எப்படி வீழ்ந்தது ரஷ்ய கப்பல்?

உக்ரைன் ரஷ்யா மோதல் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவின் மிக முக்கியமான போர் கப்பல் ஒன்றை, உக்ரைன் தனது ஏவுகணை கொண்டு தாக்கி கருங்கடலில் மூழ்கடித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறார்கள் உக்ரைனியனர்கள்.

நிலைமை கொஞ்சம் சிக்கலாகி வருகிறது தற்போது.

ரஷ்யாவின் தாக்குதல் போர் கப்பல் மொஸ்குவா உக்ரைனிய ஒடிஸா கடற்கரைக்கு அருகில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது சற்றே மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட டெஸ்ட்ராயர் ரக க்ரூஸ் வகை கப்பல். 16 கடல் பீரங்கிகளை கொண்டும்… 7 ஏவுகணை தாங்கி ஏவுதளம் கொண்டும்….. விமான எதிர்ப்பு, கடலடியில் வரும் ஏவுகணையை துல்லியமாக தாக்கும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பொருத்தப்பட்ட பூரணமான தாக்குதல் கப்பலான இதனை உக்ரைன் தனது சொந்த தயாரிப்பு நெப்டியூன் ரக ஏவுகணை கொண்டு அடித்து வீழ்த்தி இருக்கிறார்கள்.

கப்பல் ஜலசமாதி கண்டது.

கப்பலில் இருந்து எவரும் மீட்கப்பட்டதாக தகவல்கள் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவே. கிட்டத்தட்ட 500-680 பேர் வரை பணியில் இருந்த நிலையில் இக்கப்பல் இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

உக்ரைன் ஏவிய ஏவுகணை ஒன்றும் நவீன ரகம் அல்ல….. சோவியத் கால தயாரிப்பு. இன்றுள்ள சூப்பர் சானிக்….. ஹைப்பர் சோனிக் என்கிற அளவுக்கு மேம்படுத்தப்பட்ட ரகமல்ல…. இந்த ரக ஏவுகணை சப்-சோனிக் வேகத்தில் பயணிக்க கூடியது தான். அதாவது விமானங்கள் பறக்கும் வேகம் மட்டுமே இந்த ஆர்கே 360 நெப்டியூன் பறக்கும் திறன் கொண்டது.

பிறகு எப்படி உக்ரைனால் இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.???
அல்லது ரஷ்ய போர் கப்பலால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லையா?????
என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டது….. விவாதிக்கப்பட்டது……. என்ன நடந்தது என்று ஆராயப்பட்டது…..

உண்மை கண்டறியப்பட்டது…. அப்படியே கொஞ்சம் ஆடித் தான் போனார்கள்….
இதன் பின்னணியில் உக்ரைன் பாராதூரமான தந்திரத்தை கையாண்டு இருக்கிறார்கள்……

வெலோடிமர் ஜெலனஸ்கி தனது நட்பு நாடுகளிடம் தங்களுக்கு அதி நவீன கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வேண்டும் என்று இந்த மாத ஆரம்பத்தில் இருந்து கோரிக்கை ஒன்றினை விடுத்தார்.
அமெரிக்கா, கனடா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் அவற்றை பரிசீலனை செய்வதாக சொன்னது.

இந்த நிலையில் தான் உக்ரைன் சத்தம் இல்லாமல் துருக்கி வசம் இருந்து பெற்ற ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானமான பே-ராக்டர் டிபி2 ரக இரண்டு விமானங்களை உக்ரைனிய கடல் எல்லையில் நின்று இருந்த மொஸ்குவா கப்பலை நோக்கி செலுத்தியது. கூடவே ஏவுகணையையும் தட்டி விட்டது.

கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே வேகத்தில் பறக்கும் படி செய்திருக்கிறார்கள்.
கப்பலில் கண்காணிப்பில் இருந்தவர்கள் கொஞ்சம் அசிர்தையாக இருக்க….. துருக்கி தயாரிப்பு பே ராக்டரை வீழ்த்த கப்பலின் மேல் தளத்தில் இருந்த துப்பாக்கியை கொண்டு சுடும் சமயத்தில் தான் ஏவுகணை தென்பட காரியம் கை மீறி சென்று இருக்கிறது.

இந்த ஏவுகணையும் துல்லியமாக தாக்கி இருக்கிறது. அவர்களை பொறுத்தவரை உளவு தகவல்களின் அடிப்படையில் ஏதோவொரு மேற்கு உலக நாடுகளின் கப்பல் அழிக்கும் ஏவுகணை ஒன்றை எதிர்ப்பார்த்திருக்க……. அதரப்பழசான இந்த ரக ஏவுகணைகளை நிச்சயமாக எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்…. பாவம் ஏமாந்து போய் இருப்பார்கள்.

முதல் தாக்குதலில் பலத்த சேதமடைந்த கப்பலை இரண்டாம் ஏவுகணை பலமாக பதம் பார்த்து இருக்கிறது.

ஆரம்பத்தில் இதனை நுட்பமாக உணராத புடினிடம் செய்தியாளர் கேள்வி கேட்க அவரும் அப்படி ஒன்றும் பெரிய சமாச்சாரம் இல்லை…… பயிற்சியின் போதான விபத்து…… அந்த கப்பலில் இருந்தவர்களே அதனை திறம் பட கையாளக் கூடியவர்கள்…… தாம் அவர்களோடு தொடர்பில் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

அடுத்த நாளும் இதே விதமான தகவல்களை அவர் தெரிவிக்க….. இறந்தவர்களோடு தொடர்பு கொள்ள நீங்கள் என்ன ஆவி உலகத்தவரா என பாதிக்கப்பட்ட ரஷ்ய மக்கள் சிலர் அவரிடம் கொந்தளிக்க …….. இது தான் சமயம் என்று பல மேற்கு உலக ஊடகங்களும் அதனை அப்படியே நேரலையில் ஒளிபரப்பு செய்ய….. விஷயம் களேபரம் ஆனது.

இது நடந்த மூன்று மணி நேரத்தில் உக்ரைனில் இருந்த அந்த ஏவுகணை தயாரித்த தொழிற்சாலை முற்றிலும் எரிந்து நாசமானது. ரஷ்ய தாக்குதல் என்று சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டிய சமாச்சாரம் அல்ல அது. அத்தோடு விடவில்லை விளாடிமிர் புடின்…… சாமியாட தயாராகி கொண்டு வருகிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…… அந்த வகையில் இந்த போர் இந்த ஆண்டு முழுவதும் நடந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்கிறார்கள்……

அவர்கள் சொல்லும் விஷயம் களமுனையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து இருக்கிறது.
இது நாள் வரை மொத்தமாக சென்று முற்றுகை இட்டு காத்துக் கொண்டு இருந்து விட்டு…. மக்கள் வெளியேற கால அவகாசம் கொடுத்த பாணி போய்…… சிறு சிறு குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்… தாக்கியும் இருக்கிறார்கள்….
.
இவ்விதமே ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடந்த ஆரம்பித்து இருக்கிறார்கள் கிழக்கு உக்ரைனில்.
போதாக்குறைக்கு உக்ரைன் தலைநகர் கிவ்வில் கவணம் செலுத்தி வந்தவர்கள் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஓரம் இருக்கும் லிவ் நகரம் வரை வந்து இந்த வகை தாக்குதல் தொடுத்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். மரியம்போல் நகரை முற்றிலும் அழித்து இருக்கிறார்கள். உக்ரைனில் உள்ள 32 சதவீத இடங்களை மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற்றி இருக்கிறார்கள் ரஷ்ய ராணுவ வீரர்கள் என்கிற ரீதியிலான தரவுகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன.

இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியில் வேறோர் விஷயம் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அது அந்த ஏவுகணை தான்.

இந்த ரக ஏவுகணையை உக்ரைன் தயாரித்து அதனை அவர்கள் பயன்படுத்துவதோடு இல்லாமல் உலகின் ஒரேயொரு நாட்டிற்கு ஏற்றுமதியும் செய்திருக்கிறார்கள் என்கிற சமாச்சாரம் தான் பலரது புருவத்தை உயர்த்தி இருக்கிறது.

அப்படி அதனை அவர்களிடம் இருந்து வாங்கியது நம் இந்திய தேசம் தான். 1993 ஆம் ஆண்டு இது நடந்திருக்கிறது. அந்த ரக ஏவுகணைகள் நமது படையில் 2003-04 ஆண்டு வரை பாவனையில் இருந்து இருக்கிறது.

இது தான் இப்போது பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.

ஏனெனில் இந்த உலகில் அதி உன்னத ராணுவ சாதனங்கள் எல்லாம் எப்படி ஒரு தேசம் தேடி கண்டுபிடிக்கிறது….. அதனை வாங்க முற்படுகிறது என விவாதிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள். அதில் உண்மை தன்மை இல்லாமலும் இல்லை.

கடந்த காலத்தில் இந்தியாவை உலுக்கிய போப்பர்ஸ் பீரங்கிகளை வாங்கிய விதத்தில்….. அதற்கான பேரத்தில் தான் ஆட்சி மாற்றமே நடந்திருக்கிறது. ஆனால் அந்த ரக பீரங்கிகளை குறை சொல்லவே முடியாது…. இன்னமும் சரியாக சொன்னால் அந்த பீரங்கிகள் இருந்ததால் தான் நமது தேசம் கார்கில் போரில் வெற்றி பெற முடிந்திருக்கிறது.

அதுபோலவே தான் லடாக்-கல்வான் மோதலின் போதும்……. நம் வசம் ரஃபேல் விமானங்கள் இருந்ததாலேயே தான் சீனாவே தட்டு தடுமாறி நின்றது. ஒரு வேளை அந்த சமயத்தில் அவர்கள் முன்னேறி இருந்தால் பெருத்த சேதத்தை சந்தித்து இருப்பார்கள். காரணம் அவர்களிடம் அந்த சமயத்தில் தாக்குதல் விமானங்களோ அல்லது சரக்கு போக்குவரத்தை கவனித்து கொள்ளும் விமான ரகங்கள் எதுவும் சீனாவிடம் இருந்தது இல்லை.

ஆனால்…..
நம் வசம் தாக்குதல் நடத்த போர் விமானங்கள் மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்திற்கு போயிங் நிறுவன தயாரிப்பு ராணுவ சரக்கு போக்குவரத்து விமானங்கள்… அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர் உட்பட சினூக் ரக சரக்கு போக்குவரத்து ஹெலிகாப்டர் வரை ரகம் வாரியாக தயார் நிலையில் நிறுத்தி வைத்து இருந்தோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் உலக அளவில் அந்த ரக விமானங்களுக்கும் ஹெலிகாப்டர்களுக்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது….. இன்றளவும் அந்த ரகத்திலானவைகளுக்கு காத்திருப்பு காலம் 5-8 ஆண்டுகள். அவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது அதன் வர்த்தகம் என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
போகட்டும் நம் சமாச்சாரத்திற்கு வருவோம்.

உக்ரைனில் ருத்ர தாண்டவம் ஆட ரஷ்யா ஆயத்தமாகி வரும் நிலையில் உக்ரைன் அதிபர் வொலோடிமர் ஜெலன்ஸ்கி சமாதான உடன்படிக்கையை உடனடியாக மேற்கொள்ள உலக நாடுகளை கெஞ்சி கூத்தாடி கொண்டு இருக்கிறார். ஆனால் உலக நாடுகள் தான் மசிந்த பாடில்லை. ஆயுதங்களை கேள் தருகிறோம்…. போதாக்குறைக்கு டாலர்களை கூட தருகிறோம்…… சமாதான பேச்சுவார்த்தைக்கு கூப்பிடாதே என்று முகத்தில் அறைந்தார் போல் கூறி வருகின்றனர் பலரும்……. அதற்கும் இந்தியா தான் காரணம் என சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள் என்பது தான் இதில் உள்ள வேடிக்கையான சமாச்சாரம்……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here