தமிழில் தன் பெயரை மாற்றிக்கொள்வாரா ரஹ்மான்?

ராமாயணத்தில் ஒரு காட்சி உண்டு, லங்காபுரி போரில் நீலன் என ஒரு வானரம் லட்சுமணனிடம் ஓடிவரும் , “லட்சுமணா, இந்த போரில் இதுவரை நாம் கண்ட முகங்கள் திடீரென மாறி விகாரமாக வந்து நம் முன் நிற்கின்றன, என்னால் நம்ப முடியவில்லை லட்சுமணா. நேற்றுவரை வேறு முகத்தில் சாந்தமாக இருந்தவர்கள் இன்று ஏன் இப்படி முகத்தினை மாற்றி வேறுவடிவில் வருகின்றார்கள், நான் குழம்புகின்றேன் இவர்கள் எதிரிகளா இல்லையா என்பதே புரியவில்லை நான் இவர்களோடு மோதுவதா வேண்டாமா?”

லட்சுமணன் சொன்னான் “நீலா, நேற்றுவரை அவர்கள் தங்கள் நினைத்ததையெல்லாம் நடத்தி இங்கு பெரும் ஆட்டம் ஆடியவர்கள், அவர்களை தட்டி கேட்க யாருமில்லை அவர்கள் வைத்ததெல்லாம் சட்டம் போதித்தல்லாம் போதனை

அவர்களால் இங்கு நடந்த அழிவு கொஞ்சமல்ல, அந்த அதர்ம கூட்டம் நல்லவர் போல் வேடமிட்டு மிக நுணுக்கமாக எல்லோரையும் ஏமாற்றி ஆடிகொண்டிருந்தது

ராமன் காலடி இங்கு பட்டதும் அவற்றுக்கு அழிவுகாலம் வந்துவிட்டதை எண்ணி வேடம் கலைந்து அலறுகின்றன, நீ நேற்றுவரை கண்டது அவைகளின் வேடம் இப்பொழுது காண்பதுதான் உண்மை சுயரூபம், இதனால் அதை கண்டு குழம்பாது போர் புரிவாய்”

ஏ.ஆர் ரகுமானின் சமீபத்திய தடுமாற்றங்களை பார்க்கும் பொழுது இதுதான் தெரிகின்றது, அவரின் 30 வருட இசைவாழ்வில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் வந்த அவரின் சமீபத்திய குழப்பம் இந்த வரி அவருக்கும் பொருந்தும் என்பதை சொல்கின்றது

தமிழ் என்பது சிவபெருமான் உருவாக்கி அவரின் சீடர் அகத்தியரால் பொதிகை மலையில் உருவாகி மதுரையில் சங்கம் வைத்து வளர்ந்தமொழி

ஆனானபட்ட அகத்தியனோ, தமிழுக்கு இலக்கணம் எழுதிய அவன் சீடன் தொல்காப்பியனோ “தமிழ் அன்னை” என யாரையும் வணங்கவுமில்லை வாழ்த்தவுமில்லை
இங்கு தமிழர் எனும் இந்துக்களின் வாழ்வு இறைவனை வணங்கிவிட்டு பாடுவதாக இருந்தது
அந்த தமிழை இசைதமிழ், இயல்தமிழ், நாடக தமிழ் என பிரித்த அந்த இந்துசமூகம் மூன்றிலும் இறைவாழ்த்து என இந்து தெய்வங்களைத்தான் வணங்கின‌.

வள்ளுவனே கடவுள் வாழ்த்துபாடினானே அன்றி “தமிழ் வாழ்த்து” பாடவில்லை அவன் குறளில் “தமிழ்” எனும் வார்த்தை கூட இல்லை.

இசை தமிழுக்கு அது சரஸ்வதியினை வணங்கிற்று வீணையோடு வீற்றிருக்கும் அவளை அச்சமூகம் இசைதமிழுக்கு அதிபதி என வணங்கியது கம்பனும் ஒட்டகூத்தனும் அவ்வகை
இயல்தமிழுக்கு அது விநாயகனை நிறுத்திற்று, இயல்தமிழ் என்பது ஞானமொழிகளை தரும் வகையானது ஒளவை திருமூலர் போன்றவர் அவ்வகையே.

நாடக தமிழுக்கு “கூத்தன்” எனும் சிவனை நடராஜ பெருமானாக நிறுத்திற்று
இதனை தவிர வேறு தெய்வங்களோ அதற்கான வாழ்த்தோ தமிழ் இந்துக்களிடம் இல்லை, இம்மூன்று தமிழும் பக்தியினை வளர்ப்பதாகவும் இறை சிந்தனையினை தூண்டுவதாகவும் வாழ்வு நெறிகளை போதிப்ப்பதுமாக இருந்தது இதில் தமிழ் அன்னையோ, தமிழ் அணங்கோ இல்லை
பின்னாளில் சமணமும் பவுத்தமும் தமிழகத்தை ஆட்கொண்ட பொழுது இந்த இந்து வழிபாடுகள் மறக்கடிக்கபட்டன அல்லது மறைக்கபட்டன‌.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பவுத்த நூலாக கருதபட்டாலும் உண்மையில் அவை மறைமுகமாக இந்துதுத்வா கருத்துக்களையே பேசின அந்த அளவில் இங்கு இந்து வேர் உண்டு
பின்னாளில் மூவேந்தர் எழுந்து இந்துமதத்தை மீட்டனர், அதன் பின் பெரியபுராணம் போன்றவை வந்தன, அவையும் மொழிவாழ்த்து பாடவில்லை மாறாக இந்து தெய்வ வாழ்த்தைத்தான் பாடின‌
இந்த “டமிலன்னை” அல்லது “டமிழனங்கு” குழப்பம் வெள்ளையன் வரும்பொழுது வந்தது, அப்பொழுது தமிழகத்தில் நாயக்க அரசுகள் இருந்தன இவர்கள் தமிழர்கள் அல்ல, நவாபுகள் இருந்தார்கள் இவர்களும் தமிழர்கள் அல்ல‌.

அதே நேரம் இந்துக்களுக்கும் மொகலாயர்களுக்கும் தீராபோர் நடந்தது
வெள்ளையன் வடக்கே அப்போரில் கால்பதிக்கமுடியாமல் 16ம் நூற்றாண்டிலே தமிழகத்தில் ஒதுங்கினான், அவனுக்கு ஒரு பாதுகாப்பு தேவைபட்டது.

வீரசிவாஜியின் அரசு தஞ்சை வரை நீண்ட நிலையில் இந்து ராஜ்ஜியமும் இந்து மத பக்தியும் செழித்திருந்தன அது இன்னும் பெருகிற்று.

அந்நேரம் தமிழக இந்துக்களை “இந்து” என அந்த மனப்பான்மையில் சேரவிட்டாமல் நாயக்கர்களுக்கும், சிவாஜிக்கும் எதிராக தூண்டிவிட “தமிழ்” “தமிழன்” எனும் ஆயுதம் உருவானது
18ம் நூற்றாண்டில் வெள்ளையன் எழும்ப எழும்ப இதுவலுவானது.

தமிழன் இந்துவாக இருந்தால் தனக்கு ஆபத்து என்றும் அவன் இந்தியனாக இருந்தால் பெரும் ஆபத்து என்பதையும் உணர்ந்த வெள்ளையன் இந்த அயுதத்தை தீட்டினான்.

இலங்கையில் இதனை பரிசீலித்ததில் அவனுக்கு பெரும் வெற்றி என்பதை கொண்டு தமிழகத்திலும் செய்தான்.

அதுதான் பின் “டம்ல்” “டம்லன்” என உருவானது.

இந்துமதமில்லா தமிழ் கூட்டத்தை உருவாக்கி அதன் மூலம் இந்தியாவிலும் இலங்கையிலும் குழப்பம் விளைவிக்கும் திட்டம் அழகாக வேலை செய்தது.

இந்து என்றால் பெரும் கூட்டம் கூடும் இடத்தில் “டமிலன்” என சொல்லி அவனை சிறுகுழுவாக பிரிப்பது பலன் தரும் தந்திரமாயிற்று.

கால்டுவெல் வந்து என்னென்னவோ எழுதினான் ஆனால் கடைசிவரை அவனுக்கு திருநெல்வேலி டின்னவேலி என்றும், திருவனந்தபுரம் “டிரிவண்ட்ரம்” என்றும், வாசுதேவநல்லூர் “வாஷ்டேவ்நல்லூர்” என்றுதான் வந்தது.

தமிழக ஊர் பெயரே சொல்லதெரியாதவன் எழுதியது தமிழ் வரலாறு ஆயிற்று திராவிட கும்பலுக்கு “பைபிள்” என்றாயிற்று.

பல லட்சம் ஆண்டாக இங்கு சிவனையும் சரஸ்வதியினையும் விநாயரையும் முருகனையும் வணங்கிய தமிழ் சபைக்கு குபீரென “டமிலன்னை” உருவானாள்.

இதெல்லாம் 19ம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லாத வழமை.

ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழர் விநாயகரையும் சரஸ்வதியினையுமே தொழுது தமிழ்சபை நடத்தினார்கள்.

டமிலன்னை அரசியலாகி, இந்தி எதிர்ப்பதே டமிலன்னை வாழும் வழி என்றானது, சுத்தானந்த பாரதி போன்றோர் இதில் சேர்ந்ததும் காலகொடுமை.

இதில் பல இடங்களில் இந்துக்களே துணை போனார்கள் என்பதுதான் கொடுமை.

அதுவரை பெரும் நிலமும் வருமானமும் இந்து ஆதீனங்களுக்கு அக்கால மன்னர்களால் கொடுக்கபட்டது தமிழ் வாழ அல்ல, மாறாக இந்துமதத்துக்காக தமிழ் வாழ‌
அதனால்தான் ஆலயம் கட்டி அதற்கு நிலமும் வைத்து அதனால் தமிழ் வாழ்ந்து இதனால் இந்துமதமும் வாழட்டும் என்றுதான் அக்கால இந்துசமூகம் பெரும் ஏற்பாட்டை செய்தது
ஆனால் இந்துமதம் எப்படியும் போகட்டும் தமிழ்தான் முக்கியம் என ஆதீனங்களும் மடங்களும் இந்த கொடுமைக்கு துணை போயின‌.

அதனாலே சைவ வைணவ இலக்கியம் அல்லாமல் ஒளவையின் போதனை அல்லாமல் சமண பவுத்த இலக்கியம் ஐம்பெரும் காவியமானது, அவை ஐஞ்சிறு காவியமானது
இரண்டிலும் இந்து இலக்கியமில்லை.

ஆம், தமிழ் என ஆங்கிலயேர் தந்திரம் பாய்ந்து இங்கு இந்து இலக்கியம் அழிய ஆரம்பித்தது 18ம் நூற்றாண்டிலே வந்த கொடுமை.

அது பின்பு நீதிகட்சி, தனி தமிழ் இயக்கம், தமிழர், திராவிட கழகம், திமுக என விரிந்து வந்தது, விடுதலை புலிகள் எனும் தீவிரவாத இயக்கம் வரை வந்தது.

பர்மாவில் பவுத்த பர்மாக்காரன் அடிப்பான் ஆனால் அடி வாங்கும் தமிழனுக்கு மதம் கிடையாது மொழி மட்டும் உண்டு.

இலங்கையில் பவுத்த சிங்களன் அடிப்பான் அடிவாங்கும் தமிழனுக்கு மதமே கிடையாது
அப்படிபட்ட கொடுமை தமிழகத்திலும் வந்தது, இந்த கொடுமை இந்திய ஒருமைபாட்டுக்கு எதெல்லாம் ஏற்பாடோ அதையெல்லாம் “டமில்” பெயரில் துண்டாடும்.

17ம் நூற்றாண்டில் வெள்ளையன் செய்த ஏற்பாடு 21ம் நூற்றாண்டிலும் தொடர்வது வேதனை
இன்றைய நாஞ்சில் சம்பத் போல ஒருவர் 1940களில் இருந்தார் அவர் பெயர் பாரதிதாசன், அவரின் முழக்கமே திராவிட கும்பலுக்கு “சங்கீத”மாயின‌.

உண்மையில் தமிழகம் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு இந்தி கன்னடம் இந்தி ஆங்கிலம் உருது என எங்கும் அவரவர் மொழிக்கான அன்னையினை காணமுடியாது.

திராவிட கும்பல் இந்த அன்னையினை தமிழக தெய்வங்களுக்கு நிகராக நிறுத்தின, சரஸ்வதி கோலத்தில் கவுரமாக நிறுத்தி இந்து அழிப்பில் ஈடுபட்டன‌.

இப்பொழுது திலீப்குமார் சந்திரசேகர் எனும் இயற்பெயர் கொண்ட ஏ.ஆர் ரகுமானார் “தமிழனங்கு” என தலைவிரி கோலத்தில் அதாவது அவரின் தொடக்ககால தலைமுடி போல ஒரு கோலத்தில் தமிழன்னையினை நிறுத்தியிருக்கின்றார் இது கண்டிக்கதக்கது.

அவர் பெயர் தமிழ் அல்ல, அவரின் குடும்பத்தில் யார் பெயரும் தமிழ் அல்ல‌
அவர் பாடவைக்கும் பாடகர்களும் பெரும்பாலும் தமிழர் அல்ல‌.

இன்று இந்தியினை எதிர்ப்போம் எனும் ரகுமானார் இந்திபடங்களுக்கு நல்ல சம்பளத்தில் இசை அமைப்பதும் அதற்கு ஆஸ்கர் போன்ற விருதுகள் பெருவதும் ரகசியமல்ல‌.

தான் இந்தி படங்களுக்கு இசை அமைப்பதை, இந்தி பாடல்களை உலகம் முழுக்க கொண்டு சேர்ப்பதை மறைத்துவிட்டு “டமில்” கோலம் பூணுவது சரியல்ல‌.

ரகுமானார் தமிழ்பற்று உண்மையென்றால் அவர் பெயரை மாற்றட்டும், அவர் சார்ந்த சமூகத்தில் தமிழ் வழி வழிபாட்டை ஊக்குவிக்கட்டும்.

உமறு புலவர் போல சுத்த தமிழுக்கு மாறட்டும்.

ஒரு அரைமணி நேரம் அவர் ஆங்கிலமும் கலக்கா சுத்த தமிழில் பேசட்டும் அதன் பின்பே அவருக்கு “டமிழனங்கு” பற்றி பேசும் தகுதி இருப்பதாக பொருள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here