தமிழா… வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வாயா?

ஓர் இடத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்பது அதன் 120 டிகிரி கோணத்தில் வரும் இடங்களை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இன்று நம் தேசத்தின் மூன்று முக்கிய இடங்களில் இயற்கையாகவே மூன்று நிலப்பரப்பை கொண்ட இடங்களில்…..அதாவது கேந்திரம் எனும் மூலத் திருக்கோணத்தில் வரும் நாடுகளில் இன்று கலகம் அதிகரித்து கலவர பூமியாக காட்சி தருகிறது.

ஒன்று பாகிஸ்தான், அடுத்ததாக மியான்மார் எனும் பர்மா மூன்றாவதாக இலங்கையை சொல்லலாம். இங்கு குறிப்பிட்டுள்ள இந்த மூன்று தேசங்களும் முன் ஒரு காலத்தில் நம் பாரதத்தோடு இணைந்த பகுதியாக செல்வ வளம் கொழிக்கும் நாடுகளாக இருந்திருக்கிறது……. ஆனால் இன்று அங்கெல்லாம் சோற்றுக்கே வழியில்லை. அது தான் அங்கு நிலவும் நிதர்சனமான உண்மை.

இன்றைய தேதியில் இது அனைத்திற்கும் மூல காரணம் ஒரே ஒரு நாடு தான். அது சாட்சாத் சீனாவே தான். எல்லாவற்றிற்கும் உள்ள ஒரு பொதுவான அம்சம் கடன்.

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்கிறது கம்பராமாயண கவித்துவமான வரிகள். இன்று அந்த இலங்கையே இந்த கடன் சுமையால் நாதியற்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. தனித் தீவாக இருந்தபோதிலும் இலங்கை என்பது வளமான பூமி…….
ஸ்திரமான ஜிடிபி கொண்டு இருந்த பகுதி இது. இதற்கு இவர்களின் மூன்று டி காரணமாக அமைந்தது என சொல்வார்கள்.
ஒரு டி தேயிலை.
மற்றொன்று டூரிஸம். அடுத்ததாக ட்ரேடிங். இது அத்தனையும் கெடுத்த மிக முக்கியமான ஒன்று தான் டெரரிஸம் டி.

போகட்டும் நம் சமாச்சாரத்திற்கு வருவோம்… மேலோட்டமாக பார்த்தால் இந்த நாடுகளின் கடன் சுமை தான் இவர்களின் இன்றைய நிலைக்கு காரணமாக சொன்னாலும் நிஜத்தில் நீறு பூத்த நெருப்பாக இங்கெல்லாம் வேறொவர் புகுந்து புறப்பட்டு பெரும் நாசத்தை திட்டமிட்டே விளைவித்திருக்கிறார்கள். அவர்கள் விஷநரிகள். புரிந்து கொண்டவர்கள் பாக்கியவான்கள்…..
அவர்களுக்கு அந்த ராஜ்யம் கூட???? வெகு சமீபமாக இருக்கலாம்……. யார் கண்டது.?!?!
மேற்சொன்ன மூன்று இடங்களில் நம் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருந்தது இரண்டு நாடுகள்…. இலங்கை மற்றும் பர்மா. இனத்தால்… மதத்தால் ஒன்றிணைந்து இருந்தவர்களை புதியதாக மொழியின் பெயரால் அடையாளப்படுத்தும் பாணியை மறைமுகமாக திணித்தனர் விஷ நரிகள். ஒரு கட்டத்தில்… அதாவது 90களில் தமிழர் என்றால் அது இலங்கை தமிழர்கள் மட்டும் தான் என்கிற ரீதியில் தோற்றம் உலக அளவில் ஏற்படும் அளவிற்கு நிலைமை கை மீறி போனது. இத்தனைக்கும் தேசத்தின் அடிப்படையில் பார்த்தால் நம் இந்தியாவில் தான் அதிகமாக நபர்கள் வருவார்கள்….

போதாக்குறைக்கு இவர்கள், இலங்கையில் உள்ளவர்களை அடையாளப்படுத்தும் போது காலங்காலமாக அங்கு இருந்து தமிழர்கள் அதனை எதிர்க்க……. உடனடியாக ஈழத் தமிழர்கள் என்கிற புதிய சொல்லாடல் மூலம் அதனையும் எதிர்கொண்டனர். மழுங்கடித்தனர்.
அவ்வளவு தூரம் ஏன்….. இதே போன்று இன்றைய மியான்மாரில் வாழ்ந்து வந்த தமிழர்களை….. நிஜத்தில் இவர்கள் நம் நேரடி தொப்புள் கொடி உறவுகள் இவர்கள்…. உலக போர் காலகட்டத்திலும் சரி அதற்கு பிறகும் சரி கதறி அடித்துக் கொண்டு ஓடி வந்து போது சீந்துவார் இல்லை அவர்களை இங்கே….

எதனால் ???????

யோசித்து பாருங்கள்.

இது ஒரு புறம் இருக்க…… இந்திய கடலோர… கடற்கரை ஓர கிராமங்களில்…. 80 களுக்கு பிறகான காலத்தில் திடீரென மதம் மாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும்….. இலங்கை வட கடற்கரையோர கிராமங்களும் இதே போன்று அதிகரித்து வந்ததும்…. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிங்களவர் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தும்….. திடீரென தமிழ் போராளி குழுக்கள் அதிகரித்ததும்……. அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடப்பதும்…… அந்த சண்டை தமிழகம் வரை தொடர்ந்ததும்… அதில் அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை சர்வ சாதாரணமாக பயன் படுத்தி சண்டையிட்டுக்கொண்டதும் எல்லாம்…… தனித் தனி சமாச்சாரங்கள் அல்ல…..

இதனை நன்கு உணர்ந்து கொண்டால் விஷ நரிகளின் வீர்யம் எவ்வளவு தூரம் வேலை செய்கிறது என்பது புரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here