இலங்கையில் ஜெய்சங்கர்!

கட்டம் கட்டி கலக்கி கொண்டு இருக்கிறார் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

அநேகமாக இது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கு அரசு முறை பயணமாக சென்று வர திட்டமிட்ட நிலையில் அதனை தற்சமயம் ஜெய்சங்கர் சிரமேற்கொண்டு செய்துக்கொண்டு இருக்கிறார். சரி ஏன் நமது பிரதமர் செல்லவில்லை என்று பார்த்தால்…… இலங்கை ஒன்றும் முழுமையாக ஒத்துவரவில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…. அதாவது சரியாக சொல்வதென்றால்….. அவர்களிடத்தில் இன்னமும் அலம்பல் அழிச்சாட்டியம் குறைந்த பாடில்லை என்கிறார்கள்.

உக்ரைன் ரஷ்யா பிரச்சினைக்கு பிறகு அமெரிக்கா சொல்படி பெய்ஜிங் ஆட…. அதன் தொடர்ச்சியாக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-லீயை கொண்டு நமது தேசத்துடன் பேச தூது அனுப்பி வைத்திருக்கிறார்கள் அமெரிக்க ராஜாங்க அமைச்சில் உள்ள உள்வட்டாரங்களில்…… மேல் பார்வையில் இந்திய சீன இடையேயான எல்லை பிரச்சினை குறித்து பதினான்காவது…. பதினைந்தாவது சுற்று பேச்சு வார்த்தை என உலகத்தவரின் காதில் பூ சுற்ற…. அவரை வரவேற்று உபசரித்து வந்த வழியே நல்லவிதமாக போய் வாருங்கள் என அனுப்பி வைத்தார் நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். அனுப்பி வைத்த கையோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நன்கு எண்ணெய் ஊற்றி வறுத்தெடுக்கவும் தவறவில்லை அவர். தலைப்பு செய்தியே இது தான்.
ஆடிப் போனார்கள் அனுப்பி வைத்தவர்கள்.

சூட்டோடு சூட்டாக மனிதர் இலங்கைக்கும் சென்று இருக்கிறார். கடந்த வாரம் வரையில் இங்கு உள்ள ஊடகங்கள் உட்பட பலரும் இலங்கைக்காக முதலை கண்ணீர் வடிக்க……. அதாவது அங்கு அத்தியாவசிய பொருட்கள் விலை வானத்திற்கு உயர்ந்து இலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டது என செய்தி வாசிக்க…….. தற்போது அங்கு வைத்து கையெழுத்தான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் குறித்தெல்லாம் வாயே திறக்கவில்லை இவர்கள்.

துபாய் ஷேக் முதல்……
இந்தியா ஷேக்கிங் என செய்தி வாசித்தவர்களுக்கு ஷேக்ஹாண்ட் கொடுத்து வரவேற்று நாம் கொடுத்த ஒப்பந்தங்களில் எல்லாம் கையெழுத்து போட்டு கொடுத்ததை பற்றி வாயே திறக்கவில்லை என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள் எத்தனை முக்கியமான ஒப்பந்தங்கள்
அவை என்று……
உதாரணமாக ஒன்று பாருங்கள்.
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவு அருகே உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மூன்று தீவுகளில்…… அதாவது நைனார் தீவு, நெடுந்தீவு மற்றும் அனலை தீவு என்கிற மூன்று தீவுகளில்….. நம் இந்தியா அங்குள்ளவர்களுக்கு மானிய அடிப்படையில் சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் வரைவு திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதனை முதலில் சீனா வசம் தான் இலங்கை கொடுத்திருந்த வேளையில் தற்போது அதனை இந்தியா தட்டிப் பறித்து இருக்கிறது.

அது போக இலங்கையின் வான் மண்டலத்தை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன….. இது எத்தனை தூரம் நிஜம் என்பது போகப் போக தான் தெரியும். ஏனெனில் இதன் பின்னணியில் வேறோர் சமாச்சாரமும் இருக்கிறது. இலங்கை யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்தில் நம் பாரத பிரதமர் தரையிறங்க அனுமதிக்க வில்லை என்றும் ஒரு தகவல் உண்டு. அப்படி அனுமதி கொடுத்து இது அங்குள்ளவர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று விட்டால்…….. என்கிற தொலை தூர சிந்தனையும் ஒரு காரணம். அதன் பொருட்டே நமது பிரதமர் தனது பயண திட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதன் அடிப்படையில் தான் நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அங்கு பயணம் மேற்கொண்டு இழுத்து பிடித்து கேள்வி கேட்டு….. சிலவற்றை செய்து கொடுக்க ராஜாங்க ரீதியிலான அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்…..

மீளா கடனில் சிக்கி தவிக்கின்றது இலங்கை என்பதே நிதர்சனமான உண்மை…..
ஆனால் அதனை மீட்டெடுக்கும் எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் இலங்கையை ஆளும் ராஜபக்ச சகோதரர்கள் ஆட்டம் காட்டி வருகின்றனர். இதனை மேலும் தொடராமல் இருக்க இந்தியா கிடுக்கிப்பிடி போட காய் நகர்த்தலை செய்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆளும் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை துறைமுகத்தில் நின்று கொண்டு இருக்கும் உணவு பொருட்கள் அடங்கிய கப்பல்களுக்கு செலுத்த வேண்டிய அமெரிக்க டாலர்கள் கையிருப்பு இல்லாத சூழ்நிலையில் இலங்கை இன்று இடியாப்ப சிக்கலுக்குள் சிக்கி தவிக்கின்றது. இந்தியா தனது எண்ணெய் சேமிப்பில் இருந்து டீசலை விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைத்து முதல் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சரக்கு போக்குவரத்தை சீரமைப்பு செய்ய பெருமுயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதிகளை தாண்டி சீனர்களை உள் நுழைய கடும் எதிர்ப்புக் கலக குரல்கள் இலங்கை முழுவதும் எழுந்து வருகிறது….. இதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக புரளி கிளப்பி விட்டு, அங்குள்ள சிலர் குளிர் காய்ந்து வர….. இந்தியா நேரிடையாக சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-லீ மூலமாக நேரடியாக பேசி வேகமாக காய் நகர்த்த தற்போது அங்கு உள்ளவர்கள் அலண்டு போய் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதனிடையே அடுத்த வாரம் சீன வெளிவிவகார துறை அமைச்சர் இலங்கை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம் இந்திய அரசு இரண்டு மிக முக்கியமான விஷயங்களை கையில் எடுத்து இருப்பதாக சொல்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக யாரும் வரக்கூடாது….. அப்படி ஒரு நிலை நேர்ந்தது என்றால் இந்தியா அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கும் என்று தீர்த்து சொல்லி அதிரடித்திருக்கிறார்கள்.

இது நம்மில் பலருக்குமே வேண்டாத வேலை போல் தோன்றினாலுமே கூட இதன் பின்னணியில் உள்ள ராஜதந்திர நகர்வு ஆழமானது. எவ்விதம் எனில் ஏற்கனவே இங்கு நம் தேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை மக்கள் பலருக்கும் இந்திய குடியுரிமை கொடுக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது….. இது அதிகமாகும் பட்சத்தில் இலங்கை குடியுரிமை கொண்ட மக்கள் பலரும் இந்திய குடியுரிமை கொண்டவர்களாக அங்கீகரிக்கப்படும் சூழ்நிலையில் இலங்கை நடவடிக்கைகளில் இந்தியா நேரிடையாக களத்தில்….. கோதாவில் இறங்கிவிடும் வாய்ப்பும்…. அதற்கு சர்வதேச சட்ட அங்கீகாரமும் கிடைக்கும் போலான சூழ்நிலை ஏற்படும்…..

இப்பொழுது இதனை நுட்பமாக யோசனை செய்து பாருங்கள்…. இதன் வீர்யம் புரியும்.
இதனை இங்கு உள்ளவர்கள் உணர்ந்து கொண்டனரோ இல்லையோ….. இலங்கையில் உள்ளவர்கள் நன்கு புரிந்து கொண்டு வாயடைத்து நிற்கிறார்கள்…… ஒரு சில சில்வண்டுகள் மாத்திரம் விடாமல் லாவணி பாடி கொண்டு இருக்கிறார்கள் அங்கு…… வேறு வழி….??????

காஷ்மீர் போல் இலங்கையின் பிரச்சினைக்கும் சுமூகமாக தீர்வு எட்டப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதுவும் நம் இந்திய தேசத்தின் தலைமையில் விரைவிலேயே நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here