டி20 கிரிக்கெட் போட்டி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ அந்தஸ்த்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவை நீக்கியதும், யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஆட்டம் முடிவுக்கு வரத்தொடங்கியுள்ளது.

நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் காஷ்மீர் மாநிலம் தங்கள் கையைவிட்டு போவதைக் கண்ட பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகளை தூண்டி அப்பாவி மக்களை கொலை செய்யும் பாதக செயலில் ஈடுபட்டு வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரு அப்பாவி தொழிலாளர்கள் ராஜா ரிஷிதேவ், ஜோகிந்தர் ரிஷிதேவ் ஆகியோரையும், அதற்கு முன்பு பானி பூரி விற்கும் இளைஞரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களில் இருந்து 6 புல்லட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

வெளிமாநில அப்பாவி தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. பீகார் மாநிலத்தில், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது கொலை வெறித் தாக்குதலை தூண்டிவிடும் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியை டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், பாகிஸ்தான் அணி பங்கேற்றால் இந்திய அணி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை தீவிர மடைந்து வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் பிரதமராக உள்ள பாகிஸ்தான், பயங்கரவாத செயலை நிறுத்தவில்லை. இதனால் அந்த நாட்டின் அணியை உலக கோப்பை போட்டியில் விளையாட ஐசிசி அனுமதிப்பது, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது போலாகும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வளைகுடா நாடுகளான ஓமன், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 16 நாடுகள் பங்கேற்கும் 7 வது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது. இதில் வரும் 24 ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய மக்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால், இரு அணிகள் மோதும் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஜம்முவில் ராணுவ முகாமிற்கு அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த அப்துல்சமது, அப்துல்அமீது என்ற ரோகிங்யா முஸ்லீம்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் பாகிஸ்தான் மற்றும் பர்மா நாடுகளுக்கு அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்துது. அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகினறனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here