அண்ணாமலை ஸ்டாலினுக்கு அதிரடி கடிதம்!

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழகத்தின் வாகனம் இடம்பெறாததை சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் இறுதி வரியில் ஜனவரி 26 குடியரசு தினம், சுதந்திரதினமல்ல என்று குறிப்பிட்டிருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் குடியரசு தினத்தை சுதந்திர தினம் என்று குறிப்பிட்டிருந்தார் அதை அண்ணாமலை குறிப்பிடுகிறாரா அல்லது தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட விடுமுறை பட்டியலில் குடியரசு தினத்தை சுதந்திர தினம் என்று குறிப்பிடப்பட்டிருந்து பின்னர் மாற்றப்பட்டது அதை குறிப்பிடுகிறாரா என்று சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கின்றனர்..

இதோ அண்ணாமலையின் கடிதம்…

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
தமிழக மக்களும், சமூக ஊடகங்களும், செய்தி நிறுவனங்களும் துணிச்சலுடன் தாங்கள் தந்த பொங்கல்பரிசு… நலக்கேடு தரும் கலப்படம் மிக்கதாக இருப்பதை வெளிச்சப்படுத்தி போராடி வருகிறார்கள். மிளகில் பப்பாளி விதை, மிளகாய் தூளில் மரத்தூள், நசத்துப்போன வெல்லம், சாறு இல்லாத காய்ந்த கரும்புகளம் என்று கலப்படமும், தரக்கேடும், தாமதமும், குறைபொருளும், மக்களின் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் போது, அதிலிருந்துதப்பிக்க தங்களது வழக்கமான நடைமுறையான மத்திய அரசுடன் மோதலை உருவாக்கி தாங்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க எடுத்திருக்கும் இந்த முயற்சி பலன் அளிக்கப் போவதில்லை.
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே…
வரும் ஜனவரி 26 ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாட்டின் வாகனம் பங்கு பெற தகுதி அடிப்படையில் தேர்வு பெறாத செய்தியை தவறாக சித்தரிப்பதைக் கண்டித்து பின்வரும் விஷயங்களை மனதில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
1.மகாகவி சுப்பிரமணிய பாரதி தலை சிறந்த தேசியவாதி, தீவிரமான ஆன்மகப்பற்று மிக்கவர். அவர் கண்ட கனவு அகண்ட பாரதம். அதுவே பாரதிய ஜனதா கட்சியின் தாரக மந்திரம். இந்த ஒவ்வொமையால் தான் நீங்கள் பாரதியை விட பாரதிதாசனை அதிகம் கொண்டானீர்கள்.

  1. மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்கள் திமுகவின் கொள்கைகளுக்கு எதிரானவர். இப்போது திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இனவாதம், மதவாதம், தேசிய எதிர்ப்பு, மொழிப்பிரிவினை, ஊழல் போன்ற கொள்கைகளை எல்லாம் அவர் எதிர்த்து நின்றார். நீங்கள் அவரை காட்சிப்படுத்த வேண்டிய சூழலில், அவர் நெற்றியில் அணிந்திருந்த திருமண் திலகத்தை தவிர்த்துவிட்டீர்கள். அதை அவர் விரும்பி இருக்க மாட்டார். அவர் எப்போதும் தன்னை பாரதத் தமிழனாக அடைõளப்படுத்துவதில் பெருமிதம் கொண்டார். அவரை திலகத்துடன் உருவப்படுத்துங்கள்.
  2. வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் மற்றும் குயிலியின் தியாகம் மிக்க வாழ்க்கை எந்த ஒரு சமூக பிரிவைச் சேர்ந்தவரையும் தலைமைக்கு உயர்த்தும் தகுதி மிக்கது. நீங்கள் மரபுரிமையாக அனுபவிக்கும் தலைமைப்பொறுப்பை அடைய ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் நிரூபித்தனர்.
  3. தன்னிகரற்ற தேசியவாதியாக இருந்த சிறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை, தீவிரமான தேசப்ற்று மிக்கவர். அவர் எப்போதும் தனி மாநிலம் பற்றி பேசவில்லை. நாட்டிற்காக எடுத்த உறுதியான நிலைப்பாட்டிற்காக அவர் கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். அவருடைய ஆன்மீகத் ஆளுமையும், தெய்வீகத் தன்மையையும் ஸ்ரீராமகிருஷ்ணரிடமிருந்து அவர் பெற்ற உத்வேகத்தையும் மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா?
    ஐயா இறுதியாக ஒரு வார்த்தை. 1967 ல் தொடங்கிய திமுக ஆட்சி காலத்தில் இருந்து என் பள்ளி பிள்ளைகளுக்கு உள்நோக்கத்துடன் வடிகட்டிய வரலாற்றை தானே வகுப்பறையில் கொடுத்துள்ளீர்கள்.
    உதாரணமாக தமிழ் தெய்வ வணக்கம் என்ற தலைப்பிலே மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளையவர்கள் எழுதிய வாழ்த்துப்பாடலில்
    பல்லுயிரும் பலவுலகம் படைத்தளித்து துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பது போல்
    கன்னடமுங் களித்தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
    உன்னுதரத் தேயுதித்த ஒன்று பல வாகிடினும்
    போன்ற உயிரோட்டமான வரிகளை எல்லாம் நீக்கிவிட்டு உங்களுக்குதத்தோதானா வரிகளை மட்டும் தானே தமிழ்த்தாய் வாழத்துப் பாடலாக மாற்றினீரகள். தமிழை தெய்வமாக நாங்களள்வணங்குவது போல நீங்கள் வணங்க விரும்பவில்லை. தமிழில் இருந்து தோன்றிய உயர் சிறப்புமிக்க பிற தென்னிந்திய மொழிகளையும் ஒதுக்கினீர்கள். தமிழுக்கு இருக்கும் உயர்தனிச் செம்மை சிறப்பை தாங்கள் விரும்பவில்லை போலும்.
    இ÷துபோல உங்கள் காலத்திலிருந்து தொடங்கும் எடிட் செய்யப்பட் வரலாறுகளை தவிர்த்து எங்கள் பள்ளிப் பாடப்புத்தகங்களில் வார்த்தைகளில் உண்மை வைத்து வரலாறை எழுத வைத்து இந்த மாமனிதர்களின் வாழ்க்கையை பள்ளிச்சிறார்கள் படிக்கத் தந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
    இறுதியாக ஐயா… ஒரு நினைவூட்டல் ஜனவரி 26 நம் நாட்டின் குடியரசு தினமே தவிர நமது சுதந்திர தினம் அல்ல

என்று எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here