பிராமண சமூகம் இருக்கும் வரை இந்துமதம் வீழாது, இந்து மதத்தை வேரறுத்து சாய்க்க அது பன்னெடுங்காலமாக ஆதரித்துவரும் பிராமண சமூகத்தை சரிக்க வேண்டும் என்பது போர்ச்சுகீசியர் 16ம் நூற்றாண்டில் தொடங்கிவைத்த விஷம காரியம்.
அது பிராமணர் பொல்லாதவர், பிராமணர் கொடுமையானவர்கள் என பல வகையில் திரிக்கபட்டு இந்தியா முழுக்க பரப்பபட்டது, பரங்கி மலையில் தோமாவினை கொன்றவன் பிராமணன் எனும் அளவில் கடும் பொய்கள் கட்டவிழ்க்கபட்டிருந்தன.
அந்த பொய்யும் புரட்டும் 19ம் நூற்றாண்டில் பெருக்கெடுத்து நச்சு ஆறாக ஓடின, பிரிட்டிஷார் அதை அரசியலாக்க அனுமதித்தனர், நிலமை இன்னும் மோசமாயிற்று.
ஆப்கானிய சுல்தானின் இளவரசனை அதாவது கைபர் போலன் வழியாக இங்கு வந்த சுல்தானிய வாரிசுகளை அருகில் வைத்து கொண்டே பிராமணர்கள் கைபர் வழியாக வந்த வந்தேறிகள் என சொல்லும் காமெடிகளெல்லாம் அரங்கேறின.
ஆம், தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 100 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம்.
எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள், பிராமணன் ஒழிந்தால் தமிழ் வாழும்.
ஆரியர், திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும்.
பூரியர் இப்படி எல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, சிங்களனை விரட்டுவது, வடநாட்டு மக்களை, கன்னடனை, தெலுங்கனை, மலையாளியினை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.
பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.
ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ஹி என சென்றுவிடுவார்கள்.
தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள்.
சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் தமிழுக்கு ஆற்றியதொண்டும் உண்டு, மதம் பரப்ப அதனை மிக சுத்தமாக அவர்கள் செய்தனர்.
பிராமணர்களில் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.
தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.
பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?
தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல.
உச்சமாக ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்கலையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.
அவர் காலத்தில்தான் காகித அச்சடிப்பு கலாச்சாரம் இங்கு வந்தது, வெள்ளையர் பைபிள் முதலானவற்றை அச்சடித்தனர், கொஞ்சமும் தயங்காமல் தமிழ் வாழ, தமிழுக்கு எதிர்காலம் கிடைக்க, தமிழ் செழிக்க அவற்றை அச்சில் ஏற்றும் பெரும் பணிக்கு வந்தார் உ.வே.ச
இவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.
அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில், மடங்களில் சில புலவர் வீடுகளில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும்விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.
சுவடிதேடி ஊராய் கால் தேய நடந்தும் மாட்டுவண்டியில் சென்றும் சேகரித்துத் தமிழைமீட்டவர்.
100 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000 மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.
தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.
இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.
ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.
அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.
அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, ஒளவையுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.
எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.
இன்று இணையம் வரை தமிழின் சங்ககால இலக்கியங்கள் எல்லாம் நிரம்ப கிடக்கின்றன என்றால் அதற்கு உ.வே.சாவின் உழைப்பே மகா முக்கிய காரணம்.
தமிழ் செம்மொழி அடையாளம் பெற, அதன் பெருமை வாய்ந்த இலக்கியங்கள் எல்லாம் அச்சில் இருந்தது மகா முக்கிய காரணம்.
அதன் காரணகர்த்தா நிச்சயம் உவேசா
பிராமணர்களில் இவரைபோன்ற மாமனிதர்களும் தமிழறிஞர்களும் நிச்சயம் உண்டு.
அந்த தமிழ் முப்பாட்டனை அவர் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வதில் தமிழனாய் பெருமை அடைகின்றோம்.
பாரதி வாக்கினில் அவரை போற்றுவோம் ,ஆம் இப்பாடல் உ.வே சாமிநாதய்யரை வாழ்த்தி, அவரின் தொண்டுகளுக்கு மகா அடையாளமாக , சாட்சியாக மகாகவி பாரதியால் அன்றே பாடபட்டது.
உ.வே.சா நினைவு நாளில் அதனைவிட நல்ல அஞ்சலி இருக்க முடியாது…
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
‘நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
ஆம், உ.வே.சா எனும் தலைமகனுக்கு ஒரு நாளும் இறப்பில்லை, அவரின் பணி தமிழ் உள்ளளவும் துலங்கிகொண்டே இருக்கும்