக போராட கிளம்பி இருப்பது போன்ற பாவனையை உண்டாக்கி அதில் நேட்டோ அங்கத்துவ நாடுகளை உள்ளே இழுத்து விட ஆயத்தமாக…. சுதாகரித்துக்கொண்ட அவர்கள் முழு எதிர்ப்பு காட்டாமல்…. மேலுக்கு இவருக்காக பூச்சாண்டி காட்ட ஆரம்பிக்க தற்போது நேட்டோவை கலைத்து விடலாம் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு மனிதர்.

போன இடத்தில் எல்லாம் ரஷ்ய அதிபரை போர் குற்றவாளி…. வாழ தகுதி இல்லாத நபர் என்றெல்லாம் அடித்து விட தற்போது இது விவகாரம் ஆகி விட்டது. கடவுளால் தண்டிக்க வேண்டிய குற்றவாளி என சொல்ல வந்து மாற்றி சொல்லி விட்டார் என ஆரம்பத்தில் அவரது அதிகாரிகள் சப்பை கட்டு கட்ட…. இவரோ விடாமல் ரஷ்ய அதிபரை அந்த பதவியிலிருந்து நீக்குவதே தனது லட்சியம் என கூடுதலாக உளறிக்கொட்ட……. விழித்துக் கொண்டது உலகம்.

உக்ரைனுக்கு உதவ … என்று சொன்னது எல்லாம் பொய்யா…. கோபால் என்கிற ரீதியில் உலகம் கேள்வியை கிளம்ப….. வொலோடிமர் ஜெலன்ஸ்கியோ, அப்ப சிஐஏ அறிக்கை எல்லாம் ஏமாற்று வேலையா என வாய்விட்டே புலம்ப ஆரம்பித்து விட்டார் என்கிறார்கள். வரவிருக்கும் நாட்களில் உக்ரைன் மண்ணில் இருந்து ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை கொண்டோ…. அல்லது வேறொரு நாட்டின் ஏவுகணை தாக்குதல் நடந்தாலோ அதற்கு தாங்கள் பொறுப்பு அல்ல…. என அறிவிப்பு வெளியிடும் அளவிற்கு நிலைமை கை மீறி சென்று கொண்டுள்ளது என்கிறார்கள்.

ஏனெனில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல் முறையாக ரஷ்ய எல்லைக்குள்ளாக வரும் எல்லையோர நகரம் ஒன்றில் இரவு நேர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு உத்தரவு கொடுத்தது உக்ரைன் ராணுவம் அல்ல என்கின்றனர்.

அப்படி என்றால் தாக்குதல் நடத்தியது யார் என்று கேள்விக்கு பதில் சொல்வார் யாரும் இல்லை. இதனிடையே அந்நகர காவல்துறை அதிகாரி ஒருவர் இரவு நேர தாக்குதல் நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்ய ராணுவம் தாக்குதல் பாணியை கைவிட்டு விட்டு தற்காப்பு பாணியில் இயங்கும் என அறிவித்த 18 மணி நேரத்தில் இது நடந்திருக்கிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று எடுத்துக் காட்டி இருக்கிறார்கள் பலரும்.

அப்படி என்றால்……

இந்த போர் எதற்காக ?

யாருக்காக ?

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டதும் முதலில் ஒரு காரியத்தை செய்தார். தான் தென் சீனக் கடலில் இருந்தும், மத்திய கிழக்கு ஆசியாவில் இருந்தும் தனது அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றுக் கொண்டு இவர்களை கொண்டு ரஷ்யாவை முழு மூச்சாக எதிர்க்க போவதாக அறிவித்தார்.

அதாவது பிரச்சினை இல்லாத இடத்தில் இவராகவே பிரச்சினைகளை ஏற்படுத்தி அதன் ஊடாக தனது சகாக்களான எண்ணெய் வர்த்தக மற்றும் ஆயுத வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட உத்தேசித்து காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார் என்கிறார்கள் தற்போது. நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அதனை ஊர்ஜிதம் செய்யும் வண்ணமாகவே நடந்து வருகிறது.
அவரும் அவரது கட்சி சார்ந்த சமாச்சாரங்கள் எல்லாம் இவ்விதமாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது என்பதை தரவுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும் என்று பலரும் எடுத்து சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

சவுதி அரேபியாவில் தொடங்கி சதாம் உசேன் காலத்திற்கு வரையிலும், ஒஸாமா பின் லேடனை வேட்டையாட என்று சொல்லி ஒபாமா காலத்திலும் சரி தற்போது பதவிக்கு வந்த ஜோபைடன் நிர்வாகமும் சரி இதனையே காலங்காலமாக சொல்லி இதே பாணியை பின்பற்றி உலக மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

அதில் உண்மை தன்மை இல்லாமல் இல்லை.

ஜோ பைடன் வந்த புதிதில் விளாடிமிர் புடினை ரௌடி என்று சொல்லி அது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருந்தார். நாடக நடிகராக அவதானிக்கப்பட்ட தற்போதைய உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கியை தாங்கி பிடித்து புடினை சீண்டி விட பயன் படுத்த ஒரு கட்டத்தில் முழித்துக்கொண்ட அவர், தற்போது அமெரிக்காவிற்கு எதிராக முரண்டு பிடிக்க ஆரம்பித்து விட்டார்.

உடனேயே அவர் உயிருக்கு ஆபத்து என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்….. அவரோ அப்படி ஒரு நிலை வந்தால் அதற்கு மேற்கு உலக நாடுகள் தான் பொறுப்பு என வெளிப்படையாக பேட்டி கொடுக்க …… தற்போது இது வேறு தனி விவகாரம் ஆகி விட்டது. போதாக்குறைக்கு தான் ரஷ்யாவோடு இணைந்து போக விரும்புவதாகவும் வெளிப்படையாக அறிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க… அமெரிக்காவில் முதன் முறையாக அங்கு அதிபருக்கு எதிரான மனநிலை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள். பத்தும் பத்தாதற்கு அமெரிக்க பொருளாதாரம் பலத்த அடி வாங்க ஆரம்பித்து இருக்கிறது. அங்கு பணவீக்கம் விகிதம் வரலாறு காணாத அளவுக்கு உயர தொடங்கி இருக்கிறது. உணவு மற்றும் அடிப்படை சுகாதார பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் அது அங்கு பெரும் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டு 1928 ஆம் ஆண்டு உண்டானது போன்ற பொருளாதார மந்தநிலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆக இவர்கள் தான் ரஷ்யாவின் பொருளாதார வர்த்தக தடை மூலமாக அதன் வளர்ச்சியை பத்தாண்டுகளுக்கு பின் நகர்த்துவதாக சொல்லி இவர்கள் நூற்றாண்டு பின் நகர இவர்களாகவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

வினை விதைத்தவன்…….

நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here