தமிழ் ஆண்டுகள் வேறா?

தமிழின் 60 வருடங்களின் பெயர்கள் தமிழ் மொழியில் இல்லை என்பதுதான் சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக ஏற்கத் தயங்குவோரின் முதல் வாதமாக எழுகிறது.

இதன் காரணமாகவே பாரதிதாசன் முதற்கொண்டு சித்திரையை ஆண்டின் முதல் மாதமாக ஏற்காததற்கு இந்த ஆண்டுப்பெயர்களும் அதற்கு காரணமாக சிலர் பரப்பும் ஆபாச புராணக் கதைகளும்தான்.

ஆனால் இந்த ஆபாச கதைகளுக்கு ஆதாரமாக இவர்கள் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி என்ற நூலானது அறுபது வருடக் கணக்கைக் காட்டும் ஜோதிடப் புத்தகமும் இல்லை. புராணப் புத்தகமும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்…!

மாறாக அது ஹேமச்சந்திர சூரி என்னும் சமண முனியால் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நிகண்டு வகையிலான ஒரு அகராதியாகும். ஒரு அகராதி அல்லது நிகண்டு என்பது, பதப் பொருளைத் தருவது, அதாவது சிறப்புப் பொருள் ஏதேனும் இருந்தால், அதன் மூலத்திலிருந்தும், மூலத்தை மேற்கோளிட்டுவதாகும். ஆனால் அபிதான சிந்தாமணி என்னும் இலக்கிய நூலானது 1910 ல் முதல் பதிப்பாக ஆ.சிங்காரவேலு முதலியார் என்பவரால் பதிப்பிக்கப்பட்டது. அப்போது இந்த ஆபாச கதை அந்த நூலில் இல்லை.

அவரது மகனால் மீண்டும் 1934 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. அதாவது 17 ஆம் நூற்றாண்டுக்குப் பின்தான் இக்கதை எழுதப்படுகிறது. அது 1934 இல்தான் அனைவருக்கும் சொல்லப்படுகிறது…!ஆனால் இந்த ஆண்டுப்பெயர்களை கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞரான வராகமிகிரர் எழுதிய “பிருகத் ஜாதகம்” என்னும் நூலில் இந்த 60 ஆண்டுப் பெயர்களின் விபரங்கள் உள்ளன. அதோடு சித்தர் போகரின் சீடர் புலிப்பாணி எழுதிய புலிப்பாணி ஜோதிடத்திலும், இடைக்காட்டு சித்தர் எழுதிய வருடாதி வெண்பா என்ற நூலில் 60 ஆண்டுகள் பற்றிய குறிப்புகள் மிகத்தெளிவாக உள்ளன.

உதாரணமாக,”சாருவரி யாண்டதனிற் சாதிபதி நெட்டுமே தீர்மறு நோயாற் றிரிவார்கள் – மாரியில்லை பூமிவிளை வில்லாமற் புத்திரரு மற்றவரும் ஏமமின்றிச் சாவா ரியம்பு”- வருடாதி வெண்பா.பொருள் : சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து செயல் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள் மழை இருக்காது பயிர்கள் விளைச்சல் இருக்காது மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது மக்கள் மடிவார்கள் அனேகம் பேர்கள் இறந்து போவார்கள்.

“மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே மன்னவரால்சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற் காற்றுமிகும் கானப்பொருள் குறையுங் காண்”- வருடாதி வெண்பா.பொருள்: இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.

பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள் சேதமடைந்து குறையலாம்.

மேற்கூறிய இரு பாடல்களிலும் சார்வரி, மன்மத என்ற ஆண்டுப்பெயர்கள் கூறிப்பிடப்பட்டுள்ளதைப்போல, மீதமுள்ள 58 ஆண்டுகளின் பெயர்களையும் அந்த ஆண்டுகளின் நன்மை தீமைகளையும் அழகாக எடுத்துரைத்துள்ளார்.

பிரபல வருட பலன் : “ஆதி பிரபயத்தி அம்புலியின் மானுடர்க்குச் சோதனையாய்ச் சாவு ஏம்பர் தோன் முமே நீதில் சருப்பொளியு மஃமிகுந் தன்மாரி போக்கும் பருத்தியுப்பு மாமணக்கும் பாம்”விபவ வருட பலன் : “செய்ய விபயதனிற் செய்புவனத் தான்வினையும் பெய்யுமழை பெங்கும் பெருநமே-நிலமின் றி மிக்க கெம்பெறுவர் மேதினிபோர் வேந்தர்க்குத் தக்கயபி மானமுண்டு தாள்”

சுக்கில வருட பலன் : “தன்மைபெறுஞ் சச்கிலத்தி மூடெக்கு மேசெழிக்கும் புன்மைவியே நீங்கிப் பொருள்செரும் நன்மை இருக்கும் பாக்காக்கு மெங்குமழை போக்கும் பருத்தியுப்புர் தான்குறையும் பார்”

பிரமோகாத வருட பலன் :”வரும்பியோ அத வருடமழை பொஞ்சல் கரும்பு மிகப்பரிக்குங் கண்டாய்-திரும்பப்பயமுண்டு பூமி பளியாது வேந்தர்’ சுயமுண்ட தாயிகுப்பர் என்கு”

பிரசோற்பத்தி வருட பலன் :”நய்யபிர சோற்பகியிற் றோன்றுமே ஈற்காலம் பெய்ய பழையதிகம் பேருழவாம்-வையாத்தில் உள்ளவனாச் சாதி ருயிர்தழைத்து வாழ் திருப்பர் கள்ளமில்லை யென்றே கோண்”

இவ்வாறு அனைத்து வருடப்பெயர்களையும் பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடனார் எடுத்தாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு சோழர்களின் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர்களின் கல்வெட்டுக்களிலும், இந்த 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன…!13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமண சமயத்தைச் சார்ந்த மயிலைநாதர் என்பவர் தமிழ் இலக்கண நூலான நன்னூலுக்கு விளக்க உரை எழுதுகிறார்.

நன்னூலின் 273 ஆவது வடமொழி குறித்த சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதும்போது வடமொழியானது தமிழுக்கு அந்நியமானது என்று கருதுவது அறிவுக்கு ஒவ்வாதது என்று விளக்க உரை எழுதியிருப்பார்.

அதோடு 1000 ஆண்டு பழமையான சோழர்களின் செப்பேடுகள் இப்படி ஒரு வசனத்துடனேயே ஆரம்பிக்கும்.”ஸ்ரீமத் சந்ரந்த்யதேரேவ சோளம்ஸ ஸ்ரீகாமணே| சாஸனம் சோளபூபர்த்து பரகேசரி வர்ம்மண||”

ஆனால் இன்று வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்று கூச்சலிடுவோர் அக்காலத்தில் இருந்திருந்தால் பரகேசி வர்மன்கிட்டயே போய் ஏன்டா ஆரிய பார்ப்பன வந்தேறியே இதெல்லாம் தமிழா என்று கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதுமட்டுமல்லாது மூவேந்தர்களின் செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகளிலும் வடமொழி முதன்மை பெற்றிருக்கும் என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.இன்றைய கர்நாடாக மாநிலத்தில் பொ.ஆ 1012 ஆம் ஆண்டிற்குரிய இராஜராஜனின் கல்வெட்டு ஒன்று உள்ளது.

தோராயமாக இன்றிலிருந்து 1000 ஆண்டுகளுக்கு முன்பு. அதுவும் நண்பர் கேட்ட காலத்திற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு.

இந்த கல்வெட்டில் இராஜராஜனின் ஆட்சியாண்டைக் குறிப்பிடும் போது,”ஸகவரிஷ 834 நெய பரிதாவிஸம்வத்ஸரகெ – ஸ்ரீராஜராஜ”(கல்வெட்டு தகவல்கள் – தொல்லியல் ஆய்வாளர் மா மாரிராஜன்)அதாவது “சகம் 834 பரிதாபி வருடம் உத்ராயண சங்கராந்தி நாள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் “பிரபவ” முதல் “அட்சய” வரை உள்ள தமிழ் வருடக் கணக்கு சோழர் காலத்திலும் பயன்பாட்டில் இருந்தது என்ற முடிவுக்கு வரலாம். இன்றிலிருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை வடமொழியையும் தமிழ் மொழியையும் நம் முன்னோர்கள் சமமாகத்தான் கருதினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகளை பதிய இயலும்.

ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்று புரளிகள் கிளப்புவதுபோல் சமஸ்கிருதம் தமிழுக்கு அந்நியம் என்று நம் முன்னோர்கள் கூறியதற்கு ஏதேனும் ஒரு சான்றை இவர்களால் பதிய இயலுமா?

இருப்பினும் இன்றைய சூழலில் வடமொழிப் பெயர்களை உங்களால் ஏற்க முடியவில்லை எனில் வட மொழி பெயர்களுக்கு நிகரான அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள் இதோ

1.பிரபவ – நற்றோன்றல் 2.விபவ – உயர்தோன்றல்3.சுக்கில – வெள்ளொளி4.பிரமோதூத – பேருவகை5.பிரசோத்பத்தி – மக்கட்செல்வம்6.ஆங்கீரச – அயல்முனி7.சிறிமுக – திருமுகம்8.பவ – தோற்றம்9.யுவ – இளமை10.தாது – மாழை11.ஈசுவர – ஈச்சுரம்12.வெகுதானிய – கூலவளம்13.பிரமாதி – முன்மை14.விக்ரம – நேர்நிரல்15.விச – விளைபயன்16.சித்திரபானு- ஓவியக்கதிர்17.சுபானு – நற்கதிர்18.தாரண- தாங்கெழில்19.பார்த்திப – நிலவரையன்20.விய – விரிமாண்பு21.சர்வசித்த – முற்றறிவு22.சர்வதாரி – முழுநிறைவு23.விரோதி – தீர்பகை24.விகிர்தி- வளமாற்றம்25.கர – செய்நேர்த்தி26.நந்தன – நற்குழவி27.விசய – உயர்வாகை28.சய – வாகை29.மன்மத – காதன்மை30.துன்முகி – வெம்முகம்31.ஏவிளம்பி – பொற்றடை32.விளம்பி – அட்டி33.விகாரி – எழில்மாறல்34.சார்வரி – வீறியெழல்35.பிலவ – கீழறை36.சுபகிருது – நற்செய்கை37.சோபகிருது – மங்கலம்38.குரோதி – பகைக்கேடு39.விசுவாவசு – உலகநிறைவு40.பராபவ – அருட்டோற்றம்41.பிலவங்க – நச்சுப்புழை42.கீலக – பிணைவிரகு43.சவுமிய – அழகு44.சாதாரண – பொதுநிலை45.விரோதி கிருது – இகல்வீறு46.பரிதாபி – கழிவிரக்கம்47.பிரமாதீச – நற்றலைமை48.ஆனந்த – பெருமகிழ்ச்சி49.இராட்சச – பெருமறம்50.நள – தாமரை51.பீங்கள – பொன்மை52.காளயுக்தி- கருமைவீச்சு53.சித்தார்த்தி – முன்னியமுடிதல்54.ரவுத்ரி- அழலி55.துன்மதி- கொடுமதி56.துந்துபி- பேரிகை57.உருத்ரோத்காரி – ஒடுங்கி58.இரக்தாட்சி- செம்மை59.குரோதன்- எதிரேற்றம்60.அட்சய – வளங்கலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here